CATEGORIES
فئات
வேல் தோன்றிய வரலாறு
தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்ற ஆயுதமாக இருப்பது வேலாயுதமாகும். அது சிவபெருமானைப்போலவே உலகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன. அவற்றின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே காணலாம்.
வேல் தந்த ஆறுகள்
தைப்பூசம் 28-1-2021
வேல் குத்திக்கொள்ளுதல்
தென்னகத்து மக்கள் தங்களுடைய சமய வாழ்வில் கடுமையான நேர்த்திக் கடன்களை நேர்ந்து கொண்டு நிறைவேற்றுகின்றனர். சில சமயம் அவை அஞ்சத் தக்கவைகளாகவும் கடுமைமிக்க வைகளாகவும் உள்ளன.
பஞ்சபாண்டவ சூட்சுமம்
இது எப்படி? சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று இது. திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தார். அனைவருக்கும் தெரிந்ததுதான் இது.
நால்வர் கொண்டாடும் மகர சங்கராந்திப் பெருவிழா
நம் பூமிப் பந்திலிருந்து சூரியனின் பயண கதியை ஆண்டு முழுதும் நோக்குவோ மாயின் தை மாதம் முதல் நாளில் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பும் கதிரவன் ஆடிமாதம் முதல் நாளன்று வடமுனை சென்று தெற்கு நோக்கித்திரும்பிப் பயணம் செய்து மீண்டும் தை முதல் நாளில் தென் முனையைத் தொடுவான்.
வேலை வழிபடுவதே வேலை
வேல் எடுத்தல் (வேல் நடுதல்)
பெண்டிர் சிறப்பு!
சமுதாயத்தில் எல்லாத் துறையிலும் சிறப்படைகிறோம். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக உழைக்கிறோம். ஆனால்... இன்னும் பெண் குழந்தை முதற் குழந்தை என்றால் பெண்ணா.... ஆ என அஞ்சுகின்ற நிலை தவறிய மாந்தரும் உண்டு. உண்மையில் பெண் என்பவள் ஜகத்தை நிர்வாகிக்கும் தேவதை.
சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!
ஓவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறு நாள் சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்ற திருப்பதியில் உள்ள திருமணி மாடக்கோவில் என்னும் திவ்ய தேசத்தில் பெரும் விழா நடக்கும்.
என்னை நமனும் துரத்துவானோ!
உடலானது தனக்குத் தேவையான பசி, தூக்கம் போன்ற உணர்வின் வழியே உயிரைச் செலுத்தும் பண்புடையது.
ஜெபமாலை தந்த சத்குருநாதா
அருணகிரிநாதரின் க்ஷேத்திர கோவைப் பாடலில் பதினெட்டாவதாகக் குறிப் பிடப்பட்டுள்ள திருப்புகழ்த் திருத்தலம் ஆவினன்குடி. நக்கீரர் குறிப்பிட்டுள்ள ஆற்றுப்படைத் தலங்களுள் இது மூன்றாவதாகும்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
313. நஹுஷாய நமஹ (Nahushaaya namaha) (திருநாமங்கள் 301 முதல் 314 வரை ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)
சுவாமி ராமானந்தர்
இத்தகைய அருமையான சீடரின் குருதான் சுவாமி ராமானந்தர்! பழைமையான வைஷ்ணவ சம்பிரதாயத்தை அனுஷ்டித்து வந்த அந்தணர் குடும்பத்தில் பிறந்து, வேதங் களையும் சாஸ்திரங்களையும் இள இளமையிலேயே கற்றவர். மகாஞானியாக அவர் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் போதித்து வந்தார்.
சூரிய பகவான்
சூரிய பகவான் வேத காலம் முதற்கொண்டே கண்கண்ட தெய்வமாகப் போற்றப்பட்டு வருபவர். தாவரங்கள், சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் வாழ்வளித்துக் காப்ப வர் அவர். பருவ காலங்கள், தட்பவெப்ப நிலை மாற்றம் எல்லாம் அவரால்தான் ஏற்படுகின்றன. உண்மையில் பிரபஞ்ச வாழ்வின் ஆதாரமே சூரிய பகவான்தான்.
நோயின்றி நூறாண்டு வாழ்...
(ஹெக்டர் கார்ஸியா மற்றும் ஃப்ரான் ஸெஸ்க் மிரால்ஸ் எழுதிய இகிகாய் (IKIGAI) என்ற நூலினைத் தழுவியது.)
ஆன்மிக சாதனைகளில் ஆர்வம் கொள்!
1. நீ இறைவனிடம் வலிமை, ஞானம், வைராக்கியம் ஆகியவற்றிற்காகப் பிரார்த்தனை செய்.
சிந்தனைச் சிற்பியின் சின்னம்
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
பாமரர்களுக்குக் கல்வி அளிப்பது பற்றிய சுவாமி விவேகானந்தரின் திட்டத்தை 1. தத்துவார்த்தம் 2. செயல் முறை ஆகிய இரு கருத்துகளின் மூலம் அறியலாம்.
அய்யர் மலை
(பிரபல ஓவியர் திரு. பத்மவாசன் தென்னிந்தியாவில் பலரும் அறிந்திராத வடஇந்தியாவில் பிரசித்தியான சந்தோஷி மாதாவின் அவதாரமும் அவர் பிள்ளையாரின் மகள் என்ற தகவலும் புராணக் கதையிலிருந்து தருகிறார். -ஆர்)
அன்னையின் பஞ்சதவம்
அன்னை ஸ்ரீசாரதாதேவி தன் வாழ்வில் கடைப்பிடித்த சாதாரண விஷயங்களில் பஞ்சதவமும் ஒன்று என்று நினைத்தால் அது தவறு. அவரது வாழ்வின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் ஆழ்ந்த பொருள் பொதிந் தவை. எனவே, ஐந்து அக்னிகளின் நடுவில் நிகழ்த்தப்படும் பஞ்சதவம் புராண, சமய கண்ணோட்டத்தில் பார்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பகவானின் கருணை மகத்துவம்!
முன்னொரு காலத்தில் போதனா என்ற பரம் பக்தர் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தார். கல்வியில் சிறந்த அவர் நாள்தோறும் பகவானின் சரித்திரத்தைப் பணிவுடனும் பக்திப் பரவசத்துடனும் பிரவசனம் செய்வது வழக்கம். அவரது சொற் பொழிவை பாமரர்களும் படித்தவர்களும் விரும்பிக் கேட்பார்கள்.
மகரசங்கராந்தியில் கங்கா ஸ்நானம்!
மேற்கு வங்காளம், பர்காலி மாவட்டத்தில் உள்ளது கங்காசாகர் தீவு. இது, 43 கிராமங்களையும் சுமார் 1,75,000 மக்கள் தொகையும் கொண்ட பகுதி! சுந்தர்பன் காடுகள் சார்ந்த நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும், இங்கு புலிகளோ தண்ணீரில் மரங்களோ கிடையாது. கங்காசாகர் கடலில்தான், மகர சங்கராந்தியன்று கங்கை வந்து கலந்ததாக ஐதீகம்!
அணையாத ஞான தீபம்!
பூந்தமல்லி, கண் பார்வையற்றோர் பள்ளியாசிரியர் ஒருவர், சிவாஸ்தானத்தில் மகாசுவாமிகள் தங்கி யிருந்தபோது வந்து தரிசனம் செய்தார்.
ஆயர்பாடி மாளிகையில்...
புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதனுக்கு அகந்தை தலைதூக்கும். அப்படியான கணத்தில் தன்னைத் தணிக்கை செய்து கொள்பவனே சிறக்கிறான். மண்ணில் பிறவியென்பது கடல் போல் தோற்றமளித்தாலும், அது சிறுபொழுதுக்கடன். சட்டென்று தீர்ந்து விடுகிற குமிழிக் காற்று.
அனுமன் சாலீஸா!
அனுமன் ஜயந்தியன்று ஆஞ்சனேயரை துதிக்கும் வகையில் சாலா பாராயணம் செய்வது சகல நலன்களையும் பெற்றுத்தரும். அன்று அதிகாலை நீராடி, தூய உள்ளத்துடன் ஆஞ்சனேயரை யாணிக்க வேண்டும்.
சொந்த வீடு அருளும் ஸ்ரீ பூலோகநாதர்!
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பூலோகநாதர் திருக்கோயில். ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் இக்கோயில், பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக விளங்குகிறது.
கந்த சஷ்டி விரதம் தொடங்கிய திருக்கோயில்!
முருகப்பெருமானை வழிபடும் விரதங்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி விரதம். இதை முதன்முதலில் பாம்பன் சுவாமிகள் தொடங்கிய தலம், பூலோக கயிலாயமாக விளங்கும் தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்துக்குக் கிழக்கே எழில் கொஞ்சும் கிராமமான பின்னத்தூர் ஆகும்.
ராமாயண பாராயண பலன்
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான். அவனை நல்ல பண்புகளோடு வளர்த்தார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவரது மகன் ஒரு கோர விபத்தில் சிக்கி இறந்து விட நிலைகுலைந்து போனார் அந்த கோடீஸ்வரர்.
லட்ச தீபத் திருவிழா!
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராமராஜ்யா ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஸ்ரவணம் அன்று (திருவோணம் நட்சத்திரம்) பசு நெய் கொண்டு ஏராளமான தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இது மிகவும் வியப்பூட்டுகிற, சிறப்புக்குரிய நிகழ்வாகும்!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அனுக்ரஹபாஷணம்
அருவமாய் அருளும் மா ஆகர்ஷணி தேவி!
ஜாம்ஷெட்பூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் சரைகேலா-கர்சாவான் தேசிய நெடுஞ்சாலையில் சரைகேலா டவுனிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது பந்திராம் கிராமம்.