CATEGORIES
فئات
காக்கும் கந்தன் கவசம்!
சொற்கள் மிக வலிமை வாய்ந்தவை. 'அ'கர 'உ'கர 'ம'கார எழுத்துகளின் சேர்க்கையான 'ஓம்' எனும் சொல்லின் பேராற்றல் ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று. நவீன அறிவியலாரும் இதனைக் குறித்து ஆராய்ந்து வியக்கிறார்கள். பேரண்டம் தோன்றிய போது உண்டான ஓசை'ஓம்' எனப்படுகிறது.
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார். நீர்வளம், நிலவளம் நிறைந்த இந்த கிராமத்தில் அன்னை ஆதிபராசக்தியான அமிர்தவல்லி அம்பாளும், பரம் பொருளான இறைவன் அமிர்தகடேஸ்வரரும் விரும்பிக் குடிகொண்டுள்ளனர். இக்கோவிலைப் புதுப்பித்து, 12-2-2020 அன்று மகாகும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையாக அறநிலையத்துறை அனுமதியுடன், காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் ஆதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தநத்தம் கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து நடத்தியுள்ளனர்.
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி
ராமரும் அனுமனும்!
மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில்தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். துன்பமென்பது சொல்லிக்கொண்டு வராது.
கடற்கரையாண்டி - மகாகவி பாரதியார்
ஒரு நாள், நடுப்பகல் நேரத் திலே, நான் வேதபுரத்தில் கடற் கரை மணலின்மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்த படியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே ஸூர்யன், மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப் போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின.
மகாகணபதிம் மனஸா ஸ்மராமி
மகாகணபதியின் நவராத்திரி பண்டிகை காலமே ஸ்ரீவிநாயக சதுர்த்தி. 'நவ' எனப்படும் ஒன்பது என்ற எண் முழுமைக்குச் சின்னம் என்பதால் எந்த ஒரு தேவதையின் சக்தியையும் பூரணமாக கிரகிப்பதற்காக ஒன்பது நாட்கள் உற்சவம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
தேசியமும் புதிய கல்விக் கொள்கையும்!
அகண்ட பாரதம் எனும் நம் இந்திய மண்ணில்தான் வேத காலத்தைத் தொடர்ந்து வேதங்களைத் தழுவிய பிரமாணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் போன்றவை மூலம் படைப்புகள் தோன்றி வளர்ந்தன.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்-12
உலக மதங்களின் நல்லிணக்கம் பற்றிய சுவாமிஜியின் கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்
ஆவுரிஞ்சு கல்!
ஆதீண்டு குற்றி என்னும் சொற்றொடர் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளின் அருகே நிழல்மரத் தடியில் நடப்பட்ட பருமனான செங்குத்துக்கல் ஆகும். நீர் குடிக்க வரும் பசுக்கள் முதலான கால்நடைகள் அந்தக் கல்லில் உடம்பினைத் தேய்த்து உரசி இன்புறுமாம்.
புத்ர தோஷம் தீர்க்கும் நவநீதக் கிருஷ்ணன்!
'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. குழந்தை இல்லாதவர்களுக்கு சயன தோஷம், புத்திர தோஷம், சுக்கிர தோஷம், நாக தோஷம் போன்ற பல தோஷங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இப்படிப்பட்ட தோஷங்கள் விலக அருமருந்தாகத் திகழ்வது தமிழகத்தின் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை மாதவிவனேஸ்வரர் மற்றும் கர்நாடகாவில் உள்ள தொட்ட மளூர் ஸ்ரீ நவநீதக்கிருஷ்ணன் திருக்கோயில்கள் ஆகும்.
கிரகக் கோளாறு போக்கும் கைவிடேலப்பர்!
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தென் பாதியில் அமைந்துள்ளது அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது இந்த சிவன் கோயில்.
மழைக்காலத்தில் மானசா தேவி வழிபாடு!
மேற்கு வங்காளத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டாலே, மானசா தேவி வழிபாடும் ஆரம்பமாகி விடும். இங்கே விவசாயிகளும், வியாபாரிகளும் மானசா தேவி வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
கலைச்சின்னமாக விளங்கும் கற்றளிக் கோயில்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கண்ணனூரில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில். கண்ணனூர் சிறிய ஊராக இருப்பினும் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையும், 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்றளிக் கோயிலைக் கொண்ட பெருமையும் உடைய இயற்கை எழில் சூழ்ந்த தலமாகத் திகழ்கிறது.
நேர்த்திக்கடன் திருநாள்!
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற, அந்தக் குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து, தேவர்களையும் மக்களையும் காக்க அவ தரித்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் வகையில் ஆடி கிருத்திகை விரதத் திருநாளாகக் கொண்டாடப்படு கிறது.
ஜனனி...ஜனனி...
ஒரு பாடல் தன்னைப் பெற்றுக்கொள்கிற வர்களை, அவர்களது மனதடி வேர் வரை ஊடுருவுகிறது. நோய்மை காலத்து செவிலியின் உபசரணை போல் அந்தப் பாடலின் வருடல் நிகழ்கிறது. மனசு சரியில்லை என்றால் கேட்க விரும்பும் பாடல் சரணடைவதற்கான வாசல்தான் இல்லையா?
கிளிக்கு வரம் கொடுத்த தேவேந்திரன்!
வேலைக்குச் சென்ற கணவனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் மனைவி. வீட்டில் இருக்கும் மாவைக்கொண்டு இருவருக்கும் உணவு தயாரித்து வைத்திருந்தாள். மொத்தம் 12 இட்லிகளை வார்க்கவே மாவு போதுமானதாக இருந்தது. அத்தனை இட்லிகளையுமா கணவன் சாப்பிடப்போகிறாள்? அவள் சாப்பிட்ட பின்னர் மிச்சமிருப்பதை நாம் சாப்பிட்டுக்கொள்ளலாம்' என எண்ணியிருந்தாள் அவள்.
தர்மம் தழைக்க வந்த தயாபரன்!
உலகில் எப்போதெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை சம்ஹரிக்கவும் பகவான் மஹாவிஷ்ணு அவதாரம் எடுக்கிறார். அப்படி, அதர்மத்தை அழிக்க பகவான் எடுத்த அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்.
ஸ்ரீ பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்
திருநாங்கூரின் 11 திவ்ய க்ஷேத்ரங்களில், பலாசவனம் என்றும் புரசங்காடு என்றும் அழைக்கப்படுகிறது திருப்பார்த்தன் பள்ளி திருத்தலம். இது சரித்திரப் புகழ் வாய்ந்த பூம்புகாருக்கு அருகில், நவக்கிரக க்ஷேத்ரங்களுள் புத பகவான் தலமான திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில், புனித நதியான காவிரியாற்றின் ஒரு பிரிவான மணிகர்ணிகா ஆற்றின் அருகாமையில் அமைந்திருக்கிறது.
வாசுகிக்கு வரம் தந்த இறைவன்!
நவக்கிரகங்களில் கடைசி கிரகமான கேது பகவான் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில். இறைவன் நாகநாத சுவாமி. இறைவி சௌந்தரநாயகி.
பனைத் துணையளவு அருளும் அம்மன்!
எனது கணவர் திருவக்கரை வக்ரகாளி அம்மனின் தீவிர பக்தர். இந்தக் கோயிலில் நடை பெறும் பௌர்ணமி பூஜையில் அடிக்கடி கலந்துகொள் வது அவரது வழக்கம்.
அறிவுக் கண்ணைத் திறந்த ஆசான்!
மணம் எதை விரும்புகிறதோ அதைப் பெற்றுத் தரும் என்பதைத்தான் வேதாத்திரி மஹரிஷி திரும்பத் திரும்ப சொல்லும் கருத்து. அது, அவரின் வாழ்க்கையில் அச்சுப் பிசகாமல் நடைபெற்றது.
கலாசார கட்டமைப்போடு அயோத்தி ஸ்ரீராமர் கோயில்!
அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தின் பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 5) நடைபெறுகிறது. இது தொடர்பாகவும், சமீபத்தில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, *ஸ்ரீராமர் ஒரு நேபாளி என்றும் தசரதர் ஆண்ட அயோத்தி நேபாள நாட்டில்தான் இருக்கிறது' என்று கூறியிருந்தார். இதுகுறித்து காஞ்சி சங்கராச்சார்யார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், "தீபம்' மின் இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...
அம்பாள் வதனம் அதிசயம்!
அம்பாளை கேசாதிபாதமாக வர்ணிக்கிறார் ஆதிசங்கரர். பலவகையான உவம உவமானங்களைக் காட்டி, அம்மாவின் பொற்பாதங்களில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறார். இவ்வாறு விவரித்துக்கொண்டே வரும்போது. அம்பாளின் உதடுகளைப் பற்றிக் கூறுவதற்குத் தக்க உவமை கிட்டாமல் தவிக்கிறார்.
தில்லைவாழ் அந்தணர்க்கும் அடியேன்!
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
தீப ஒளி ஜோதியே, சரணம்!
இந்தியாவில் கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி குருவாயூர். உலகப்புகழ் பெற்ற குரு வாயூர் கிருஷ்ணன் கோயில் இங்கு உள்ளது. நாளொன்றுக்கு தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயிலாக போற்றப்படுகிறது.
ராஜபோகங்கள் அருளும் ராஜகோபாலன்!
பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக் ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில் உருவாகியிருக்கிறது.
முதன்முதல் நரசிம்மர் தலம்
மூலவர் சௌம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் தல தீர்த்தங்களாக மகாமக தீர்த்தம், தேவபுஷ்கரணியைக் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருக்கோஷ்டியூர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
திருவாரூர்-தியாகராஜர் கோயில்-தூதுவளை கீரை-பாகற்காய் கூட்டு
கண்ணனும் கந்தனும்
இந்து மக்கள் பெரிதும் வழிபடும் இணையற்ற தெய்வங்களாக கண்ண பெருமானும், கந்த பெருமானும் விளங்குகிறார்கள்.