மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் கொல்கத்தாவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தியா எங்கும் கோப அலைகளை எழுப்பிய இந்தச் சம்பவம் நினைவிலிருந்து மறையும் முன்னே சென்னையில் ஒரு மருத்துவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.
இந்தச் சம்பவங்களுக்குப் பின்புலமாக மருத்துவர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் என்ன கருதுகிறார்கள்?
இந்திய மருத்துவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய இந்திய மருத்துவக் கழகம் (IMA - Indian Medical Association) 2021ல் இது தொடர்பாக ஓர் ஆய்வைச் செய்தது. அதில் 75 சதவீத மருத்துவர்கள் ஏதோ ஒருவிதமான வன்முறையை தினசரி சந்திக்க நேரிடுவதாகச் சொன்னது.
இந்த வன்முறைகள் உடல் ரீதியானது உட்பட வாய்ப்பேச்சு வரைக்கும் இருக்கும்.
அடுத்து இந்த 75 சதவீத வன்முறைகளில் சுமார் 68.33 சதவீத வன்முறைகள் நோயாளிகளின் உறவினர்களாலே நடத்தப்பட்டதாக இந்த ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது.
இது தவிர இன்னொரு லேட்டஸ்ட் ஆய்வும் அதிர்ச்சியான தகவல்களைத் தருகிறது.
அதே இந்திய மருத்துவக் கழகத்தின் கேரள கிளை இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியா முழுக்க இருந்து சுமார் 3885 மருத்துவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இதில் 60 சதவீதம் பெண் மருத்துவர்கள்.
இந்த ஆய்வில் 11 சதவீத மருத்துவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் மருத்துவ வளாகங்கள் முற்று முழுதாக பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்று கூறியிருக்கிறார்கள்.
சுமார் 24 சதவீத மருத்துவர்கள், மருத்துவமனை என்பது வன்முறை மட்டும் அல்லாது எல்லா விஷயத்திலுமே பாதுகாப்பானது அல்ல என கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
ஏன் மருத்துவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்... இதற்கான காரணங்கள் என்ன... என ஆய்வு செய்த கேரள அமைப்பு அதற்கான காரணத்தையும் பட்டியலிடுகிறது.
هذه القصة مأخوذة من طبعة 6-12-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 6-12-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி அடியெடுத்து வைத்துள்ளார்.
முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!
சூதாட்டம்போல் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதுவேதான். பாகுபலி' பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.
போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.
சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!
யெஸ். இப்படியொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, நிகழ்த்தப் போகிறது பிஎஸ்என்எல்.
நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்
மோடியின் ஆட்சிக் காலத்தில். அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சமீபத்தில் நாடாளுமன் றத்தில் அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!