ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor|July 01, 2024
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
சரஸ்
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்துகொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதும், அதற்கான மெனக்கெடல்கள் எவ்வளவு என்பதும் தெரியும்.

ஒரு கரு முட்டையும் ஒரு விந்தணுவும் இணைந்து கருத்தரித்து, அதன் பிறகு இரண்டாகப் பிரிவதால், ஒரே மரபணு அம்சத்துடன்கூடிய இரண்டு கருக்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் இரட்டையரை ‘ஐடென்டிகல் ட்வின்ஸ்’ (Identical Twins) என்கிறோம். ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளும் இதே வகையறாதான். இவற்றில் இரண்டு பிரிவினர் உள்ளனர். நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குடத்தை வைத்து இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

* `மோனோகோரியானிக் மோனோஅம்னியாட்டிக்’ (Monochorionic Monoamniotic Twins) இரட்டையர்கள் -  இருவரும் ஒரே நஞ்சுக்கொடியுடன், ஒரே பனிக்குடத்தில் இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.

* மோனோகோரியானிக்  டை-அம்னியாட்டிக் (Monochorionic Diamniotic Twins) இரட்டையர்கள் - நஞ்சுக்கொடி இருவருக்கும் ஒன்றுதான்.  ஆனால், பனிக்குடப்பைகள் இரண்டு இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

இரண்டு கரு முட்டைகளுடன், இரண்டு விந்தணுக்கள் சேர்ந்து, இரண்டு தனித்தனி கருக்களாக  வளரும் குழந்தைகள்,  ‘ஃபிரேட்டெர்னல் ட்வின்ஸ்’ (Fraternal Twins) எனப்படுவார்கள். அதாவது, ஒரே மாதிரி இல்லாத இரட்டையர்கள்.

கருவில், இந்தக் குழந்தைகளுக்குத் தனித்தனி நஞ்சுக்கொடிகள், இரண்டு பனிக்குடங்கள் இருக்கும். இருவருக்கும் ரத்த விநியோகம் தனித்தனியாக நடைபெறும். ஒரே கருவில் இருந்தாலும், இரண்டு குழந்தைகளும் தனித்தனி உலகத்தில் இருப்பார்கள். இப்படி உருவாகும் குழந்தைகளில், பெரும்பாலும் ஒரு குழந்தை ஆணாகவும், ஒரு குழந்தை பெண்ணாகவும்தான் இருப்பார்கள்.  இவர்களின் மரபணுக்களும் வித்தியாசமாகவே காணப்படும்.  

هذه القصة مأخوذة من طبعة July 01, 2024 من Kungumam Doctor.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 01, 2024 من Kungumam Doctor.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KUNGUMAM DOCTOR مشاهدة الكل
லைப்போமா அறிவோம்!
Kungumam Doctor

லைப்போமா அறிவோம்!

லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.

time-read
3 mins  |
July 01, 2024
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
Kungumam Doctor

சில்லுன்னு ஜஸ் தெரப்பி!

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.

time-read
1 min  |
July 01, 2024
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
Kungumam Doctor

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).

time-read
1 min  |
July 01, 2024
மாதுளையின் மருத்துவம்!
Kungumam Doctor

மாதுளையின் மருத்துவம்!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.

time-read
1 min  |
July 01, 2024
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
Kungumam Doctor

கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

time-read
1 min  |
July 01, 2024
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
Kungumam Doctor

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!

அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.

time-read
2 mins  |
July 01, 2024
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

time-read
5 mins  |
July 01, 2024
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
Kungumam Doctor

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.

time-read
2 mins  |
July 01, 2024
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

time-read
3 mins  |
July 01, 2024
கவனிக்கும் கலை
Kungumam Doctor

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.

time-read
3 mins  |
July 01, 2024