புங்குடு தீவு, கண்ணகி அம்மன் கோவிலருகே 1960களிலேயே ஒரு பெரும் மாநாடு போல 'சிலப்பதிகார விழா' நடத்தியவர். அந்த விழாவுக்கு சிறுவனான என்னையும் அழைத்துச் சென்றார் மாமா. அந்த விழாவில்தான் மூன்று பெரும் அறிஞர்களின் பேச்சைக் கேட்டேன். நான் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் பேசியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அந்த மூன்று தமிழறிஞர்கள்...'ம.பொ.சி' என பெரும் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானம் அவர்கள், சென்ற இடமெல்லாம் சிலப்பதிகார பெருமை பேசி 'சிலம்புச் செல்வர்' எனக் கொண்டாடப்பட்டவர். கி.வா.ஜகன்னாதன், தமிழுக்கு பல அற்புத படைப்புகளை ஆய்ந்து தந்தவர்.
பேராசிரியர் அ.ஞானசம்பந்தம், கம்பராமாயணத்தை ஆய்ந்துபல படைப்புகளைத் தந்தவர்.
ம.பொ.சி. அவர்களின் பேச்சைக் கேட்டு அதிசயித்துப்போன எனக்கு... அவர் யார்? கி.வா.ஜகன்னாதன் யார்?, பேராசிரியர் அ.ஞானசம்பந்தன் யார்? என்ற விவரங்கள் அப்போது தெரியாது.
தாய்நாட்டுக்கு வந்த பின்னர்தான்... அவர்களின் சாதனைகள், தமிழ்மொழிக்கு அவர்கள் ஆற்றிய அரிய தொண்டு, அவர்களின் அரிய படைப்புகள் பற்றி தெரிந்துகொண்டேன். எவ்வளவு உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
அதேபோல் யாழ்ப்பாண பகுதிக்கு வந்த கிருபானந்த வாரியார் என் தாய்மாமா ராஜசுந்தரம் வீட்டுக்கு வருவார். எங்கள் குடும்பத்து இலுப்பைத்தாள்
முருகன் கோவிலில் பிரசங்கம் செய்வார். அதைத் தவறாமல் கேட்பேன். வெவ்வேறு கோவில்களிலும் அவர் கதாகாலாட் சேபம் பண்ணுவார். அங்கெல்லாம் தவறாது போய் பிரசங்கம் கேட்பேன். அதேபோல் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வர கச்சேரி எங்கு நடந்தாலும் தவறாது ஆஜராகிவிடுவேன்.
தமிழ்நாட்டிலிருந்து என்.எஸ்.கே. நாடக மன்றம், டி.கே.எஸ்.நாடக மன்றம் போன்ற பிரபல நாடக மன்றங்கள் வந்து நடத்தும் அனைத்து நாடகங்களையும் தவறாது பார்த்துவிடுவேன். இதையெல்லாம் கவனித்துவந்த என் தந்தையார், தன்னோடு ஆசிரியராக பணியாற்றிய இலக்கிய எழுத்தாளர் குரும்பசிட்டி கனக.செந்தில் நாதனிடம் என்னை ஒப்படைத்து, இலக்கியம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். அவரும் அருமையாக கற்றுக்கொடுத்தார்.
அதன்பின் நான் எழுதிய முதல் கட்டுரை 'துஞ்சலும் இலர்'. இது பிரசுர மானது...நல்ல வரவேற்பும் பெற்றது.
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சீமான் மாறிவிட்டார்
நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
கொலையா, தற்கொலையா?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ்
துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!