CATEGORIES
فئات
சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென்று எந்தக் கடவுளும் கேட்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு
கேரள அரசு கரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேருக்கு கரோனா பாதிப்பு
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் அதிகரித்து வரும் கரோனாவால் ஒரே நாளில் 3,177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
20 ஆயிரம் பேருக்கு வேலைத் திட்டம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு
மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டுள்ள பேடிஎம் நிறுவனம், 20 ஆயிரத்திற்கும் அதிகமான கள விற்பனை அதிகாரிகளை நியமிக்க உள்ளது.
பிச்சை எடுப்பது சமூக-பொருளாதார பிரச்சினை பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
வறுமைதான் பிச்சை எடுக்க காரணம் பொது இடங்களிலும், டிராபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தர விடமுடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணி: யார் தலைமை? பிரச்சினையில்லை! மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணி யார் தலைமை என்பதில் பிரச்சினையில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறினார்.
இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2 வரை நீட்டிப்பு யுஏஇ அறிவிப்பு
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக அய்க்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக, துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மய்யமாக திகழ்கிறது.
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.
10 ஆயிரம் வாகனங்கள் விற்பனை டாடா மோட்டார் சாதனை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரமாவது புதிய 'சபாரி காரை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதிர்ச்சித் தகவல்: நூற்றுக்கணக்கான குழந்தைகள் கரோனா தொற்றால் பலி
உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள டெல்டா வகை கரோனா வைரஸ் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் வரும் செப்டம்பரில் கரோனா 3ஆவது அலை தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
93 விழுக்காடு பாதுகாப்பான கோவிஷீல்டு தடுப்பூசி
இந்த தடுப்பூசி கரோனா வைரசுக்கு எதிராக 93 சதவீதம் பாதுகாப்பானது 98 சதவீதம் இறப்பினை குறைக்கிறது என தெரிய வந்துள்ளது. இது ஆயுதப்படைகள் மருத்துவ கல்லூரி நடத்திய ஆய்வின் முடிவு ஆகும்.
15 கி.மீ. நடந்து சென்று மலைவாழ் மக்களிடம் குறைகேட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தேன்கனிகனிக்கோட்டை அருகே யானைகள் நடமாடும் வனப்பகுதியில் 15 கி.மீ. நடந்து சென்று மலை கிராம மக்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறைகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் உத்தரவுப்படி மக்களை தேடி அதிகாரிகளுடன் திட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறிதுணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கிருட்டினகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடகரை மலை கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11.43 அடியாக உயர்வு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கருநாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணாராஜாசேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஈரானில் தண்ணீர் பற்றாக்குறைப் போராட்டம் வன்முறை, துப்பாக்கிச் சூடு அய்.நா. கண்டனம்
ஈரானின் 31 மாகாணங்களில் அதிக வெப்பமான மாகாணம் குஜெஸ்தான். இந்த மாகாணத்தில் தற்போது , வெயில் வாட்டிவதைத்து வரும் நிலையில் அங்கு , தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் இணைந்தனர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், பல்வேறு கட்சி களைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று (26.7.2021) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு டிராக்டரில் நாடாளுமன்றம் சென்ற ராகுல்காந்தி
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் சென்றார். டிராக்டரை தானே ஓட்டி வந்தார்.
ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பதவி
ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டு நியமித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டார்.
பெகாசஸ் உளவு விவகாரம்; இஸ்ரேலுக்கு அழுத்தம் தரும் பிரான்ஸ்
இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. தயாரித்த 'பெகாசஸ் ஸ்பை வேர்' என்கிற மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் 50,000 அலைபேசிகள் உளவுபார்க்கப்பட்டதாகவும், உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் இதில் இலக்காக வைக்கப்பட்டதாகவும் கடந்த வாரம் செய்தி வெளியானது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சித் திட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (26.7.2020 தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1,580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை இழந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் வேலை இழந்த என்யூஎல்எம் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் மூன்றாவது அலை குறித்து அறுதியிட்டுக் கூற முடியாது : எய்ம்ஸ் தலைவர்
இந்தியாவில் மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்பது குறித்து எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா சில கணிப்புகளை முன் வைத்துள்ளார்.
குளிர்காலத்தில் ஒரு புதிய கரோனா மாறுபாடு உருவாகும்: பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை
கடந்த 2019, 19ஆம் ஆண்டு இறுதியில் உருவான கரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ஆஸ்திரேலியாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
ஆஸ்திரேலியாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்
மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் முறையாக பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்
கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ள வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த்த தடுப்பூசியே முக்கிய கருவி என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊதியம் ரூ.300 ஆக உயர்த்த பரிசீலனை
அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தகவல்.
கரோனாவால் பெற்றோரை இழந்த 1.19 லட்சம் குழந்தைகள்
கரோனாவால் இந்தியாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை
அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் அறுவடைப் பணிக்கான வாகன தொழிற்சாலை தொடக்கம்
விவசாயிகளின் மாறி வரும் தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற சிறந்த தீர்வுகளை வழங்குவதே சோனாலிகாகுழுமத்தின் நோக்கம். இந்த இலக்கோடு, சிறிய அளவில் தனது சேவையைத் தொடங் கிய இக்குழுமம், தற்போது பஞ்சாப் மாநில எல்லைக்கு அருகில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் அம்ப் என்ற நகரத்தில் தனது அடுத்த புதிய உற்பத்தித் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது சுமார் ரூ. 200 கோடி ரூபாய் முத லீட்டில், 29 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இவ்வளாகத்தில் தற்போது அறுவடைப் பணிகளையும் செய்யும் திறன் கொண்ட அதி நவீன டிராக்டர் உற்பத்திப்பணிகள் தொடங்கியுள்ளன.