CATEGORIES
فئات
முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்
கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்த முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
திருச்செந்தூரில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது.
35 ஆண்டாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்வரால் நிம்மதி
விடுவிப்பு ஆணை பெற்றவர்கள் நெகிழ்ச்சி
அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
டெல்லியில் வரும் 13ம் தேதி தர்ணா
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நடிகை கஸ்தூரி கைதாகிறார்
சம்மன் அனுப்பும் பளரியில் போலீசார் தீவிரம்
காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு
வட மாநிலங்களில் அறுவடை காலம் முடிந்ததால், கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்
கோவையில் ரூ300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்.
டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்
அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிபராக உள்ள டிரம்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 8.2 கோடி பேர் தபால் மூலமாகவும் நேரிலும் தேர்தல் நாளுக்கு முன்பாகவே தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தேர்தல் நாளான நேற்று முன்தினமும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். புளோரிடாவில் டிரம்ப் தனது வாக்கை பதிவு செய்தார். கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவில் தபால் மூலம் முன்கூட்டியே வாக்கை செலுத்தியிருந்தார். இந்திய நேரப்படி வாக்குப்பதிவு நேற்று காலை முடிந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இம்முறை கமலா ஹாரிஸ் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பல கருத்துக்கணிப்புகள் கூறியிருந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் கட்சி முன்னிலை வகித்தது. கமலா ஹாரிஸ் கடும் போட்டி தந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஒருமுறை கூட டிரம்ப்பை முந்தவில்லை. அதிபரை முடிவு செய்யும் யுத்தகளமான 7 மாகாணங்களில் கூட டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார். கலிபோர்னியா, இல்லியானிஸ், நியூயார்க், டெலாவர், விர்ஜினியா போன்ற இடங்களில் கமலா வெற்றி பெற்றாலும், முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா, வட கரோலினா, ஜார்ஜியா, விஸ்கான்சின் போன்றவற்றை டிரம்ப் கைப்பற்றினார். மொத்தம் 50 மாகாணங்களில் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் வெற்றி பெற 270 இடங்களை கைப்பற்ற வேண்டும். இதில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெரும்பான்மை இடங்களை டிரம்ப் கட்சி எட்டியது. இதன் மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஏற்கனவே கடந்த 2016 முதல் 2021 வரை அதிபராக இருந்த டிரம்ப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2வது முறையாக அதிபராக உள்ளார். மொத்தம் 501 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், டிரம்ப் 277 இடங்களையும், கமலா ஹாரிஸ் 224 இடங்களையும் கைப்பற்றினர். டிரம்பை விட வெறும் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து புளோரிடாவில் தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ‘‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டது’’ என உற்சாகமாக பேசினார். மீண்டும் அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப்புக்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், துருக்கி அதிபர் எர்டோகன், கத்தாரின் அமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, எகிப்து அதிபர் அப்தேல் பத்தா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயஹான் சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சீனா, நேட்டோ படைகளும் டிரம்ப்புக்கு வாழ்த்து கூறின. தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக டிரம்பும், துணை அதிபராக ஜே.டி.வான்சும் பதவி ஏற்க உள்ளனர். மேற்கு ஆசியாவிலும், ரஷ்யா, உக்ரைன் இடையேயும் போர் சூழலுக்கு மத்தியில் மீண்டும் டிரம்ப் அதிபராகி இருப்பது, அமெரிக்காவிலும், உலக அளவிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ‘இனி பொற்கால ஆட்சி’ அதிபராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புளோரிடாவில் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் மேடை ஏறி, உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டிரம்ப் பேசியதாவது: இனிவரும் காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். எங்கள் பணி, செயல்பாடு அப்படி இருக்கும். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த என் மனைவி மெலானியா, துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் மற்றும் என் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி, யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம். மீண்டும் வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி’’ என்றார். மேலும், டிரம்ப்பை ஆதரித்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு நன்றி கூறிய டிரம்ப், ‘‘அவர் ஒரு ஜீனியஸ். நட்சத்திர நாயகன். அவரை நாம் பாதுகாக்க வேண்டும்’’ என்றார். வெற்றி பெற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்று அசத்தினர். ஜனநாயக கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். தற்போது, செனட் சபை உறுப்பினராக இருக்கும் இவர், ஒபாமா அதிபராக இருந்த போது, அவரின் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்சில் களமிறங்கிய ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். இவர் 5வது முறையாக தேர்வாகி உள்ளார். கலிபோர்னியாவில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ரோ கண்ணா வெற்றி பெற்றார். ஏற்கனவே இவர் எம்பியாக இருந்தவர். வாஷிங்டனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிரமிளா ஜெயபால், 5வது முறையாக எம்பி ஆனார். மிச்சிகனில் ஜனநாயக கட்சியின் ஸ்ரீதனேதார், கலிபோர்னியாவில் அமி பெரா, நியூயார்க்கில் ஜெரேமி கூனே ஆகியோர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார்.
கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம்
கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான நேற்று திருத்தணி முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஆவடி - சென்ட்ரல் புதிய ரயில் சேவை
சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை இன்று (6ம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
சென்னை நுழைவாயிலில் அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இங்கிருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
காவலர் குறைதீர் சிறப்பு முகாம் 282 மனுக்கள் மீது நடவடிக்கை
காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது - ஐ.லியோனி
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிப்பவர்களை பார்த்து திமுக அஞ்சாது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
ரஞ்சி கோப்பை 4வது சுற்று தொடக்கம் காலிறுதி முனைப்பில் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்
துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள்.
சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் - நாக சைதன்யா உருக்கம்
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது.
ஹாலிவுட் நடிகை செலினாவை ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி டார்ச்சர் செய்த வாலிபர் நெட்டிசன்கள் கடும் தாக்கு
செலினா கோம்ஸ் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை. நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பிரபல பாப் பாடகியும் ஆவார்.
அமரன் வெற்றி கண்ணீர் சிந்திய விழாவில் - சிவகார்த்திகேயன்
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான படம் ‘அமரன்’.
சந்திரபாபு நாயுடுவை பதவி விலக சொல்லுங்க யோகி ஆதித்யநாத் போல் ஆட்சி செய்ய பவன் கல்யாண் முதல்வராக வேண்டும் - முன்னாள் அமைச்சர் ரோஜா பேட்டி
ஆந்திர மாநிலத்தில் தவறுகளை தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்என முன்னாள் அமைச்சர் ரோஜா கூறினார்.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு
கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பிரசாரம் செய்த ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏடிஜிபி புகாரை ஏற்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு
கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி இருந்தபோது, பல்லாரி மாவட்டத்தில் சாய் வெங்கடேஷ்வர மினரல்ஸ் நிறுவனத்திற்கு 557 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (7ம் தேதி) நடைபெறுகிறது.
2026ல் மீண்டும் திமுக ஆட்சிதான் கட்சி பணிக்காக நிர்வாகிகள் தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கட்சி பணிக்காக நிர்வாகிகள் தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சீமான், சாட்டை துரைமுருகனால் எனக்கும், குடும்பத்துக்கும் ஆபத்து - பாதுகாப்பு கோரி திருச்சி சூர்யா ஐகோர்ட்டில் மனு
சீமான், சாட்டை துரைமுருகனால் எனக்கும், குடும்பத்துக்கும் ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என திருச்சி சூர்யா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் திட்டவட்டம்
2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.