CATEGORIES
فئات
நல்லகண்ணு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்த பழ.நெடுமாறனை வரவேற்று கைத்தாங்கலாக அழைத்துச்சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்த பழ.நெடுமாறனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 3 விமானங்களில் 315 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
பெண்கள் உட்பட 25 குருவிகள் கைது
முதற்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது ஜார்க்கண்டில் 43 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
ஜார்கண்டில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 43 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!
தமிழகத்தில் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு | சென்னை வானிலை மையம் அறிவிப்பு
கங்கனாவின் 100 வயது பாட்டி மரணம்
மண்டி: பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனாவின் தாய்வழி பாட்டி இந்திராணி தாக்கூர் (100), கடந்த சில நாட்களாக மூளை பக்கவாதம் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு காலமானார்.
ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களின் ஒற்றுமையை உடைக்கின்றனர் - காங். மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
‘ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்கள் இடையே ஒற்றுமையை உடைக்கின்றனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஸ்பா நிலையத்தில் பாலியல் தொழில் - புரோக்கர் கைது
திருவான்மியூரில் ஸ்பா நிலையத்தில் சட்டவிரோதமாக இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரில் மெக்கானிக் கொலை விருதாச்சலத்தில் பதுங்கிய குற்றவாளி பிடிபட்டார்
திருவொற்றியூர் கலைஞர் நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் அஜய் (25), பைக் மெக்கானிக். இவர் கடந்த 8ம் தேதி காலை அதே பகுதியில் காலி மனை ஒன்றில் மார்பு மற்றும் கையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் - இன்று நடக்கிறது
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம், இன்று (11ம் தேதி) நடைபெறுகிறது.
மாநகராட்சி என போலியாக ஸ்டிக்கர் ஒட்டி சாலையில் கழிவுகளை கொட்டிய தனியார் டிராக்டர் சிறைபிடிப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நாள்தோறும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கவரப்பேட்டை – சத்தியவேடு சாலையில் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஷேக் ஹசீனாவின் முடிவை எதிர்த்தும், ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர் .
பாஜ எம்பிக்கள் திட்டமிட்ட சதி: நாடாளுமன்றத்தில் கூட இந்தி திணிப்பு நடக்கிறது - மார்க்சிஸ்ட் எம்பி குற்றச்சாட்டு
‘நாடாளுமன்றத்திலும் இந்தி திணிப்பு நடக்கிறது. இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க பாஜ எம்பிக்கள் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர்’ என மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு எச்சரிக்கை 58 வயதில் இளம் வீரருடன் மோதல்
எர்லிங்டன்: ஹெவிவெயிட் குத்துச் சண்டை போட்டியில், 44 முறை வென்றுள்ள, அமெரிக்காவை சேர்ந்த, ‘பேடஸ்ட் மேன்’ மைக் டைசன் (58), ஜேக் பால் (27) இடையிலான போட்டி, வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. ‘இப்போட்டியில், முதல் ரவுண்டிலேயே டைசன் நாக்அவுட் ஆவார்’ என ஜேக்கின் சகோதரர் லோகன் பால் எச்சரித்துள்ளார். உலகின் ஒப்பற்ற குத்துச்சண்டை வீரராக, அமெரிக்காவின் மைக் டைசன் கருதப்படுகிறார். இவர், 50 போட்டிகளில் பங்கேற்று 44ல் எதிராளிகளை அதிரடியாக துவம்சம் செய்து வென்றவர்.
கோப்பையை கைப்பற்றிய கோகோ
டபிள்யுடிஏ பைனல்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் செங் குய்ன்வென்னை வென்று கோப்பையை கைப்பற்றினார்.
பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி? எடப்பாடி சூசகம்
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது முதல்வர் வைத்த விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
பதவி சுகத்துக்காக கரப்பான்பூச்சி போல ஊர்ந்து செல்லும் உங்கள் பெயரையா வைப்பது எனவும் காட்டமாக கேள்வி
லஞ்ச பணத்துடன் சொந்த ஊருக்கு சென்றபோது ஊட்டி நகராட்சி ஆணையர் காரில் ₹11.70 லட்சம் பறிமுதல்
13 மணி நேரம் விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு
பிரபல நடிகைகளுக்கு தினமும் போதை பொருள் விற்பனை
சென்னை,நவ.11: பப்புகள் மூலம் அறிமுகமான ஆண் நண்பர் உதவியுடன் போதை பொருட்களை பெற்று பிரபல நடிகைகளுக்கு வாட்ஸ் அப் உதவியுடன் விற்பனை செய்து வந்த தாக கைதான துணை நடிகை மீனா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மூத்த திரைக்கலைஞர் \"டெல்லி\" கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் பாதிப்பு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை : ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
ஜனவரி முதல் சுற்றுப்பயணம் அதிமுக கூட்டணியில்தான் இன்று வரை இருக்கிறோம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி
தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
வேளாண் கல்லூரி மாணவர்களை தவிர்த்து வேறு அமைப்பு மூலம் டிஜிட்டல் பயிர் சர்வே - அன்புமணி வேண்டுகோள்
சென்னை, நவ.11: டிஜிட்டல் பயிர் சர்வேயை வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டூர் உள்ளிட்ட 4 அணைகளை மேம்படுத்த அறிக்கை தயாரித்து பணிகளை விரைவில் தொடர திட்டம்
சென்னை,நவ.11: மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை மேம்படுத்துவதற்காக அறிக்கை தயாரித்து விரைவில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்வேறு சங்கத்தினர் நன்றி
சென்னை, நவ.11: தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர், காவிரி - வைகை கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பள்ளிக்கு வராமல் வேறுநபர்களை அமர்த்தி முறைகேடு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை, நவ.11: பள்ளிக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி முறைகேடு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக். மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் 6 மாதமாக மாற்றம்
சென்னை, நவ.11:சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்து வரும் மாணவர்கள் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு கோடைகால பயிற்சிக்கு (சம்மர் இன்டர்ன்ஷிப்) செல்கிறார்கள்.
சுரங்கம் தோண்டும் பணியில் வாயு கசிவு? மயிலாப்பூர் கச்சேரி சாலையில் கொய்வின்றி பணி - மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ.11: கச்சேரி சாலையில் சுரங்கம் தோண்டும் பணியில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் இருப்பினும் சுரங்கம் தோண்டும் பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 9 விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் கடும் அவதி
மீனம்பாக்கம், நவ. 11: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
5 லட்சம் பேர் பங்கேற்பு வயது வந்தோர் கல்வி அடிப்படை எழுத்து தேர்வு
சென்னை, நவ.11:வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு தமிழகத்தில் அடிப்படை எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.