CATEGORIES
فئات
முன்னணி கதாநாயகர்களின் முதல் தெரிவாக உயர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத்
தமிழ்த் திரையுலகின் அனைத்து முன்னணி நடசத்திரங்களின் முதல் தெரிவாக இருப்பது இசையமைப்பாளர் அனிருத்தான்.
கீர்த்தி, ராஷ்மிகாவின் கலவை பாக்யஸ்ரீ: கொண்டாடும் ரசிகர்கள்
தெலுங்கு ரசிகர்கள் நாள்தோறும் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாக்யஸ்ரீ. தெலுங்கு தேசத்தில் அண்மையில் வீசிய புயல் இவர்தான்.
பொதுப் போக்குவரத்தில் கண்கவர் தீபாவளி அலங்காரங்கள்
தீபாவளியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களும் பேருந்துகளும் கண்கவர் பண்டிகை அலங்காரங்களுடன் வலம்வரவிருக்கின்றன.
சிங்கப்பூரில் அறிமுகம் கண்டது சொகுசு கார் ‘டென்ஸா - D9’
‘டென்ஸா D9 MPV’ ரக ஆடம்பர மின்கார்கள் அக்டோபர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்தன.
வீட்டை நோக்கிப் படையெடுத்த 'ரக்கூன்' கூட்டம்; பெண் ஓட்டம்
வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பால்ஸ்போ பகுதியில் வாழும் பெண் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தில் சில ரக்கூன் விலங்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான கவலை ஆசியாவில் நிலவுகிறது: பிளிங்கன்
காஸா மக்களின் நிலை குறித்தும் மத்திய கிழக்கில் தொடரும் பூசல்கள் குறித்தும் ஆசியாவில் மிகுந்த கவலை உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
சத்துணவு வழங்க முடியாமல் தடுமாறும் இந்தியப் பள்ளிகள்
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க பெரிதும் திண்டாடி வருகின்றன.
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள சேர்த்தவர் வீட்டில் என்ஐஏ சோதனை
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவரின் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிர்ச்சி; மாநிலம் முழுவதும் தீவிர விசாரணை டாஸ்மாக் மதுப்புட்டிகளில் கலக்கப்படும் போதை மருந்து
கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுப்புட்டிகளில் போதை மருந்து கலக்கப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் நண்பர் ரத்தன் டாடா: பிரதமர்
சிங்கப்பூரின் உண்மையான நண்பர் திரு ரத்தன் டாடா எனவும் அவரின் பங்களிப்பு என்றும் போற்றப்படும் எனவும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மூத்தோருக்கு ஒரே இடத்தில் மூன்று விதமான சேவைகள்
சிங்கப்பூரில் முதல் முறையாக மூத்தோருக்கு ஒரே இடத்தில் மூன்று விதமான சேவைகள் வழங்கும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
144 தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விருது
சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்குப் பங்களித்த மொத்தம் 144 தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு இவ்வாண்டு முழுமைத் தற்காப்பு ஆதரவாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
பாசிர் பாஞ்சாங் சம்பவத்திற்குப் பிறகு கூட்டு எண்ணெய்க் கசிவு பயிற்சி
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ), அக்டோபர் 11ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த கூட்டு எண்ணெய்க் கசிவு பயிற்சியில் அரசாங்க அமைப்புகள், தொழில் துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பாலர் பள்ளித் துறையில் 283 பேருக்கு விருது
பாலர் பள்ளி நிர்வாக உதவியாளராக 13 ஆண்டுகளுக்குமுன் பாலர் கல்வித் துறையில் தமது பயணத்தைத் தொடங்கினார் திருவாட்டி பெனாசிர் ஹனிஃப் முகமது, 31.
ஜப்பானிய அமைப்புக்கு அமைதிக்கான நோபெல் பரிசு
இவ்வாண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு நிஹோன் ஹிதாங்யோ (Nihon Hidankyo) எனும் ஜப்பானிய அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்கொரிய எழுத்தாளருக்கு உலகளாவிய அங்கீகாரம்
தென்கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளரான ஹான் காங், இலக்கியத்துக்கான நோபெல் பரிசை வென்றுள்ளார்.
ஆசியான் மாநாட்டில் 10 அம்சத் திட்டத்தை முன்வைத்தார் மோடி
ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த 10 அம்சத் திட்டத்தை முன்வைத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
உலகத் தலைவர்களுக்கு பிரதமர் வோங் அழைப்பு வட்டாரச் சவால்களைச் சமாளிக்க ஆதரவு தேவை
சமியன்மாரில் மோசமடைந்து வரும் சண்டையை நிறுத்தவும் மனிதநேய உதவிகள் அங்குச் சென்றடையவும் ஆசியான் பங்காளித்துவ நாடுகள் உதவ வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘வேட்டையன்’ முதல் நாள்: திருவிழாவாக்கிய ரசிகர்கள்
‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள த சே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ உலகளவில் பிரம்மாண்டமாக வெளியீடு கண்டுள்ளது.
நினைவில் நித்தம் நிலைத்திருக்கும் 'எஃப்இஜி' பாலா
சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் ஊடக, திரைப்பட, பழங்கால கார் துறைகளில் முக்கியப் பங்காற்றிய ஏ எல் பாலா பானு, கடந்த ஜூலை 21ஆம் தேதி தமது 71வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
‘சமூகப் பங்காளிகள், தனிநபர்களின் குரல் தேவை’
மனநலச் சவால்களை எதிர்கொள்ள கட்சியினரையும் சமூகத்தினரையும் இணைக்கும் புதிய மசெக மனநலக் குழு.
சீனா, தென்கொரியா, ஜப்பானுடன் ஆசியான் உறவுகளில் மேம்பாடு
மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் துறைகளில் தடையற்ற வர்த்தகத் தளத்தை மேம்படுத்த ஆசியான் உறுப்பு நாடுகளும் சீனாவும் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளன.
இந்தியப் பணக்காரர்களின் கூட்டுச் செல்வம் ஒரு டிரில்லியன் டாலர்
இந்தியாவின் முதல் 100 பணக்கார இந்தியர்களின் மொத்த மதிப்பு முதல்முறையாக 2024ல் ஒரு டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று ‘ஃபோர்ப்ஸ்’ சஞ்சிகை கூறியிருக்கிறது.
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியா கண்ணீர் அஞ்சலி
பிரபல இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.
சாம்சுங் ஊழியர்களைப் பாதி வழியிலேயே மறித்து கைது செய்யும் காவல்துறை
போராடச் சென்ற சாம்சுங் ஊழியர்களை வழியிலேயே மடக்கிக் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
உள்ளூர் விமானப் பயணக் கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
தூய்மை எரிசக்தி: நிறுவனங்களுக்கு உதவ புதிய வர்த்தகக் கூட்டணி
சிங்கப்பூரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டு உள்ள புதிய வர்த்தகக் கூட்டணியின்கீழ், தூய்மை எரிசக்தித் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க இங்குள்ள நிறுவனங்கள் கூடுதல் உதவியைப் பெற உள்ளன.
பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம் டிசம்பர் 10ல் திறப்பு
வடக்கு கிழக்கு பெருவிரைவு ரயில் (MRT) பாதையில் அமைந்துள்ள பொங்கோல் கோஸ்ட் நிலையம் வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குப் பயணிகளுக்குத் திறந்துவிடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) அறிவித்தது.
அண்டை நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் இருதரப்புச் சந்திப்பு
மலேசியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் தனித்தனியே இருதரப்புச் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
சுகாதாரப் பராமரிப்பில் மறுமலர்ச்சி; நோய்த்தடுப்புச் சேவையில் 'ஏஐ' புரட்சி
மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முன்னுரைத்தல் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு புத்தாக்கங்கள் வாயிலாக சுகாதார பராமரிப்பு உருமாற்றம் காணவுள்ளதாகத் தெரிவித்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்