CATEGORIES
فئات
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் தொழுநோய் மற்றும் இரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி மாணவர்கள் சார்பில் தொழுநோய் மற்றும் இரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் 15.2.23 அன்று மிராளூரில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
மரபுசார் பன்முக விழாவில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகளின் கண்காட்சி
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டாரம் கோவில்பட்டி கிராமத்தில் வைகை அணை அருகிலுள்ள அரசு தென்னை பண்ணையில் 16.2.23 அன்று பாரம்பரிய பயிர் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் செயல்விளக்க விழா
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 22-23ஆம் ஆண்டுக்கான வேளாண் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் செயல் விளக்க விழாவினை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் 14.2.23 அன்று சிறப்பாக KKA நடத்தியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், விழாவினைத் துவக்கி வைத்து, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பண்ணைக்கருவிகள் மற்றும் சாதனங்களை விவசாயிகள் பயன்படுத்த பரிந்துரைத்தார்.
வேளாண் அறிவியல் கண்காட்சி
தஞ்சாவூர் காட்டு தோட்டம், வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் மற்றும் தஞ்சாவூர், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியை நடத்தினர்.
விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சி மூலம் தொழில்நுட்ப செய்திகளை பரவலாக்குதல் நிகழ்ச்சி
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண் முகமை திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரத்தில், கலை நிகழ்ச்சிகள் மூலம் திட்டங்கள் பரவலாக்குதல் (கலாஜாதா) நிகழ்ச்சி கொட்டியாம் பூண்டி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் க.சரவணன், அறிவுரையின் படி நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை விடத்தேர் (அ) விடத்தை
விடத்தேர் (அ) விடத்தை. கடுகை விட சிறிய இலைகளை கொண்ட மூலிகை மரம். மிகச்சிறு இலைகள் சிறகமைப்பு கூட்டில்களைக் கொண்ட முள்ளுள்ள சிறு மரம்.
ஹியூமிக் அமிலத்தின் செயல்முறை விளக்கம்
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம் கீரம்பூர் கிராமத்தில் பி.ஜி.பி, வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஹியூமிக் அமிலத்தின் செயல்முறையும் அவற்றின் நன்மைகளைப் பற்றியும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற வேளாண் மாணவிகள்
அன்பில் திருச்சி, தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் தனது ஊரக வேளாண் பணி அனுபவத்தில் சுயஉதவிக்குழு, அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டுகளித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எப்படி உருவாக்குவது அதனை செயல்படுத்துவது எப்படி என்றும் நெல், நிலக்கடலை, எள் மற்றும் சிறுதானிய பயறுகளை எப்படி மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது என்று கண்டுணர்வு பயணம்
வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சீமை கருவேல மரம் மற்றும் சதுப்பு நிலம் பற்றி விழிப்புணர்வு
தாவரக்கழிவுகளில் இருந்து கரிப் பொருள் [BIO CHAR) தயாரித்தல்
தற்போது பெரும்பாலான பயிர்கள் அறுவடை முடிந்து விட்டது. அவற்றின் கழிவுகளை நிலத்தில் உழது மக்க வைக்கலாம். அப்படியே தீயிட்டு எரிக்க கூடாது. இலை தழைகள் விரைவாக மக்கி நிலத்தின் வளத்தை பெருக்கும்.
ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் எருக்கு கரைசல் - செயல்விளக்கம்
பி.ஜி.பி. வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எருக்கு கரைசல் பற்றிய செயல் விளக்கம் அளித்தனர்.
வேப்பங்குடி கிராமத்தில் அங்கக சான்றிதழ் மற்றும் விதைச் சான்றிதழ் முறைகள் பற்றிய பயிற்சி
புதுக்கோட்டை வேப்பங்குடி கிராமத்தில் மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
வெங்காயத் தோல் சாறு செயல் விளக்கம்
வெங்காயம் தோல் சாற்றின் செயல்முறைகள் மற்றும் பயன்பாடுகள்
உழவன் செயலி குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம்
உழவன் செயலி பற்றியும் அதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தனர்.
மறந்து போன கோவைக்காய்
1960களில் வேலி ஓரத்தில் படரும் செடி இது. ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு இதனுடைய பழங்கள் அந்த காலத்து ஸ்நாகஸ். கள்ளி செடி மீது படர்ந்து காணப்படும். ஆனால் இன்று இது ஓரு தனிப் பயிராக பயிரிடப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கரம்பயத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
“ஈட் எல்தி ஸ்டே எல்தி\"
தக்காளியில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
தேனி சின்னமனூர் உள்ள மாவட்டம், அருகே அழகாபுரியில் 8/2/23ல் மதுரை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயி கிருஷ்ணசாமி தோட்டத்தில் தக்காளியை தாக்கும் ஹெலிகோவெர்பா பூச்சிகளை டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டை மூலம் கட்டுப்படுத்தும் முறையினை பற்றி பயிற்சி அளித்தனர்.
வாழைப்பழத்தில் கொத்து உணவு செயல் விளக்கம்
பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
திருச்செங்கோட்டில் செல்வம் தரவரிசை வரைபடம் மற்றும் விளக்கம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரம், டி.புதுப்பாளையம் ஊராட்சி சின்னதம்பி பாளையம் கிராமத்தில் \"செல்வம் தரவரிசை வரைபடம்\" என்ற செயல்முறை விளக்கத்தை பி.ஜி.பி, வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகள் முன்னிலையில் செய்தனர்.
வேளாண் விழா கண்காட்சியில் கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் வேளாண் மாணவர்கள்
கனிக்காட்சியில் கரும்பு ஆராய்ச்சி நிலையம்
மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பற்றிய குறித்த செயல் விளக்கம்
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் 85 கவுண்டம்பாளையம் கிராமத்தில் PGP வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பற்றிய செயல் விளக்கம் அளித்தனர்.
அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை ஆய்வு துணை இயக்குநர் ஆய்வு
ஈரோடு விதை துணை ஆய்வு இயக்குநர் பெ.சுமதி பவானியில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இலை வண்ண அட்டையின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாரம், வடுகம் கிராமத்தில் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் பயின்று வரும் நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு இலை வண்ண அட்டையின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
பண்ணைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் வட்டாரம், உடையார் குடியிருப்பு கிராமத்தில் வேளாண் பண்ணைப்பள்ளி நெல் சாகுபடிக்காக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பட்டுப்புழு வளர்ப்பு பிரிவில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வரும் மாணவிகளான காயத்ரி, காயத்ரி தேவி, கோபிகா, சுஷ்மிதா, ஜனனி, காவ்யா, கௌசல்யா, காவ்ய ஸ்ரீ ஆகியோர் வெள்ளக்காரப்பட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டுப்புழு வளர்ப்பு நடத்தி வரும் பிரேம், மெக்கானிக்கல் இன்ஜினியர் சந்தித்தனர். அங்கு பட்டுப்புழு வளர்ப்பு குறித்த தகவல்களை கற்று அறிந்தனர்.
சர்க்கரை ஆலையை பார்வையிட்ட வேளாண்மை கல்லூரி மாணவிகள்
திருச்சி மாவட்டம், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணியின் ஒரு அங்கமாக கோத்தாரி சர்க்கரை ஆலையை பார்வையிட்டனர்.
வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விதைப்பரிசோதனை பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி
கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து கரைசல் வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு காலநடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மற்றும் தமிழ்நாடு அரசு நீர்வள நிலவளத் திட்டத்தின் திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் தாலுகா, அம்மாபாளையம் ஊராட்சியில் கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்துக் கரைசல் வழங்கும் நிகழ்ச்சி 10.2.23 அன்று நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை வல்லாரை
வல்லாரை வட்டமாகவும், அரைவட்ட பற்களுடன் நரம்பு நீண்ட வெட்டுப் கை வடிவ அமைப்புடனும், காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளைக் கொண்ட, கணுக்களில் வேர் விட்டு தரையோடு படரும் சிறு கொடி இனம். இலையே மருத்துவ பயன் உடையது.