அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமியை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
கட்சியில் திருத்தப்பட்ட சட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஆகியவற்றுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்ததால் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு மீண்டும் பொதுச் செயலர் பதவியைக் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் 11.7.2022இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி தீர்ப்பு அளித்தாலும், உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என அறிவித்தது.
இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததுடன் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என அறிவித்தது.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்த முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும் என மார்ச் 28-ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்த மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة April 21, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 21, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.