தமிழ் நாகரிகத்தின் உயிர்நாடி திருக்குறள். தமிழர் கலாசாரத்தின் பெருமை சங்க இலக்கியங்கள். தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் இதனை ஏற்றுக்கொள்வர். நமது மரபு இவ்விரு நூல்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இவை தரும் போதனைகளே இந்த மண்ணுக்கானவை. அவை நமது முன்னோர்களின் அறிவுச் செல்வம்.
இந்திய மரபில் வேதங்களே முதன்மையானவை. ஒப்புவமை இல்லாத பெருமைக்கு உரியதாக போற்றப்படுபவை. புனிதமானவை என்றும் அறிவார்த்தமானவை என்றும் வாழ்வியலைச் சொல்வன என்றும் வீடுபேற்றுக்கு வழிகாட்டுவன என்றும் அதன் பெருமைகளை அடுக்கிச் சொன்னாலும் இன்றைக்கும் மனித சொல்லுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்திகளை அவை தாங்கி நிற்கின்றன என்று உலக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஏதேனும் நதியைப் பற்றிச் சொல்லும் பொழுது 'கங்கையைப் போல புனிதமானது' என்று சொல்வதைப் போல, எந்த ஒரு நூலையும் பெருமைப்படுத்தும் பொழுது அதனை வேதத்துடன் ஒப்பிடுவது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. தமிழிலும் அத்தகைய வழக்கம் எப்போதும் இருந்து இருக்கிறது.
அதனால்தான் திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடுகிறோம். நம் மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியை வைணவர்கள் வேதமாகப் போற்றுகின்றனர். சைவர்கள் திருவாசகத்தைத் தமிழ் வேதமாகக் கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள் பைபிளை சத்ய வேதம் என்று கூறுகின்றனர். இப்படி, வேதங்கள் சமயம் மற்றும் சித்தாந்தங்களில் சிறப்புப் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.
இந்தியாவில் சமய இலக்கியங்கள் வேதத்தோடு ஒப்பிடப்படுவதும் வேதம் பற்றிப் பேசுவதும் ஆச்சரியமில்லை. தமிழின் பெருமையான திருக்குறளை வேதத்திற்கு சமமானது என்று ஏன் வைத்தார்கள்? சரி, பிறரின் பார்வையில் வேதமாகப் பார்க்கப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும்; திருக்குறள் வேதங்களை எப்படிப் பார்க்கிறது?
வேதங்கள் ஒவ்வொரு திசைக்கும் தெய்வங்களைக் கூறுகின்றன. முறையாக அந்த தெய்வங்களுக்கானதாகவே திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு திசைக்கான தெய்வங்களை வணங்கிக் கடவுள் வாழ்த்து; மேற்கு திசைக்கான வருணனை வணங்கி 'வான் சிறப்பு'; தெற்கு திசைக்கான நீத்தாரை வணங்கி 'நீத்தார் பெருமை'; வடக்கு திசைக்கான தர்மதேவனை வணங்கி 'அறன் வலியுறுத்தல்' பாடப் பெற்றுள்ளன.
هذه القصة مأخوذة من طبعة November 27, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 27, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நலம் தரும் நடராசர் தரிசனம்
வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்- சிவ ஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு 'தென்னவன் பிரமராயன்' எனும் பட்டமும் கிடைத்தது.
திருவாதிரை வழிபாட்டில் திருவாலங்காட்டு ஆடல்வல்லான்
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. ‘ஆதிரை நாளுகந்தான்’, ‘ஆதிரை நாளாய் அமர்ந்தோர்’, ‘ஆதிரை நன்னாளானை’, ‘திருவாதிரையானை’ என்றெல்லாம் திருமுறைகள் புகழ்கின்றன. ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறும். அதில், திருவாதிரை நாள் அபிஷேகம் மிகச் சிறப்பானதாகும்.
லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு
லெபனான் அதிபராக ராணுவ தளபதி ஜோசப் ஆவுனை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை தேர்ந்தெடுத்தது.
டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் 11.95 சதவீதம் உயர்ந்துள்ளது.
46 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆயிரத்தைக்கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த டிசம்பரில் 3,41,791-ஆக அதிகரித்துள்ளது.
மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் சிறுபான்மை ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.