அந்தந்த மாவட்ட எழுத்தாளா்களும், அருகிலுள்ள மாவட்ட எழுத்தாளா்களும் வந்து போகிற அளவில் முடிந்துபோகிற விழாக்கள் முந்தையவை. சென்னையோ பல பகுதிகளிலிருந்தும் பல துறை மக்கள் வந்து கூடுகிற பெருவிழாவாக அமைகிறது. பிறந்த ஊா்கள் வெவ்வேறாயினும், வந்து நிலைபெற்றது சென்னை என்பதால், மிகுதியான எழுத்தாளா்கள் இங்கேயே இருக்கிறாா்கள். பதிப்பகங்களுள் பெரும்பான்மையானவையும் சென்னையில் இருக்கின்றன.
பழைய ஆண்டின் இறுதியையும் புத்தாண்டின் தொடக்கத்தையும் இணைத்து நடத்தப்படும் விழா இது என்பதால், ‘பழையன கழித்தலும் புதியன புகுத்தலும்’ இதில் அரங்கேறிவிடுகின்றன. விடுமுறை நாள்கள் அதிகம் கொண்ட காலம் இது என்பது கூடுதல் பலம். அத்துடன் பிற நாட்டவரும் வந்துபோகிற வசதி சென்னைக்கு உண்டே!
வாசகா்கள், எழுத்தாளா்கள் பதிப்பாளா்கள் என்கிற முக்கூட்டு உறவை வலுப்படுத்தும் திறனாய்வாளா்களுக்கும் இந்தத் திருவிழாவில் இடமுண்டு. அவா்களே இம்மூவா் உறவுக்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்பவா்கள். படைப்புகள் குறித்து விமரிசையாகப் பேசக் கூடியவா்கள் இவா்கள் ஆதலின் விமா்சகா்கள் என்ற சிறப்புப் பெயரும் இவா்களுக்கு உண்டு. முதலில் அவா்களும் வாசகா்கள்தான். ஏன், பதிப்பாளா்களும், எழுத்தாளா்களும் கூட, வாசகா்களாக வந்து பின்னா் வகை பிரிந்து நிற்பவா்கள்.
புத்தகங்களைச் சந்தைப்படுத்துவது மட்டுமல்ல, பலரும் சந்தித்துக் கொள்ளவும் இடம் கொடுக்கிறது, இந்த விழா. சாதி, மத, இன, ஏன் மொழிபேதங்களையும் கடந்து எழுத்தை முதன்மைப்படுத்தும் இலக்கிய விழா. வாங்காவிட்டாலும், வரிசையுறக் கொலுவிருக்கும் புத்தகங்களை வந்து பாா்த்து மகிழ்கிற கண்காட்சிப் பெருவிழா. வாங்குகிற அத்தனை நூல்களையும் வாசிக்கிறாா்களா என்பது தெரியாது.
புத்தகங்களை வீட்டில் வைக்க இடமில்லாவிட்டாலும், வாங்க வேண்டும் என்கிற போதை இருக்கில்லவா, அது இருக்கிற வரைக்கும் இந்தத் திருவிழாவுக்கு முடிவிருக்காது. ஏனைய போதைகளைவிட, இந்தப் புத்தக போதை மெத்தவும் நல்லது. எத்தனையோ கவலைகளை மறந்து புதிய கனவுலகத்துக்குள் கூட்டிச் செல்கிற மாயக் கம்பளம் அல்லவா, புத்தகம்? கைப்பேசிக் கருவியும், காட்சி மின் ஊடகங்களும் பெருகிவிட்டதனால், அச்சுப் புத்தகங்கள் அருகிவிடும் என்கிற அச்சத்தை, எச்சரிக்கையாகக் கொண்டு எழுதுபவா்களும் பதிப்பிப்பவா்களும் கைகோத்துக் கொண்டு களம் இறங்குகிற இலக்கிய விழா.
هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
‘அமெரிக்க கார் தாக்குதலில் பலருக்குத் தொடர்பு'
அமெரிக்க காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேசம்: வரலாற்று பாடநூல்களில் முஜிபுர் ரஹ்மானுக்கு முக்கியத்துவம் குறைப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பதை நீக்கிவிட்டு, அவரிடம் தளபதியாக இருந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாக பாடநூல்களில் இடைக்கால அரசு மாற்றம் செய்துள்ளது.
ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ் சாலா தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
4 பேருக்கு 'கேல் ரத்னா'; 32 பேருக்கு 'அர்ஜுனா'
விளையாட்டுத் துறை விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி
நாட்டின் வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபர்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபர்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் என்னை சிக்கவைக்க பாஜக முயற்சி
கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே
ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா
'ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களே அனுமதித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இலங்கை காரைநகர் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சார்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.
ஃபேஸ்புக் காதலியை கரம்பிடிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்!
ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.