தொடரை ஆரம்பித்த தருணத்திலிருந்து இன்றுவரை இதில் பேசப்பட்டுள்ள மனிதர்கள் பலர் தினந்தோறும் என் கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் வாழ்வு கொஞ்சம் மாற்றம் அடைந்திருக்கிறது.
தொடரின் முதல் கட்டுரையில் அடிக்கடி நான் பார்க்கும் ஒரு வளர்ந்த குழந்தையைப் பற்றி எழுதியிருந்தேன். Downs syndrome என்ற பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் அவளுக்கு ஒரு கதாநாயகியின் பெயர் என்று சொல்லியிருந்தேன். சிறு பிள்ளை போல மாத்திரை சாப்பிட அடம் பிடித்துக் கொண்டு, குளிக்க மறுத்துக் கொண்டிருந்தாள். கொஞ்சமே கொஞ்சம் இப்பொழுது மாற்றம் வந்திருக்கிறது. காரணம், அவளது தம்பிக்குத் திருமணமாகி குழந்தை பிறந்திருக்கிறது.
அந்த குழந்தைக்குச் சோறு ஊட்டுவதும், அது சாப்பிடவில்லை யெனில் என்னிடம் வந்து சொல்வதுமாக இருக்கிறாள்.
'தம்பியே
சாப்பிட்டுட்டான், நீ சாப்பிடலைன்னா நல்லா இருக்காதுன்னு சொன்னா உடனே சாப்பிடறாம்மா' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அவளது தாய்.
மனவளர்ச்சிக் குறைப்பாட்டுடன் பிறந்திருக்கும் மூத்த குழந்தையைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இப்பொழுது பேரன் வந்தவுடன் பெரும் ஆறுதல். பத்து வயது குறைந்தவரைப் போல் இருக்கிறார்.
குழந்தையில்லாத ஒரு தம்பதியைப் பற்றி எழுதியிருந்தேன். அவர்கள் பலருக்கு உணவு கொடுக்கும் அற்புதப் பணியைத் துவங்கி சிறப்பாகச் செய்து வருகிறார்கள். எங்கள் நகரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனரான செய்யது அலியும் அப்படித்தான். நம்பிக்கையுடன் சொந்த வாழ்வில் அவர் முன்னேறியதைப் பற்றித்தான் என்னுடைய கட்டுரையில் பெருமையாக எழுதியிருந்தேன். இன்று அவர் தினந்தோறும் பசியால் வாடும் 50 முதியவர்களுக்கு சாப்பாடு கொடுக்கிறார்.
அவருடைய தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகளாகச் சேர்ந்து ஆளுக்கு ஒரு சமையலைச் செய்து, கொஞ்சம் சாதம், ஒரு காய், ஒரு குழம்பு என்று பொட்டலம் கட்டி கஷ்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
களப்போராளியான சத்யா, இன்னிக்கு திருநெல்வேலியில் ஒரு போராட்டம் இருக்கு மேடம், அதுக்குப் போறேன் என்றபடியே கையசைத்துச் செல்கிறார். அவருடைய டூவீலரில் முன்னால் பள்ளிச் சீருடை அணிந்து அமர்ந்திருக்கும் அவரது குழந்தையும் டாடா காட்டி விட்டுச் செல்கிறது.
هذه القصة مأخوذة من طبعة December 18, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 18, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...