‘‘நானும் கலைவாணியும் அலுவலக நண்பர்கள். அவிஷா 2016ல் துவங்கினோம். அதற்கு முன்பு ஆறு மாதக் காலம் கைத்தறிக் குறித்து நிறைய ஆய்வுகளை மேற்கொண்டோம். சொல்லப்போனால் இந்தியா முழுக்க கைத்தறி உடைகளை தயாரிக்கும் நெசவாளர்களை சந்தித்து அவர்களிடம் இதுகுறித்து தெரிந்து கொண்டோம். இந்த ெதாழிலுக்கு வரும் முன்பு நான் 25 வருஷம் கார்ப்பரேட் நிறுவனமான மஹிந்திராவில் வேலை பார்த்து வந்தேன். அங்கு நான் ஸ்டார்டப் நிறுவனங்கள் அமைக்கும் குழுவில் இருந்தேன். அதன் பிறகு மார்க்கெட்டில், விற்பனை துறை என கிட்டத்தட்ட 25 வருடம் வேலை பார்த்துவிட்டேன். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என்று இருந்தாலும், என்னுடைய மனதில் ஆரம்பத்தில் இருந்தே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அப்போது எதில் ஈடுபடுவது, என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில் இது குறித்து நான் கலைவாணியிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும் அதே போன்ற திட்டம் இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு தான் நாங்க இருவரும் இணைந்து செயல்படலாம்ன்னு முடிவு செய்தோம். என்ன பிசினஸ் செய்யலாம்ன்னு நானும் கலையும் நிறைய ஆலோசனைகள் செய்தோம். நாங்க இருவருமே ஸ்டார்டப் துறையில் இருந்ததால், அதில் பல வாடிக்கையாளர்கள் எங்களுக்கு பரிச்சயமாக இருந்தனர். அதில் ஒருவர் காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவைகளை விற்பனை செய்து வந்தார். அவரிடம் பேசிய போதுதான் கைத்தறிப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். காஞ்சிபுரம் பட்டு மட்டுமில்லாமல் அனைத்து ரக கைத்தறி ஆடைகள் மற்றும் புடவைகளை கொண்டு வர திட்டமிட்டோம். அப்படித்தான் அவிஷா உருவானது. இதில் கலைவாணி அவிஷாவின் கோ-பவுண்டராக உள்ளார்’’ என்றவர் இந்தியாவில் உள்ள அனைத்து கைத்தறி ஆலைகளில் தயாரிக்கப்படும் பிரத்யேக கைத்தறி புடவை மற்றும் உடைகளை ஒரே கூரைக்குள் குவித்து வைத்துள்ளார்.
هذه القصة مأخوذة من طبعة Oct 1-15, 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Oct 1-15, 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!
விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது 'ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்
\"மக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெருநகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.
மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!
\"குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பெண்கள் வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது\" என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவ மனைத் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!
\"ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்\" என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஸ்கர் இல் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம்.
தலைமுடி நீளமாக வளர...
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!
நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது.
புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி
இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது.
அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)
மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள்.
ஆரோக்கிய மலர் ரெசிபி
ஒவ்வொரு பூவிற்கும் தனிப்பட்ட நறுமணம் மட்டுமில்லை 'அதற்கென குறிப்பிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன. பெரும்பாலும் நாம் அதனை அலங்காரப் பொருட்களாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தினை காக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா
சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யா வைச் சந்தித்தபோது...