CATEGORIES
Kategorien
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதமாக இருக்கும்: உலக வங்கி கணிப்பு
வாஷிங்டன், ஜூன் 9 உலகளாவிய பொருளாதார நிலை குறித்த தனது கணிப்புகளை உலக வங்கி வெளியிட்டது. அதில், இந்தியா குறித்து உலக வங்கி தெரிவித்துள்ளதாவது:
வருவாய் பற்றாக்குறை மானியம் 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி நிதியமைச்சகம் விநியோகம்
புது தில்லி, ஜூன் 9 நடப்பு நிதியாண்டில் 3வது தவணையாக 17 மாநிலங்களுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை ரூ.9,871 கோடி வழங்கியுள்ளது.
கோவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை: எய்ம்ஸ் இயக்குநர்
புது தில்லி, ஜூன் 9 கோவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும்.
தடுப்பூசி செலுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தில் தான் முடியும்: டெட்ராஸ் அதானம்
ஜெனீவா, ஜூன் 9 கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகளைச் செலுத்தாமல் தளர்வுகளை அறிவித்தால் ஆபத்தில் தான் முடியும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
201 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைச்சர் பிரதான் தொடங்கி வைத்தார்
புது தில்லி, ஜூன் 9 மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கெயில் குழுமத்தின் 201 இயற்கை எரிவாயு நிலையங்களைத் தொடங்கிவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
புதிதாக கோதுமை மாவு வர்த்தகம் பார்லே புராடக்ட்ஸ் தொடக்கியது
மும்பை, ஜூன் 8 பிஸ்கட் மற்றும் சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ள பார்லே புராடக்ட்ஸ் நிறுவனம் கோதுமை வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆக.1 முதல் விடுமுறை நாட்களிலும் சம்பளம் கிரெடிட்: ஆர்பிஐ அறிவிப்பு
புது தில்லி, ஜூன் 8 வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் என்ஏசிஹெச் அனைத்து நாட்களிலும் செயல்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிக்க இந்தியா உறுதி
புது தில்லி, ஜூன் 8 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழுக்கான (ஆர்இசி) முறையை மாற்றியமைப்பது சம்பந்தமான ஆலோசனை அறிக்கை குறித்து மின்துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும்படி மின்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் நாட்டில் பெட்ரோல் விலை உயர்கிறது: அமைச்சர் விளக்கம்
ஆமதாபாத், ஜூன் 8 குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு குஜராத் அரசு, ஐஓசி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு காந்திநகரில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனைகளுக்கு 6 ஆக்சிஜன் ஆலைகள்: எல்&டி உறுதி
சென்னை, ஜூன் 8 நாட்டில் கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவிடும் வகையில் எல் அண்ட் டி நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு ஆறு ஆக்சிஜன் ஆலைகளை கட்டமைத்து தர உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில் கூகுள் மற்றும் அமேசானுக்கு சர்வதேச வரி
கூகுள், அமேசான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில், புதிய சர்வதேச வரி முறைக்கு, ஜி-7 நாடுகளின் அமைப்புக்கிடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநிலங்களின் கையிருப்பில் 1.49 கோடி கோவிட் தடுப்பூசிகள்
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இதுவரை, 24 கோடிக்கும் அதிகமான (24,60,80,900) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
ஊடரங்குகளில் தளர்வு ரயில் நிலையங்களில் முன்பதிவு அதிகரிப்பு
கோவிட் தொற்று 2வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இருப்பினும் பல்வேறு ரயில்கள் 60 சதம் காலி இருக்கைகளுடன் செல்கின்றன.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகும்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
கோவிட் தொற்றுக்கான சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
+2 மதிப்பெண் வழங்கும் முறை விரைவில் அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மூலதன திட்டங்களுக்கு ரூ.5.54 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது: நிதியமைச்சர்
நடைபெறவுள்ள உள்கட்டமைப்புகள் திட்டம் குறித்து அரசு மூத்த அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ஆர்பிஐ
ரெபோ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதம் எனும் அளவில் இருக்கும் என்று அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கி வட்டி விகிதம் 4.25 சதமாக இருக்கும் என்றும் கூறினார்.
கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த கூடுதல் காலமாகும்: மத்திய அரசு தகவல்
நாட்டில் உள்ள அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த கூடுதல் காலமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
சிறுவர்களுக்கு ஃபைஸர் நிறுவன தடுப்பூசி பிரிட்டன் மருத்துவக் குழு பரிந்துரை
12 முதல் 15 வயதினருக்கு பைஸர் நிறுவன தடுப்பூசிகளைச் செலுத்த பிரிட்டன் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது
உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக திகழ்வதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுத்து வரும் இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும் வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க இருக்கிறது.
ட்விட்டரில் சந்தா முறை திட்டம் அறிமுகம்
புது தில்லி, ஜூன் 4 ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை ட்விட்டர் நிறுவனம் உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது.
வியட்நாமில் பரவும் கோவிட் கலவையானது அல்ல
உலக சுகாதார அமைப்பு விளக்கம்
விரைவில் டொயோட்டா ஹைலக்ஸ் பிரீமியம் பிக்கப் டிரக் அறிமுகம்
மும்பை, ஜூன் 4 அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வாகனம் மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களின் தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டம்
புது தில்லி, ஜூன் 4 அமெரிக்காவைச் கே மூன்று நிறுவனங்களின் தடுப்பூசி மருந்தை கொள் முதல் செய்வதுடன் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கோவிட் தொற்றால் பூஜ்ஜியமாகிய முகேஷ் அம்பானியின் சம்பளம்
புது தில்லி, ஜூன் 4 கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி , 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து, ஊதியமாக எந்த தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை.
ஸ்புட்னிக் லைட் கோவிட் தடுப்பூசி 83.7 சதம் செயல்திறன்மிக்கது: ரஷிய நிறுவனம் தகவல்
புது தில்லி, ஜூன் 3 உலகம் முழுவதும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் கோவிட் தடுப்பூசிகள் இரண்டு டோஸ் கொண்டதாக உள்ளது.
மார்ச் காலாண்டில் ஐடிசி நிறுவனம் ரூ.3,817 கோடி நிகர லாபம் ஈட்டியது
புது தில்லி, ஜூன் 3 மார்ச் காலாண்டில் ஐடிசி நிறுவனம் ரூ.3,816.84 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நான்காவது காலாண்டில் முத்தூட் ஃபைனான்ஸ்
ரூ.1,024 கோடி நிகர லாபம் ஈட்டியது
மல்லையாவின் ரூ.5,600 கோடி சொத்துகளை வங்கிகள் எடுத்து கொள்ள அனுமதி
புது தில்லி, ஜுன 3 கடன் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவின் ரூ.5,600 கோடி சொத்துக்களை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கு கோவாக்சின் மருந்து தயாரிப்பு வசதிகள்
புது தில்லி, ஜூன் 3 கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள், 2 பொதுத் துறை நிறுவனங்களுக்கு செய்து தரப்பட்டுள்ளன.