CATEGORIES
Kategorien
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், 5-ஆவது துணை குற்றப் பத்திரிகையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
நிஜ்ஜார் கொலையில் பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சதியில் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக வெளியான ஊடக செய்தியை கனடா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு
இம்பால், நவ.22: மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
மணிப்பூர் வன்முறையில் 258 பேர் உயிரிழப்பு
இம்பால், நவ. 22: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 258 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி
புது தில்லி, நவ. 22: தில்லி முதல்வர் அதிஷி தனது முன்னோடியான அரவிந்த் கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை கூறினார்.
சமாஜவாதி வெற்றிக்கு எதிராக மேனகா காந்தி மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
புது தில்லி, நவ. 22: மக்களவைத் தேர்தல் தன்னை எதிர்த்து சமாஜவாதி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
'ரீல்ஸ்' மோகம்: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு
கொல்கத்தா, நவ.22: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கைத்துப்பாக்கியைக் கொண்டு ரீல்ஸ் விடியோ எடுக்க முயன்ற போது எதிர்பாரா விதமாக அதிலிருந்து தலையில் குண்டு பாய்ந்ததில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாசகங்களுடன் ரூ.30 கோடி ரொக்கம் மாற்றம்
பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு
அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் மறைவு: பிரதமர் இரங்கல்
புது தில்லி, நவ.22: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் செய்தித்தொடர்பு செயலாளரும் ஓய்வுபெற்ற இந்திய தகவல் சேவைகள் (ஐஐஎஸ்) துறை அதிகாரியுமான எஸ்.எம். கான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வு கோரி மனு
புது தில்லி, நவ.22: ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வுக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு மசூதி நிர்வாக குழுவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
வயநாட்டில் வெல்லப் போவது யார்?
இன்று இடைத்தேர்தல் முடிவுகள்
பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது
தொழிலதிபர் கெளதம் அதானியின் லஞ்ச விவகாரத்தால் இந்தியாவுடனான தமது உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதானி விவகாரத்தால் இந்திய உறவு பாதிக்கப்படாது; அமெரிக்கா
தொழிலதிபர் கெளதம் அதானியின் லஞ்ச விவகாரத்தால் இந்தியாவுடனான தமது உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
சென்னை, நவ. 22: முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு, காலநிலை மையம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை, நவ. 22: ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பிற நாட்டு வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை
கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
மாணவப் பருவம் சாதிப்பதற்கானது!
கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
சென்னை, நவ.22: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் என்றும், அதேவேளையில், ஆசிரியர் பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்படாது எனவும் பல்கலைக்கழக பதிவாளர் விளக்கமளித்துள்ளார்.
'சாஸ்த்ரா'வில் தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் கருத்தரங்கம்
தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தகவல் பாதுகாப்பில் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கத்தில் கருத்தரங்க மலரை வெளியிட்ட கான்பூர் ஐஐடி பேராசிரியர் சந்தீப் கே. சுக்லா (இடமிருந்து 2 ஆவது).
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.
இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ. 23) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
சென்னையில் ரூ.1,000 கோடி திட்டங்கள்: நவ. 30-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அமைச்சர் சேகர்பாபு தகவல்
கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது
தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் மோதல்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கட்சியினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகப்பேறு உயிரிழப்பு: 24 மணி நேரத்தில் ஆய்வு
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் அறிவுறுத்தல்
ஆன்மிகம், கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது
நமது நாட்டின் ஆன்மிகம், பண்பாடு, கலாசாரத்தை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம்: மூவரின் ஒதுக்கீடு ரத்து
போலி தூதரக சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆர்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கஞ்சா பறிமுதல்
பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தம்
சென்னை, நவ. 22: பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படவுள்ளது.