CATEGORIES
Kategorien
நான் கதை சொல்லி!-வித்யா தன்ராஜ்
"பெரும்பாலும் குழந்தைகளோடு பயணிப்பதே எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் உலகம் கற்பனைகள் நிறைந்தது. அதில் யானைகள் பறக்கும்.. சுவர் பேசும்.. பட்டாம் பூச்சி பாடும்.. டெட்டி பியர் ஒளிந்து விளையாடும்.. நமது குழந்தைப் பருவத்தில் கதை சொல்லி நமக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களே மனதில் நிற்பார்கள். இங்கு நானும் கதை சொல்லியானதே ஒரு கதை” எனப் பேசத் தொடங்கிய வித்யா குழந்தைகள் கூடி இருக்கும் இடத்தை நோக்கி கதை சொல்ல தினம் தினம் நகர்கிறார். குழந்தைகளுக்காக S4 Stories எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்!
குழந்தைப் பேறு என்று வரும் போது சுகப்பிரசவம் என்பது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நமது பாட்டி, கொள்ளு பாட்டி எத்தனை குழந்தைகள் பெற்ற போதும், சுகப்பிரசவமாகவே அவர்களுக்கு இருந்தது. இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழலில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததாகி இருக்கிறது. எனினும் சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்று எந்த பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சுகப்பிரசவ கஷாயம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S.
பெண்களை மிரட்டுவது வன்கொடுமைக்கு சமம்!
'தனிமையில் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டுவது சமூக குற்றம்' என்றும் பெண்களை மிரட்டுவது வன்கொடுமைகளுக்கு சமமானது' என்றும் பாலியல் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் கருத்து ஒன்றை முன் வைத்திருக்கிறது.
இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு...
இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு!
சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்!
ஆன்லைன் சூதாட்டம் (Online Gambling)
வாழ்வென்பது பெருங்கனவு கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
தொழில்முனைவோர் ரமா சந்திரசேகர்
வாழ்க்கை இவரோடு முடியவில்லை
கை நிறைய காசு இருந்தால் போதுமா?
ஊட்டச்சத்து டானிக் ராகி
கேழ்வரகு, ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா மற்றும் கேப்பை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Finger Millet' என அழைக்கப்படுகிறது. நம் முன்னோர் காலத்தில் அன்றாட உணவாக இருந்த கேழ்வரகு இன்று அரிய தானியமாக மாறிவிட்டது.
கபடி சாம்பியன்
பெரும்பாலும் ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்னும் பின்னுமான புற வாழ்க்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
கற்பித்தல் என்னும் கலை
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை வேறு. இப்பொழுது இருக்கும் காலகட்டம் வேறு. விஞ்ஞான முன்னேற்றங்கள் மாற மாற நம் வசதிகளும், எதிர்பார்ப்புகளும் அதற்கேற்றாற்போல் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.
கிழியும் கால் மூட்டு ஜவ்வு...கடந்து வர என்ன வழி?
"போன மாசம் வண்டியில இருந்து கீழ விழுந்திட்டேன். பெருசா ஒண்ணும் அடி படல. அப்போ சாதாரண வலியும், வீக்கமும்தான் இருந்துச்சு. விழும்போது பட்டுன்னு முட்டிக்குள்ள இருந்து ஒரு சத்தம் வந்துச்சு. மாத்திரையும், மருந்தும் வாங்கிப் போட்ட போது, சரியாயிடுச்சு. ஆனா, நடக்கும்போது மட்டும் கால் முட்டி அப்பப்போ கண்ட்ரோல் இல்லாம மடங்குது... என்ன செய்யறது? எந்த டாக்டரப் போய் பாக்குறதுன்னு தெரியல”... இது போன்ற பிரச்னைகளை பலர் சந்தித்து இருப்பார்கள். அந்த பிரச்னை என்ன? அதற்கான தீர்வு பற்றி தெரிந்துகொள்ளலாம்.
குடும்பத்திற்காக உழைக்கிறோம்....
அவமானப்படத் தேவையில்லை!
நலம் காக்கும் வெந்தயம்
பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும்கூட, பழமையான மருத்துவச் செடியான வெந்தயம் நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல வித மான மாய வித்தைகளை செய்யக்கூடியது. அது என்ன என்று பார்க்கலாம்...
அன்பான சோனியா
இந்தியாவில் மட்டும் 'சுமார் 6.5 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கற்பித்தல் என்னும் கலை
'கொரோனா' காலம் வந்ததிலிருந்து, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனதில் ஒரே கொந்தளிப்புதான். 'ஆன்லைன்' வகுப்பு நடந்தாலும், படித்த பாடங்களை மறக்காமலும், புதியனவற்றை ஓரளவு மனதிற்கு எடுத்துச் செல்லவும் உதவுகிறது.
சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்
செக்ஸ்டார்ஷன் (Sextortion)
வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் யுனைட்டெட்வே!
"2020ம் ஆண்டு உலகம் முழுதும் இப்படி ஒரு போரடியை சந்திப்போம் என்று யாரும் கடை நிலை ஊழியர்கள், அன்றாட தினக்கூலி தொழிலாளர்கள், சிறு தொழிலில் ஈடுபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடி வந்துள்ளனர்.
மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
நமது உடல்நலம் காப்பதிலும், ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது இயற்கை உணவுகளான பழங்கள், காய்கறிகள், கீரைகளாகும். இவைகள் பல்வேறு நோய்களைத் தீர்க்கின்றன. விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த கீரைகளை தினமும் ஒருவர் 100 முதல் 125 கிராம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் கிடைக்கும் கீரைகளில் பல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
லட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி?
பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.
எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...
பாடகி கங்கா சிற்றரசு
வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
புற்று நோயியல் நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ்
வெளியே தெரியாத வேர்!
"கருவுற்றால் ஒரு குழந்தைக்கு க அன்னையாக முடியும்...கருணையுற்றால், ஆயிரம் குழந்தைகளுக்குக் கூட அன்னையாக முடியும்..!!” என்று கூறிய அன்னை தெர சாவைநம் அனைவருக்கும் தெரியும்..அல்பேனியாவில் பிறந்து இந்தியாவையே தனது அன்பாலும், சேவையாலும் கட்டிப் போட்ட அன்னை அவர். ஆனால், அன்னை தெரசாவைப் போலவே, இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை, இன்னொரு தேசம் அன்னை என்று இன்றுவரை கொண்டாடி வருவது உங்களுக்குத் தெரியுமா..?
ஆஸ்துமா பிரச்சனையா? இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்!
மழைக்காலம் துவங்கி விட்டது... பலருக்கும் இப்போது பெரும் பிரச்சனையாக இருப்பது சளி, தும்மல், இருமல், காய்ச்சல் என்பதுதான். நுரையீரல் மண்டல நோய்கள் என்பது சாதாரண தும்மல், அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிகின்ற ஒவ்வாமை, இருமல், சளி, வறட்டு இருமல் என்பதில் துவங்கி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி நோய் வரை குறிப்பிடலாம். என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் இந்த பிரச்னைக்கு மருந்துகளின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்குமே தவிர குறையாது. மருந்தற்ற ஒரு வாழ்க்கை வாழ எல்லாருக்கும் விருப்பம் தான். ஆனால் சாத்தியமா என்றால்... ஆயுர் வேத மருத்துவத்தின் தத்துவம் உணவே மருந்து என்பதுதான். நுரையீரல் பிரச்னைக்கு ஒரு தேநீர் குடித்தால் போதும் என்கிறார் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S.
I Will not Be The Last - கமலா ஹாரீஸ்
இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால் கடைசிப் பெண்ணாக மட்டும் நான் இருக்கக் கூடாது.. (while Imaybethe first women in the office, I will not be the last). இந்த இரவு நிகழ்வை உற்று கவனித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு பெண்ணுக்கும், வாய்ப்புகள் நிறைந்த உலகம் இது என்பதை இந்த வெற்றி உணர்த்தியிருக்கும்...! தேர்தல் வெற்றிக்குப்பின் கமலா ஹாரிஸ் மக்கள் முன்பு உதிர்த்த அழுத்தமான வார்த்தைகள் இவை.
உடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி
உடல் எடை குறைப்பவர்கள், நீரிழிவு மற்றும் -ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் மற்றும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் எல்லாருக்கும் சிறந்த பயிற்சி உடற்பயிற்சி. ஜிம்மிற்கு சென்று தான் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் 20 நிமிடம் கைகளை வீசி விறு விறுப்பாக நடைப்பயிற்சி செய்து வந்தால் பல நன்மைகள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்....
போட்டோ மட்டுமில்ல டாட்டூ போடுவதிலும் நான் ஸ்பெஷலிஸ்ட்!
ஓரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற சொல் உண்டு.
விளையாட்டா ஆரம்பிச்சேன்...ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன்!
புதுச்சேரி, எம்.ஜி. சாலை, சின்ன மணி கூண்டு அருகே பாட்டி பஜ்ஜி கடைன்னு கேட்டா சின்ன குழந்தை அடையாளம் சொல்லும். புதுச்சேரிக்கு இவரின் கடை மிகப் பெரிய அடையாளம் என்று சொல்லலாம். கடந்த 45 வருடமாக இங்கு பஜ்ஜி விற்று வரும் ராஜம் பாட்டியின் கைமணத்தில் தயாராகும் பஜ்ஜியை சாப்பிட பல ஊர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்தும் மக்கள் சாப்பிட வருகிறார்கள்.
திருவிளக்கை எவ்வாறு வணங்க வேண்டும்!
திருவிளக்கை பெண்களின் உருவாகக் கருதி திருவிளக்கு 'நாச்சியார் என்று போற்றுவர். திருவிளக்கின் ஐந்து சுடர்களும் பெண்களிடம் நிலை பெற்றிருக்க வேண்டிய அன்பு, நிதானம், மன உறுதி, சமயோஜித அறிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதன் பாதம் பிரம்மனையும், தண்டு விஷ்ணுவையும், தீபச்சுடர் சிவனையும், தீபத்தின் வெப்பம் பராசக்தியையும் குறிக்கின்றது. இவ்வளவு மகத்துவம் கொண்ட திருவிளக்கினை எவ்வாறு ஏற்றலாம் என்று பார்க்கலாம்...
கார்த்திகைப் பொரி
கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காயின் சரவலையைச் சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம். வெண்பொடி பூசிய என்றும் தூயவனாகிய சிவபெருமானை நெல்பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை கொண்ட மாவலியைத் தேங்காயின் சருவல் உணர்த்துகிறது. தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.
கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை
ஓவ்வொரு பெற்றோரின் நோக்கமும் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் ச என்பதே. இதில் ஆங்கில வழிக் கல்வி என்பது கல்வியே கிடையாது. ஒருவர் ஆங்கில வழிக் கல்வியில் தன் குழந்தையை சேர்த்துள்ளார் என்றால் மீடியம் என்பதற்கு அவருக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் என பேசத் தொடங்கிய வெ.பி.வினோத்குமார், கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை' எனும் ஆவணப்படத்தின் இயக்குநர். மக்கள் திரை' எனும் யு-டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். கூடவே தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.