இவருடைய படங்களுக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு உண்டு. இப்போது ‘லெவன்’ படம் ரிலீஸுக்கு வெயிட்டிங்.
புரொமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம். ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’, ‘ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்’ என்று ஓடிடியில் உங்களுக்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளதே?
அப்படியா! ஒரு படத்தோட வெற்றிக்கு எப்போதும் கதை அமைவது முக்கியம். அடுத்து அதுல முக்கியமான ரோல் கிடைப்பது முக்கியம். அப்படி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ல முக்கியமான கேரக்டர் கிடைச்சது. அதனால் பெர்ஃபாமன்ஸ் பண்ண முடிஞ்சது.நல்ல கதையில் ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்ன்னு தேட வேண்டிய அவசியமில்லை. கார்த்திக் சுப்புராஜ் சார் இயக்கத்தில் நடிச்சது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.
‘ரத்னா’ என்ற கேரக்டர் தமிழ் சினிமாவுல எனக்கு நல்ல பேர் கொடுத்துச்சு.‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் சீரிஸும் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துச்சு. வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் பாராட்டினார்கள். அதற்கு என்னுடைய இயக்குநர் நந்தினி மேடத்துக்கு நன்றி சொல்லணும். கடைசியா பேட்டி கொடுக்கும்போது போலீஸ் கதை பண்ணமாட்டேன்னு சொல்லியிருந்தீங்க….
கடந்த பேட்டியில் போலீஸ் கதையை தவிர்க்கலாம்னு இருக்கேன்னு சொன்னது உண்மை. ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ பன்ணும்போது இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இந்தக் கதையைச் சொன்னார். கதை கேட்ட அந்த சமயத்திலேயே இந்தப் படத்தை பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். அந்தளவுக்கு நல்ல கதை.
ஆனால், போலீஸ் கதை என்பதுதான் சின்ன நெருடலைக் கொடுத்துச்சு. ஆனாலும் இந்தக் கதையை மிஸ் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ‘லெவன்’ படத்தோட கதை என்னுடைய முடிவை பரிசீலனை பண்ணவெச்சதுன்னு சொல்லலாம். அந்தளவுக்கு அற்புதமான கதை. இயக்குநர் லோகேஷ் தியேட்டர்ல திரைப்படம் பார்ப்பதுபோல் இரண்டரை மணி நேரம் மிக அழகாக கதை சொன்னார்.
Diese Geschichte stammt aus der 22-11-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 22-11-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.