CATEGORIES
Kategorien
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 32 சதவீதம் உயர்வு
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 4-வது காலாண்டு, நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய சவாலான காலகட்டத்திலும் நிறுவனத்தின் செயல்பாடு ஸ்திரமாக உள்ளது.
சீன எல்லையில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்கள் குவிப்பு
லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் படைவீரர்களை குவிக்கிறது.
கரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் 2-டிஜி மருந்து விரைவில் விற்பனைக்கு வருகிறது
விலை ரூ.990 ஆக நிர்ணயம்
கே.கே. வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள 8 துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 50,040 பேர் பாதிப்பு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 50,040 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 95,751 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 3 கோடியே 2 லட்சத்து 33,183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 5 லட்சத்து 86,403 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 1.94 சதவீதமாகும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்தில் பிறந்த மண்ணைத் தொட்டு வணங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
உ.பி.யில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிறந்த மண்ணை தொட்டு வணங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சொந்த ஊர், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாத் மாவட்டத்தில் உள்ள பரவுங் கிராமம் ஆகும். இதனிடையே, உ.பி.யில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட அவர், தனது மனைவி சவீதா தேவியுடன் டெல்லியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு ரயிலில் புறப்பட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஐம்பது நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு
'இந்திய ஒன்றியம்' என்று கூறி பொறுப்பேற்றனர்
கரோனா தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பயணம் - ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று 3 நாள் பயணமாக லடாக் சென்றார். அவருடன் ராணுவ தளபதி எம்.எம். நரவானே உடன் சென்றார். லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
வனச்சரகர் பதவி உயர்வு: ராமதாஸ் வலியுறுத்தல்
வனச்சரகர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பாரம் பரிய சிலைகளை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
திருவள்ளூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு இயக்குநர் நா. புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை
25 மாவட்டங்களில் ரூ.100ஐ எட்டியது
ஊரடங்கில் ஞாயிறுதோறும் 419 மின் ரயில்கள் இயக்கப்படும்
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் 419 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு
பாம்பன் மீனவர்கள் 23 பேர் உயிர் தப்பினர்
51 நாட்களில் 28 மாநிலங்களில் சாகச பயணம் செய்த தாய், மகன்
கொச்சி கேரளாவின் கொச்சி நகரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் துணை பேராசிரியராக மருத்துவர் மித்ரா சதீஷ் (40) பணியாற்றி வருகிறார்.
கரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை
ஆக்சிஜன் தேவை குறைந்து குணமடைவதாக தகவல்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிப்பு 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதி
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுதலங்களை திறக்க ஒப்புதல் Ta கார்வாள்
மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு
2 மாதத்துக்கான நீரை திறந்துவிடவும் உத்தரவு
ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்பு, இன்டர்மீடியட் தேர்வுகள் ரத்து
அமராவதி: ஆந்திராவில் கரோனா பரவல் முதல் அலை தணிந்ததால், கடந்த மே மாதம் 5 தேதி முதல் இன்டர்மீடியட் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் பின்னர் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
கரோனாவுக்கு பிந்தைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்கள் - திண்டிவனம், செய்யாறில் தொழிற்சாலைகள்
கோயில்கள் சீரமைப்புக்கு ரூ.100 கோடி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தடுப்பூசி பற்றிய தயக்கத்தை போக்க காங்கிரஸாருக்கு சோனியா வேண்டுகோள்
புதுடெல்லி; காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
நாடு முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண் கணக்கீட்டுமுறை சாத்தியமில்லை
உச்ச நீதிமன்றம் கருத்து
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் நீடிப்பார் - காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவிப்பு
புதுடெல்லி: பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து நல்ல முடிவு
முதல்வர் ஸ்டாலின் உறுதி
நெல்லை அருகே ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் சிமென்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டு மீட்பு
6 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ தங்கம் பறிமுதல்
சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரைக்காலை சேர்ந்த அன்வர்தீன், தஞ்சாவூரைச் சேர்ந்த நஷல் அகமது, அப்துல் வஹாப், பாஸ்கரன், மாயழகு ஆகியோரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பிடிபட்டது.
குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் 2-ம் தவணை தடுப்பூசியை 8.30 லட்சம் பேர் போடவில்லை
தமிழக சுகாதாரத் துறை தகவல்
அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.