CATEGORIES
Kategorien
வினாத்தாள் கசிவு விடை பெற வேண்டும்
சமீபத்தில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுதியதாக பிகாா் மாநிலத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்
இதய வால்வு சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அதி நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு தனியார் கல்லூரியில் இலவச இடம்
மாநகராட்சி பள்ளியில் படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கல்லூரி படிப்பை இலவசமாக படிக்க எத்திராஜ் மகளிா் கல்லூரி சீட் வழங்கியுள்ளது.
இன்று இரவு செங்கல்பட்டுக்கு புறநகர் ரயில்கள் இயங்காது
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019 ஏப். 9-ஆம் தேதிக்கு முன்பு நிா்வாகத்தால் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா் நியமனங்களை தகுதி இருந்தால் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென, அதற்கான நெறிமுறைகளை வழங்கி பள்ளிக் கல்வித் துறை செயலாளா் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறார். அத்தொகுதியில் அவர் தொடர்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளார்.
மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்
100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து 9 பேர் உயிரிழப்பு
வாக்கு ஒப்புகைச் சீட்டு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு
வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க கோரிய வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரம், மேற்கு வங்கத்தில் வன்முறை
ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் - காவல் துறை அதிகாரி உயிரிழப்பு: 100 பேர் காயம்
கோதுமை மாவு விலை உயா்வு, அதிக மின் கட்டணம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் காவல் துறை அதிகாரிகள்.
சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெஃப்பனோஸ் சிட்சிபாஸ், டேனில் மெத்வதேவ், மகளிர் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு
டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
பக்தர்கள் வழிபாட்டுக்கு பத்ரிநாத் கோயில் திறப்பு
உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது
பிரதமர் மோடி
மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்
முதல்வர் தகவல்
அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்
முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், தமிழக பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநா்ஆா். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.
ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்
திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி எங்கே போகிறது?
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 இலட்சத்து 60,606 பள்ளி மாணவா்கள் தோ்வு எழுதியிருந்தனா்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட கூடாது: காங்கிரஸ்
தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
பள்ளிக் கல்வி திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்
பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோா்களுக்கும் பகிா்வதற்காக பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளத்தை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இன்றுமுதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்
தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் மாவட்டந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி முகாம்களை நடத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
சிறப்பு குழந்தைகளை வளா்க்கும் தாய்மாா்கள் மனித நேயம் மிக்கவா்கள் என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.
வேளாங்கண்ணி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உதகையில் நாய்கள் கண்காட்சி
உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய் முதல் பரிசு பெற்றது.
கார்கே ஹெலிகாப்டரில் சோதனை
எதிர்க்கட்சிகளை தேர்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
ஜார்க்க கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உள்பட4 பேர் உயிரிழந்தனர்.
தமிழக உள் மாவட்டங்களில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 15 வரை அதிக பட்ச வெப்பநிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும் இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு
மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, அத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 4-ஆவது இந்திய இளைஞரை கனடா காவல் துறையினா் கைது செய்தனா்.