CATEGORIES
Kategorien
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடம்பத்தூர் ஒன்றியம், மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 2ல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புழல் காவாங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்க.ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
புழல் காவாங்கரையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
திருத்தணி, நவ. 12: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் அளித்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் முற்றுகை போராட்டம்
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர் உட்பட 8 பேர் சிக்கினர்
ஆந்திரா வில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர், இன்ஜினியர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்
தீபாவளி நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடையில் பணியில் சேர்ந்து, போலி நகைகளை வைத்துவிட்டு 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற பெண் ஊழியரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் மறைவு
மதுரா டிராவல்ஸ் வி.கே. டி. பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவலூர் குப்பம் கோபால் தலைமை வகித்தார். அவற்றைத் தலைவர் மோகன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை
அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை, சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறியதால் ஆத்திரம் பைக் ஷோரூம் ஊழியருக்கு வெட்டு
பெரம்பூரில் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறிய ஆத்திரத்தில் பைக் ஷோரூம் ஊழியரை சரமாரியாக வெட்டிய வாலிபர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பால பணிக்காக சாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றம்
தேனாம் பேட்டை சைதாப் பேட்டை மேம்பால பணி காரணமாக சாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம் புதிய பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்|
பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 760 கோடியில் நவீனமாகும் புளியந்தோப்பு ஆடுதொட்டி
புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் நவீன முறையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் வெளியிடப்படும். என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும்
கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கதை கட்டிய அமெரிக்க மீடியாக்கள் டிரம்ப் - புடின் தொலைபேசி உரையாடல் உண்மையல்லி
'அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உடன் பேசியதாக வெளியான மீடியா தகவல்கள் உண்மையல்ல' என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
காம்பீரை பேச விடாதீங்க.
'இந்திய கிரிக்கெட் அணி தலைமை கோச் கவுதம் காம்பீரை இனி எந்த பிரஸ் மீட்டுக்கும் அனுப்பி நிருபர்களிடம் அவரை பேச விடாதீர்கள்' என, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய எடப்பாடி இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்
ஆட்சியில் இருந்த போது ஒரே நாளில் 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது என்று கூறி கொச்சைப்படுத்திவிட்டு இப்போது நீலிக் கண்ணீர் எடப்பா வடிப்பதா என டிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வயநாட்டை சர்வதேச சுற்றுலாதலமாக்குவோம்
ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியான வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது.
பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் 71.25 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவு
பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.71.25 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு
ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணை
‘எமிஸ்’ பணிகளுக்காக 6 ஆயிரம் பேர் நியமனம்
பள்ளிக் கல்வித்துறையில் எமிஸ் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது பொருளாதார தடை
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
பாஜவுடன் கூட்டணிக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி
மூத்த நிர்வாகிகள் மிரட்டல் எதிரொலியாக பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தல' பட்டத்தை அஜித் துறந்தது போல் 'உலகநாயகன்' பட்டம் வேண்டாம்
'உலக நாயகன் உள்பட எந்த பட்டமும் வேண்டாம்' என்று கமல்ஹாசன் திடீரென்று அறிவித்துள்ளார்.
ஒரே மேடையில் விவாதிக்க தயார் இபிஎஸ்சுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
திமுக -அதிமுக திட்டங்களை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விட்ட சவாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுள்ளார்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்ட பாஸ்ட் டிராக் திட்டம்
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாஸ்ட் டிராக் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு டெர்மினல் 4ல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை ஐஐடியில் செயற்கைகோள், ராக்கெட் வெப்பநிலை ஆய்வு மையம்
இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்