CATEGORIES
Kategorien
ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து
தனது கலாசாரம், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், முயற்சிகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க, விமரிசையான இரவு விருந்து நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்தது.
தவறாகிப்போன மருத்துவச் சோதனை; அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது
தென்கொரியாவில் மருத்துவ சோதனை தவறாகிப் போனதால் சிங்கப்பூர் மாது ஒருவர், அங்க அசைவின்றி கிடக்கிறார்.
அமெரிக்க நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட் தேர்வு
பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
டெல்லியில் கத்திக்குத்து: காவல்துறை அதிகாரி மரணம்
பணியில் இருந்த டெல்லி காவல் அதிகாரி ஒருவர், கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
பீகாரில் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி
பீகார் மாநிலத்தின் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
மத்திய அரசின் கெயில் நிறுவனம் கடந்த 2011ல் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம். பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எரிகாற்றுக் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
தவெக: ஜனவரியில் 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அணுகுமுறை; ஆம்புலன்சுக்கு முன்னுரிமை
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக் குறிப்பிட்ட சில போக்குவரத்து விளக்குகளில் புதிய போக்குவரத்து முன்னுரிமை அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வீட்டுப் புதுப்பிப்பு: பணம் தந்த பின் காணாமல்போன குத்தகையாளர்
நொவீனா கூரை மேல்வீட்டின் உரிமையாளர் ஒருவர் தமது வீட்டைப் புதுப்பிக்க $152,000க்கு மேல் செலுத்தியிருந்தார்.
8,500 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம்
அடுத்த கல்வியாண்டுக்குத் தயாராகும் 8,500 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தனது ‘பேக் டு ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ (Back To School Festival) நிகழ்ச்சியை சனிக்கிழமை (நவம்பர் 23) ரிசோட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடத்தியது.
காப்பிக் கடை கலாசாரத்தைக் கொண்டாடும் காட்சிக்கூடம்
சிங்கப்பூரின் காப்பிக் கடை கலாசாரம் அடைந்துள்ள மாற்றங்களைக் காட்சிப்படுத்தும் புதிய மரபுடைமைக் காட்சிக்கூடம், பொதுமக்கள் வருகைக்காக டிசம்பர் 2ஆம் தேதி முதல் திறந்துவைக்கப்படவுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக கூட்டணி
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி அமைத்த பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
மக்கள் செயல் கட்சி மாநாட்டில் லீ சியன் லூங்கிற்குப் புகழாரம்
சிங்கப்பூரை 1959 முதல் ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாடு சனிக்கிழமை (நவம்பர் 23) தொடங்கியது.
'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' பயிற்சி வகுப்புகள் தரத்தை உயர்த்த மேலும் கடுமையான நடைமுறைகள்
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பு நிதி ஆதரவு வழங்கும் பயிற்சி வகுப்புகளின் தரத்தை உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, குறைவான தரமதிப்பீட்டைக் கொண்ட பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படும்.
மீண்டும் சின்னத்திரை: மறுக்கும் ரோஷினி
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன், சினிமா ஆசையில் அங்கிருந்து வெளியேறினார்.
படம் முழுவதும் சடலமாக நடிக்கும் பிரபு தேவா
ஒரு படம் முழுவதும் உயிரற்ற சடலமாக நடித்துள்ளார் பிரபு தேவா. தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு கதாநாயகனும் முழுப் படத்திலும் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை.
தக்சினுக்கு எதிரான புகார் நிராகரிப்பு
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மற்றும் அவர் குடும்பத்தின் ஆதரவுடன் செயல்படும் ஆளும் கட்சி மீது பதிவுசெய்யப்பட்ட புகாரை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தென்கொரியாவின் பிளாஸ்டிக் கழிவு; மறுசுழற்சிக்கும் எல்லையுண்டு
பொருள்களை மறுசுழற்சி செய்யும் திட்டங்களுக்கு தென்கொரியா அனைத்துலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் வாயுக் கசிவு: மூவர் மரணம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உரத் தொழிற்சாலையில் உள்ள உலை ஒன்று வெடித்து நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதில் இருபெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நினைவாற்றல் குறித்து விமர்சனம் 'ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்’
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்ற கருத்துடன் மோடியை விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது.
துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் 5 இடங்களில் ஏறக்குறைய 100 கோடி ரூபாயில் ‘மெகா கிளஸ்டர்’ திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
சிங்கப்பூருடன் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்த சுவீடன் விருப்பம்
கடல்துறைப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் சிங்கப்பூருடன் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சுவீடன் முன்னுரிமை அளிக்கிறது.
அதிகரிக்கும் செலவுகளால் சிங்கப்பூரில் சுருங்கும் ஹோட்டல் அறைகள்
சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகளின் வருகை பெருகியபோதிலும் உயர்ந்துவரும் செலவுகளால் இங்குள்ள விருந்தோம்பல் துறை சில சவால்களைச் சந்தித்து வருகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகம் சிங்கப்பூர் பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் பெண் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) தெரிவித்து உள்ளது.
கள்ள சிகரெட்டுகளுக்கு அனுமதி வழங்கியதாக நம்பப்படும் பாதுகாப்பு அதிகாரி $5,000 லஞ்சம் பெற்றதாக சந்தேகம்
கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்க மூத்த பாதுகாவல் அதிகாரி ஒருவர் குறைந்தது 4,750 வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புத்தாண்டு நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்கள்
புத்தாண்டு நெருங்கி வருகிறது. அதனை வரவேற்கும் அதே வேளையின் சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களும் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறும் எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்தது.
குழந்தைகளின் மனநலனை ஆராயும் புதிய ஆய்வு
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் மன ஆரோக்கியம், நரம்பியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலைக் கண்டறிய ஒரு புதிய ஆய்வை மனநலக் கழகம் தேசியளவில் நடத்தவுள்ளது.
‘சமூகங்களுக்கிடையே புரிதலை ஒருங்கிணைக்கும் வலிமையான பாலம் மொழிபெயர்ப்பு'
சமூகங்களுக்கிடையே நிலவும் ஒருமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள, அவற்றுக்கு இடையே உள்ள புரிதலை ஒருங்கிணைக்க மொழிபெயர்ப்பு வலிமைமிகு பாலமாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார் திரு ச.வடிவழகன்.
2024ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பை உயர்த்தியது சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 3.5%
சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை ஏறத்தாழ 3.5 விழுக்காட்டுக்கு உயர்த்தி உள்ளது.
நெட்டன்யாகுவுக்குக் கைதாணை: உலகத் தலைவர்களின் கருத்துகள்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் கைதாணை பிறப்பிக்க அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.