சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நான் மினி வேன் டிரைவர் மற்றும் முட்டை லோடு ஏற்றும் வேலை செய்து வருகிறேன். எனது மூத்த மகள் அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். எனது மகளுக்கு பிறந்தது முதல் மூளை வளர்ச்சி ‘ஐக்யூ 40 சதவீதம்’ உள்ளதால், சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார்.
இதனால் தினமும் வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். பள்ளி படிப்பை எனது மகள் 10ம் வகுப்பு வரை முகப்பேரில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்தார். பிறகு வீட்டில் இருந்த எனது மகள் 12ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வாக எழுதி வெற்றி பெற்றார். அதன் பிறகு மனநலம் குன்றியவர் சான்றிதழ் அடிப்படையில் தற்போது அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். எனது மனைவி மாரடைப்பு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு இறந்துவிட்டார். இருந்தாலும் எனது மகளை நான் எந்த குறையும் இன்றி வளர்த்து வருகிறேன்.
எனது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக கூறினார். இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதற்கு மகளிர் போலீசார் சம்பவம் நடந்த இடம் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லையில் வருவதால் அங்கு புகார் அளிக்க கூறினர். அதன்படி நான் இங்கு புகார் அளித்துள்ளேன்.
எனவே எனது மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த புகாரின் படி காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமேகலை ஆகியோர் கொண்ட குழு, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தனியாக 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
டிவி நடிகையின் 14 வயது மகன் சடலமாக மீட்பு
மும்பையில் தொலைக்காட்சி நடிகை சப்னா சிங்கின் மகன் சாகர் கங்வார்(14) உத்தரப்பிரதேசத்தின் பெரெய்லியில் ஆனந்த் விகார் காலனியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார்.
குளச்சல் அருகே நடுக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கியது 9 மீனவர்கள் உயிர் தப்பினர்
தணுஷ்கோடி, புதுவையில் தத்தளித்த 7 பேர் மீட்பு
திருவண்ணாமலையில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது மலை ஏற பக்தர்களுக்கு தடை
மண் சரிவுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை
அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்கள் ஆனார்கள் அண்ணாமலை, 28 கூட்டாளிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்
மாஜி பாஜ நிர்வாகி திருச்சி சூர்யா சிவா பரபரப்பு பதிவு
இசை நிகழ்ச்சி நடத்த அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்
ஆடிப்போன புதுச்சேரி அமைச்சர்
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பத்தையும் ஏன் அகற்ற உத்தரவிடக் கூடாது?
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி நாகஜோதி.
உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி
உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மனித மூளையை ஆவணப்படுத்தி இருக்கிறது சென்னை ஐஐடி. இதற்காக நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது
கூட்டுறவு சங்க நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அதன் மீது உரிமைகோர முடியாது என்று பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் அண்ணா பல்கலைக்கழக ஐஓடி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதுநிலை தொழில்நுட்ப பாட திட்டங்களை வழங்க முடிவு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு 1240 உயர்வு நகை வாங்குவோர் கலக்கம்
ஒரே நாளில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டது.