திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள்
Dinakaran Chennai|December 09, 2024
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், ஆறு ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள்

உமையாளுக்கு இடபாகம் அருளியதும், திருமாலுக்கும் நான்முகனுக்கும் ‘தான்’ எனும் அகந்தை நீக்கி ஜோதிப்பிழம்பாக காட்சியளித்ததும் இங்குதான். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலையில் காட்சிதரும் மலையே மகேசன் திருவடிவாகும்.

அடி முடி காணாத பரம்பொருளாக, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளி, ஜோதி வடிவாக உயர்ந்து நின்ற திருவடிவமே அண்ணாமலை. திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், கிருத்திகை தினத்தில் நடைபெறும் மகாதீபப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றது. மகா தீபத்தன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். ஜோதிப்பிழம்பாக இறைவன் காட்சியளிக்கும் தீபத்தை தரிசனம் செய்வது அகஇருளை நீக்கும் ஆன்மிக அனுபவமாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி காலை 6.00 மணி முதல் 7.25 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. வரும் 13ம் தேதி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைதர வாய்ப்பு இருக்கும் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.

Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி
Dinakaran Chennai

உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி

உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மனித மூளையை ஆவணப்படுத்தி இருக்கிறது சென்னை ஐஐடி. இதற்காக நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது
Dinakaran Chennai

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது

கூட்டுறவு சங்க நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அதன் மீது உரிமைகோர முடியாது என்று பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
பெங்களூரு மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் அண்ணா பல்கலைக்கழக ஐஓடி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Dinakaran Chennai

பெங்களூரு மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் அண்ணா பல்கலைக்கழக ஐஓடி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுநிலை தொழில்நுட்ப பாட திட்டங்களை வழங்க முடிவு

time-read
1 min  |
December 12, 2024
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு 1240 உயர்வு நகை வாங்குவோர் கலக்கம்
Dinakaran Chennai

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு 1240 உயர்வு நகை வாங்குவோர் கலக்கம்

ஒரே நாளில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
December 12, 2024
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Dinakaran Chennai

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என்பதால் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
சாரண, சாரணியர் இயக்க வைர விழா ₹10 கோடியில் தேசிய ஜாம்போரி நடக்க திட்ட
Dinakaran Chennai

சாரண, சாரணியர் இயக்க வைர விழா ₹10 கோடியில் தேசிய ஜாம்போரி நடக்க திட்ட

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடி மதிப்பில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது எப்படி?
Dinakaran Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது எப்படி?

தனியாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

time-read
1 min  |
December 12, 2024
கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்
Dinakaran Chennai

கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தல்

time-read
1 min  |
December 12, 2024
பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு
Dinakaran Chennai

பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா

time-read
2 Minuten  |
December 12, 2024
பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
Dinakaran Chennai

பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி

time-read
1 min  |
December 12, 2024