வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்தி வரும் பேரணி ஹரியாணா எல்லையில் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீசாரின் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்ட விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸôர் ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். ஆனாலும் விவசாயிகள் தடுப்புகளை மீறி தில்லியை நோக்கி முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலால் தில்லி ஸ்தம்பித்தது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020}ஆம் ஆண்டில் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் சுமார் ஒன்றரை ஆண்டு நடத்திய தொடர் போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க விவசாயிகள் ஹரியாணாவில் நுழைவதைத் தடுக்க, பஞ்சாப் }ஹரியாணா மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருúக்ஷத்ரம், சிர்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை ஹரியாணா போலீஸôர் ஏற்படுத்தினர்.
பேச்சு தோல்வி: முன்னதாக, விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் சண்டீகரில் திங்கள்கிழமை நள்ளிரவு இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Diese Geschichte stammt aus der February 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.