காலனியாதிக்கம் முதல் ஜனநாயகம் வரை...
Dinamani Chennai|March 11, 2024
ஒன்றரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்த இம்மூன்று குற்றவியல் சட்டங்களும் குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்வதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளன என்றும், இதனால் இவற்றை மாற்றியமைப்பதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலனியாதிக்கம் முதல் ஜனநாயகம் வரை...

வர்த்தகம் செய்து பொருள் ஈட்டுவதற்காக 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், காலப்போக்கில் இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக மாற்றிக் கொண்டனர். வர்த்தகம், நிர்வாகம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொண்டு, வர்த்தக வளர்ச்சிக்குத் துணைபுரிய, காவல் அமைப்பினை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட காவல் அமைப்பானது ராணுவத்தைப் போன்று இரக்கமின்றி செயல்படும் அமைப்பாகவும், பொதுமக்களிடத்தில் வன்முறையுடன் அணுகும் தன்மையுடையதாகவும் விளங்கியது. ஆங்கிலேய நிர்வாகத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துபவர்களை அடக்குவதும், பொதுமக்களை ஆங்கிலேய நிர்வாகத்தின் ஆணைகளுக்குக் கீழ்படிந்து செயல்படச் செய்வதும் காலனித்துவ காவல் அமைப்பின் முக்கிய கடமைகளாக இருந்துவந்தன.

களப் பணியாற்றும் காலனித்துவ காவலர்கள் பொதுமக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு இருந்தனர். 24 மணி நேரமும் பணியாற்றுவதற்கு ஏற்ப, காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காவல் அதிகாரிகளின் ஆணைகளை முழுமையாக ஏற்று, செயல்படுகின்ற விதத்தில் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் உயரதிகாரிகள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்ததால், அவர்கள் காவலர்களிடம் பழகுவதில் இடைவெளியைக் கடைப்பிடித்தனர்.

இந்திய காலனியை ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டங்கள் பெரும்பாலும் எதேச்சதிகாரமானவையாக இருந்தன. ஆங்கிலேய நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புக்கு இணங்க செயல்படுத்தும் வகையில் அச்சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. "தேசத் துரோகச் சட்டம்-1870', "ரௌலட் சட்டம்-1919' போன்ற சட்டங்கள் இதற்கு சான்றுகளாகும்.

காலனியாதிக்க நிர்வாகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் இந்தியர்களை தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி சிறையில் அடைக்கவும், "வாரன்ட்' இல்லாமல் ஒரு இடத்தினுள் காவலர்கள் நுழைந்து திடீர் சோதனை நடத்தவும் காவல்துறைக்கு இச்சட்டங்கள் அதிகாரங்களை வழங்கியிருந்தன.

Diese Geschichte stammt aus der March 11, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der March 11, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
Dinamani Chennai

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு

வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்

time-read
1 min  |
September 23, 2024
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
Dinamani Chennai

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு

சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
Dinamani Chennai

அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி

நிர்மலா சீதாராமன் பெருமிதம்

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு

ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
September 23, 2024
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
Dinamani Chennai

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு

போர்ப் பதற்றம் அதிகரிப்பு

time-read
1 min  |
September 23, 2024
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
Dinamani Chennai

அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
2 Minuten  |
September 23, 2024
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
Dinamani Chennai

தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி

ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 23, 2024
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

time-read
1 min  |
September 23, 2024
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
Dinamani Chennai

எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு

நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 23, 2024
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
Dinamani Chennai

297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024