Try GOLD - Free
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
Dinamani Karaikal
|March 25, 2025
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
தமிழகத்தினுடைய நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற வகையில், நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கி இருக்கிறது. இதனால் 2025-26-ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் 70 ஆயிரத்து 753 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.25 லட்சம் ரூபாய் கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கும்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இவைதானோ? ஒவ்வொரு தனிநபரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடனைத்தான் இவ்வாறாகத் தமிழக அரசு பெருமை பொங்கப் பேசுகிறதோ?
நான்காண்டுகளாக மடிக்கணினித் திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது அதற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இனி 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது கைக்கணினிகள் வழங்கப்படும் என்று சொல்வது தேர்தலுக்கான நோக்கமாக இருக்குமே தவிர, வேறு எதுவாக இருக்க முடியும்? பந்தி முடிந்த பிறகு பசியாற வந்த விருந்தாளியைப் போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு வாங்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்த பிறகு, திருவிழாவைக் காண வந்த பக்தனைப் போல, வாக்குப்பதிவு முடிந்து விட்ட பிறகு வாக்களிக்க வந்த வாக்காளனைப் போல, நோயாளி மடிந்து விட்ட பிறகு, மருந்து வாங்கி வந்த உறவினரைப் போல, யாது செய்வது, எதைச் செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படுகிற திட்டமாக இவை சொல்லப்படுகிறது. ஆனால், திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மையாகும்.
பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2,562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. போதிய நிதியும் ஆசிரியரும் இல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்துக்கு மாற்றவா முடியும்? உள்ளூர் தரத்தையே அவர்கள் பெற இயலாமல் போகும்.
This story is from the March 25, 2025 edition of Dinamani Karaikal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karaikal
Dinamani Karaikal
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Karaikal
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Karaikal
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Karaikal
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Karaikal
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Karaikal
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Karaikal
இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
May 30, 2026
Dinamani Karaikal
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Karaikal
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Karaikal
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Translate
Change font size

