TryGOLD- Free

‘டிரோன்’களின் தலைநகரமாகுமா தமிழகம்
Tamil Murasu|November 09, 2024
இந்தியாவின் முதல் ‘ஆளில்லா வானூர்தி’ (டிரோன்) சோதனை மையம் தமிழகத்தில் அமைய உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
- சதீஷ் பார்த்திபன்
‘டிரோன்’களின் தலைநகரமாகுமா தமிழகம்

செழிப்பான பாதுகாப்பு, விண்வெளி உற்பத்திச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தொழில் துறையின் தேவைகளைப் புதுமையான முறையில் நிவர்த்தி செய்வதன் மூலம் இத்துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளில்லா வானூர்தி சோதனை மையம் மூலம் இந்தியாவில் விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்குவதற்கான விருப்பமான இடமாக தமிழகம் மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலவும் ‘டிரோன்’ துறையில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் இத்துறையில் முன்னோக்கிச் செல்ல நினைப்பதில் வியப்பு ஏதுமில்லை.

இந்திய அரசு வேளாண், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டுக்கு ஆக அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதை அடுத்து, மாநில அரசுகளும் அந்த வழியைப் பின்பற்றுகின்றன.

மகளிர்க்கான ஆளில்லா வானூர்தி பயிற்சித் திட்டம்

மகளிர்க்கான ‘நமோ ஆளில்லா வானூர்தி’ பயிற்சித் திட்டத்தை, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது இந்திய அரசு.

இதன் மூலம் 446 ஆளில்லா வானூர்திகள் தயாரிக்கப்படும் என்றும் 500 பேருக்கு அவற்றை இயக்குவதற்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கருடா நிறுவனத்தின் அதிகாரி ஷ்யாம் குமார் தெரிவித்துள்ளார்.

“ஒரு வலுவான, வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொருளியல் ரீதியில் முன்னேறும்போது வீட்டுக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஷ்யாம் குமார்.

இத்திட்டத்தின்கீழ் வேளாண் துறையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் 15,000 ஆளில்லா வானூர்திகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும், நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ஆளில்லா வானூர்திகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான இலவச ஆளில்லா வானூர்தி பயிற்சித்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கருடா ஏரோ ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

This story is from the November 09, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 09, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView All
எதிரிகளையும் கைவிடாத ‘சல்லியர்கள்'
Tamil Murasu

எதிரிகளையும் கைவிடாத ‘சல்லியர்கள்'

தமிழர்கள் அனைத்துச் சூழல்களிலும் அறத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதை சித்திரிக்கும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தைக் கூடிய விரைவில் சிங்கப்பூர்த் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

time-read
1 min  |
March 20, 2025
சிலம்பரசனின் புதுப் படத்தில் இணையும் மற்றொரு நாயகன்
Tamil Murasu

சிலம்பரசனின் புதுப் படத்தில் இணையும் மற்றொரு நாயகன்

சிலம்பரசனின் ‘STR 49’ படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

time-read
1 min  |
March 20, 2025
வி சுப்ரீம்: விறுவிறுப்பான நட்சத்திர தேடல்
Tamil Murasu

வி சுப்ரீம்: விறுவிறுப்பான நட்சத்திர தேடல்

வசந்தம் ஒளிவழியின் நட்சத்திரத் தேடலுக்கான ‘வி சுப்ரீம்’ போட்டியின் ‘வைல்டு கார்டு’ சுற்றில் சிறப்பாகப் பங்களித்து, அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் ஷீனாவும், கிருஷ்மிதாவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

time-read
1 min  |
March 20, 2025
கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் கூட்டு: பொதுமக்கள் கண்ணீர்
Tamil Murasu

கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் கூட்டு: பொதுமக்கள் கண்ணீர்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

time-read
1 min  |
March 20, 2025
வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலேயே இருக்கும்: டெஸ்மண்ட் லீ
Tamil Murasu

வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலேயே இருக்கும்: டெஸ்மண்ட் லீ

சிங்கப்பூரர்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் விலை கட்டுப்படியான அளவிலேயே இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
தீவு முழுவதும் மழை; வெப்பநிலை குறைந்தது
Tamil Murasu

தீவு முழுவதும் மழை; வெப்பநிலை குறைந்தது

சிங்கப்பூரில் இவ்வாண்டு மூன்றாவது முறையாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதன்கிழமை (மார்ச் 19) தீவு முழுவதும் மழை பெய்தது. நண்பகல்வாக்கில் வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Murasu

வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒப்புதல் அளித்துள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Murasu

பாரம்பரியத் தொழில்களை ஆதரிக்க முன்மொழியலாம்

சிங்கப்பூரர்கள் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தொழில்களைப் புதிதாக அறிவிக்கப்பட்ட சிங்கப்பூர் மரபுடைமைத் தொழில் திட்டத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் முன்மொழியலாம்.

time-read
1 min  |
March 20, 2025
நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்
Tamil Murasu

நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்

சிங்கப்பூர் ஆயதப் படையின் ராணுவப் பயிற்சிகளை நகர்ப்புறச் சூழலில் மேற்கொள்ள வகைசெய்கிறது புதிய 'சாஃப்டி சிட்டி' வளாகம். நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய இடங்களைப் போல் அது தோற்றமளிக்கிறது.

time-read
1 min  |
March 20, 2025
பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து
Tamil Murasu

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more