CATEGORIES
Categorías
புளி 2,000 ரூபாய்
பற்றாக்குறை காரணமாக, அதிகபட்ச சில்லறை விலை ரூ.350-400க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளியின் விலை, ரூ.2,000க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரையோர சுற்றுச் சூழலை நாசம் பண்ணுதல் “நாட்டுக்கே கேடாகும்”
சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்தி, பல்லுயிர்த் தன்மையைப் பாதுகாத்து, ஆரோக்கியத்தைப் பேணும் வகையிலமைந்த இயற்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் கூட்டிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய சீரி ஏ தொடர் சமநிலையில் மிலன் கைகரி போட்டி
இத்தாலியக் கால்பந்தாட்டக கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற கைகரியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி. மிலன் சமப்படுத்தியது.
திருக்கோ இருபதுக்கு-20 லீக் 2025 - மூன்றாவது பருவம்
திருக்கோ இருபதுக்கு - 20 லீக் 2025இல் மூன்றாவது பருவம் நடைபெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான பாகிஸ்தானின் குழாமில் நசீம், அப்பாஸ் இல்லை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, ஆமிர் ஜமால், மிர் ஹம்ஸா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கான இந்திய குழாமில் ஷமி
இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் மொஹமட் ஷமி இடம்பெற்றுள்ளார்.
நீர் தேடிவந்து கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள்
திருப்பத்தூர் மாவட்டம், சின்ன சமுத்திரம் அருகே காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி விவசாய நிலத்துக்குள் புகுந்த 13 காட்டுப்பன்றிகள், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை |நிறுவனரின் மனைவி இந்தியா விஜயம்
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் (61), பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
காட்டுத்தீயை சாதகமாக பயன்படுத்தி வீடுகளில் திருடர்கள் கைவரிசை
அலொஸ் ஏஞ்சல்சில், காட்டுத்தீயை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சிலர் வீடுகளில் நுழைந்து திருடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் குழாமில் ஷகிப், லிட்டன் இல்லை
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில், முன்னாள் அணித்தலைவர்கள் ஷகிப் அல் ஹஸன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹொஸைன், ஷொரிஃபுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூட் ஆகியோர் இடம்பெறவில்லை.
29 ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை
உக்ரைனுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது, ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.
தொலைபேசியில் நிதி மோசடி; அறுவர் கைது
புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகள் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாகக் கூறி வங்கிக் கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப் பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் சனிக்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருளுடன் இரு பெண்கள் உட்பட11 பேர் கைது
நாடளாவிய ரீதியில் ஒன்பது இடங்களில் சனிக்கிழமை (11) மேற்கொள்ளப்பட்ட அதிவிசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலை படிக்கட்டுகளில் நீர் வரத்து
நுவரெலியா மாவட்டத்தில் சனிக்கிழமை(11) மாலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணை யாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
‘உலக அயலகத் தமிழர் தினம் 2025' அமைச்சர் சந்திரசேகர், பிரதியமைச்சர் பிரதீப் பங்கேற்பு
'உலக அயலகத் தமிழர் தினம் 2025' தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சனிக்கிழமை(11) ஆரம்பமானது, ஞாயிற்றுக்கிழமையும் (12) இடம்பெற்றது.
பன்முக ஆளுமை படைத்த அந்தனி ஜீவா காலமானார்
எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் என பன்முக ஆளுமை படைத்தவர் அந்தனி ஜீவா சனிக்கிழமை (11) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81ஆகும்.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
தமிழக மீனவர்களின் இரண்டு விசைப் படகுகளைக் கைப்பற்றி 8 மீனவர்களை ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்தியப் பத்திரிகையான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தனிநபர் பாவனை வாகன இறக்குமதிக்கு இன்னும் அனுமதியில்லை
நிதி அமைச்சினால் சனிக்கிழமை (11) இரவு வெளியிடப்பட்ட ஆயத் தீர்வை (Excise Duty) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் (வர்த்தமானி அறிவித்தல் எண்.. GN 2418-43 dated10/01/25), இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் என்ஜின் கொள்ளளவின் பிரகாரம் வரி அறவிடுவது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
மாணவி கடத்தல்; சாரதி கைது
வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கெலிஓயாவில் மாணவி கடத்தல்
பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உடப்பட்ட கெலிஓயா, அம்பரப்பொல பகுதியில் சனிக்கிழமை(11) அன்று நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
தேசிய ஸ்குவாஷ் போட்டி
இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனம் 44ஆவது தடவையாக நடத்திய தேசிய ஸ்குவாஷ் போட்டி இலங்கை விமானப்படை முகாம் இரத்மலானை ஸ்குவாஷ் வளாகத்தில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஒருவர் மீது தாக்குதல்; 16 பேர் காயம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திரூர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற விழாவில், யானை ஒன்று மிரண்டு ஒருவரைத் தாக்கியுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதை அடுத்து, ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி ஆரம்பம்
இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.
தவறவிட்ட பயண பொதி சில மணி நேரத்துக்குள் மீட்பு
எடுத்தவரை சி.சி.ரி.வி. காட்சிகள் மூலம் தேடுகின்றனர்
அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிறது
வங்கி சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு மூலம் வாழ்க்கை நடத்தும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசியலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாகை மீனவர்கள் 12 பேருக்கும் பிணை
தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி, மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தவில் வித்துவானின் மகன் விபத்தில் பலி
யாழ். வல்லைப் பகுதியில் புதன்கிழமை (08) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
“யாரும் ஏமாறவேண்டாம்”
கொரிய பிராந்திய நகரபிதாவுடன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டுள்ள ஈ8 விசா தொடர்பான ஒப்பந்தம் முற்றாக சட்டவிரோதமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
"பொய்யர்களின் அரசாங்கம்"
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தைக் குறைப்பதாக மக்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தார்.