CATEGORIES
Categorías

இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன

பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்

நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.

"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

IMF வுடன் இன்று பேச்சு
நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 18 பேர் பலி
டெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை (15) ஏற்பட்ட -கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீன அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

பணய கைதி விவகாரம்: இஸ்ரேல் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்
பணய கைதி விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மூத்த ஊடகவியளாலர் சீதா ரஞ்சனி காலமானார்
மூத்த பத்திரிகையாளர் சீதா ரஞ்சனி ஞாயிற்றுக்கிழமை (16) காலமானார்.

வின்னேஸ்வரம் மனைவியுடன் கைது
பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் பல துப்பாக்கிச் சூடு முயற்சி, துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகத் தேடப்படும் ஒரு சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
தற்போது நிலவும் வறண்ட வானிலை மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.

இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5,000 வைத்தியர்கள்
மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கெனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து
இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு
விஜேராமவில் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த்தாக வுறப்படுகின்றது.

திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை
உத்தரப் பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை
சமூக செயற்பாட்டாளர் டான் அழைக்கப்படும் ப்ரியசாத் என அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

“முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து மகஜர் கையளித்துள்ளனர்”
உ ள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்களுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழுவானது சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று சில முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி தொடர்பில் பௌத்தசாசன விளக்கம்
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

அழகான உலகத்தை உருவாக்கிட “ஒன்றுசேர்வோம்”
தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில், ஒன்றிணைய வேண்டுமென்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பில் இன்று விசேட் பாராளுமன்ற அமர்வு
உ ள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (14)