CATEGORIES
Categorías
சாலை விரிவாக்கம் செய்வது எப்போது?
மதுராந்தகம், அக்.2: செங்கல்பட்டு முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்வது எப்போது என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
போலி ஆவணம் தயாரித்து *4 கோடி மோசடி
அட்டை கம் பெனியை பார்த்துக்கொள்ளுவதாக கூறி போலி ஆவணம் தயார் செய்து 4 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாராகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வரும் பூங்கா
திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி பூங்கா பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை பணிக்காக 16 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இது வரை 102 சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்
சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அகத்தேதரை பகுதியில் சபரி ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் 100வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. 3வது மற்றும் இறுதி திகட்ட தேர்தலில் 65.48 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வங்கதேசத்தை ‘ஒயிட்வாஷ்' செய்தது இந்தியா
வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி 'ஒயிட்வாஷ்' செய்தது.
காலில் குண்டு பாய்ந்ததில் கோவிந்தா படுகாயம்
பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்...
பலியாகினர் இதற்கு பதில் டியாக மத்திய இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியது. மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சைரன்கள் ஒலித்தபடி இருந்தன.
மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி ஒத்திகை
இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் நேற்று போர் விமான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிர்மலா சீதாராமன் வீடு அருகே காங். போராட்டம்
தேர் தல் பத்திரங்கள் மூலமாக மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா பாஜ தலைவர் விஜயேந்திரா மற்றும் பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் உட்பட்டோர் மீது பெங்களூரு நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பதி பிரமோற்சவம் நாளை மறுதினம் தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 4ம்தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை (3ம் தேதி) அங்கு ரார்ப்பணம் எனப்படும் முளைப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்றிரவு 7 மணிக்கு ஏழுமலையானின் சேனாபதி யான விஸ்வக்சேனாதிபதி வீதியுலா நடைபெறும்.
அதிமுக ஆட்சியில் 146 வீடுகள் கட்டாமலேயே பல கோடி ரூபாய் மோசடி
அதிமுக ஆட்சி யில் 2016 முதல் 2019 வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 146 வீடுகள் கட்டாமலேயே வீடுகள் கட்டியதாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 6 ஊராட்சிகள் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு வழிகாட்டியாக உள்ளது
'ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது' என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல் சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியே இருக்காது
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி குறைந்து வருவதற்கான நிலவரம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை
ஓசூர்-பரந்தூரில் கார்கோ கிராமம்
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2023க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
செங்கல்பட்டு - உளுந்தூர்பேட்டை வரை 8 வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும்
ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் உள்ள இடர்பாடுகளை களைந்து, பணிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தலைவர்கள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு
உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் தலைமையில் இன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
2 நாளில் ரஜினி வீடு திரும்புவார்
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி மீது செல்போன் வீச்சு
சென்னையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசி தாக்கிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
790 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை ஒட்டி
5000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகள் பறிமுதல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்
அக்டோபர் 3வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி | 30க்கும் மேற்பட்டோர் பலி? | பதுங்கு குழியில் மக்கள் தஞ்சம் | மத்திய கிழக்கில் உச்சமடைந்தது போர்
திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
திருத்தணியில் வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார்.