CATEGORIES
Categorías
கோவிட் பரிசோதனைகளை அனைத்து மாநிலங்களில் அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
நாட்டில் கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பின் 2ம் அலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலையொட்டி சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் அறிமுகம்
மும்பை, மார்ச் 31 ஏ54 மாடல் ஸ்மார்ட்போனை ஒப்போ நிறுவனம் சீனாவில் அறி முகப்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாட்டுச் சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் களமிறங்க தயாராகிறது ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்
விரைவில் கோடியாக் ஃபேஸ் லிஃப்ட் காரை களமிறக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது ஸ்கோடா நிறுவனம். இந்த ஆண்டிற்குள் 3வது காரை அறிமுகப்படுத்துவதற்கான முனைப்பில் உள்ளது அந்த நிறுவனம்.
ஹார்லி டேவிட்சன் பைக் வாடகை
பெங்களூருவில் புதிய சேவை அறிமுகம்
வர்த்தகம் செய்ய பாதுகாப்பான நகரம் துபாய் முதலிடம்: உலக வங்கி ஆய்வில் தகவல்
வர்த்தகம் செய்ய பாதுகாப்பான நகரமாக துபாய் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ரியல்மி 8 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
அம்சங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். 6.4இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே, 1,08002,400 பிக்சல்கள் துல்லியம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 1,000 nits பிரைட்னஸ் அம்சங்கள் உள்ளன.
முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஏப்.15ந் தேதி செமஸ்டர் தேர்வு: அரசு உத்தரவு
கோவிட் தொற்று காரணமாக திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய ஐபோன் 13 மாடல் ஆப்பிள் அறிவிப்பால் ரசிகர்கள் ஆர்வம்
புதிய ஐபோன் 13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்ததால் ரசிகர்கள் ஆர்வம் அடைந்துள்ளனர்.
பிஎம்டபிள்யூ கிரான் கூபே கார்களின் புத்தம் புதிய ரகம் இந்திய சந்தையில் அறிமுகம்
முன்னணி சொகுசுக் கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது 2 வரிசை கிரான் கூபே கார்களின் புத்தம் புதிய ரகமொன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அரசியல் விளம்பரங்களை தடுக்க டுவிட்டர் நடவடிக்கை
விரிவான மற்றும் நுணுக்கமான வழிமுறைகள் மூலம் தடை செய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களைத் தடுக்க டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்சிடி ஐபிஎஸ் பேனல் டிஸ்பிளேவுடன் விவோ ஓய் 30ஜி அறிமுகம்
எல்சிடி ஐபிஎஸ் பேனல் டிஸ்பிளேவுடன் விவோ ஒய்30ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி துறையின் உறவுகளை புதுப்பிக்க இந்தியா அமெரிக்கா இடையே ஒப்புதல்
எரிசக்தி துறையின் உறவுகளை புதுப்பிக்க இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாவது:
இரண்டு புதிய 650சிசி மாடல்கள் ஹோண்டாவின் அசத்தல் அறிமுகம்
650சிசி பிரிவில் இரண்டு புதிய வேரியண்ட்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஹோண்டா நிறுவனம். சிபி650ஆர் மற்றும் சிபிஆர்650ஆர் மோட்டார் சைக்கிள்களை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சோதனை செய்யப்படும் கேடிஎம் ஆர்சி 390 பைக்
கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆர்சி 390 மோட்டார் சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த தலைமுறை ஆர்சி சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் கேடிஎம் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றது.
கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க பேஸ்புக் திட்டம்
பிராந்தியங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை அதிகரிக்கும் நோக்கில் கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கேலக்ஸி டேப் ஏ7 லைட் ஜூன் மாதத்தில் அறிமுகமாகிறது?
கேலக்ஸி டேப் ஏ7 சாதனத்தை சாம்சங் நிறுவனம் ஜூன் மாதத்தில் அறிமுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப் சாதனத்தில் 8.4-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
ஏப்.10க்குள் 90 சத பயணிகள் ரயில்களை இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே தகவல்?
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் 13,349 பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் சாம்சங் அறிமுகம்
இரண்டு புதிய 5ஜி கேலக்ஸிஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் வெளியீடு
கடந்த ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் ஊரடங்கு எதிரொலி கூகுளில் அது குறித்த தேடல் 140 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது
தினசரி மின்தேவை 16,000 மெகாவாட்டாக உயர்வு
கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்து வரும் நிலையில், தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் அளவை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயந்திர கோளாறினால் தனது யூனிட்களை டுகாட்டி நிறுவனம் திரும்ப பெறுகிறது
மோட்டார்சைக்கிள்களில் இயந்திர கோளாறு காரணமாக டுகாட்டி நிறுவனம் ரீகால் செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது.
லம்போர்கினியை களமிறக்கிய நடிகர் பிரபாஸ் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.6 கோடி
பாகுபலி ஹீரோ பிரபாஸ் புதிதாக லம்போர்கினி அவெண்டடோர் காரை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் புதிய அலுவலகம் திறக்க காயின்பேஸ் திட்டம்
அமெரிக்காவின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான காயின்பேஸ் இந்தியாவில் புதிதாக அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்ககாவில் வரும் ஏப்.19ம் தேதிக்குள் 90 சதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி: பைடன் உறுதி
கடந்த மார்ச் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா ஒரு நாளைக்கு 63,000 புதிய கொரோனா பாதிப்புகளை சராசரியாகக் கொண்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பங்கு வர்த்தகத்தில் இளைஞர்கள் அதிக ஆர்வம் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தகவல்
இளைஞர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியர்களில் பெரும்பாலானோர் முதலீடு என்றாலே தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் என்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மார்ச் 31ம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீர்வு நடவடிக்கை: ஆர்பிஐ திட்டம்
நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தேர்தலில் அரிதான தவறுகள் நீதிமன்ற அவமதிப்பாகாது: உயர்நீதிமன்றம் கருத்து
மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வாக்களிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்த கருத்தினை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 5 மாதங்களில் 13,732 யூனிட்கள் ஹோண்டா சிபி350 பைக் அசத்தல் விற்பனை
ஹோண்டா சிபி பைக் கடந்த 5 மாதங்களில் 13,732 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இந்த வாகனம் ஏப்ரல் விலையை உயர்த்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏப்.1 முதல் டொயோட்டா வாகனங்கள் விலை உயர்வு
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மாருதி, ரெனால்ட் நிறுவனங்கள் விலை உயர்வு அறிவித்துள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமும் இணைந்துள்ளது.