CATEGORIES
Categorías
காசநோய் தடுப்பு நடவடிக்கைகள்: மாதந்தோறும் ஆய்வு செய்ய முடிவு
சென்னை, நவ. 17: காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அறிய மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்கம்: கிராம மக்கள் போராட்டம்
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்
சென்னை,நவ.17:சென்னை சென்ட்ரல் வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.
நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்
சென்னை, நவ.17: ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவ.29 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உக்ரைனில் 120 ஏவுகணைகள், 90 ட்ரோன்கள் மூலம் ரஷியா கடும் தாக்குதல்
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தகர்க்கும் வகையில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீச்சு: 3 பேர் கைது
டெல் அவீவ், நவ.17: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியன் ரேஸிங் லீக்: கோவா ஏசஸ் சாம்பியன்
கோவை, நவ. 17: இந்தியன் ரேஸிங் லீக் போட்டியில் கோவா ஏசஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை டர்போ ரைடர்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றது.
சின்னர் - ஃப்ரிட்ஸ் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை
டுரின், நவ. 17: ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஜானிக் சின்னர் - அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஜெர்மனி அபாரம்
ஜெர்மனி 7-0 கோல் கணக்கில் போஸ்னியா & ஹெர்ஸெகோவினாவை வீழ்த்தியது.
அரையிறுதியில் இந்தியா; தோல்வியின்றி முன்னேறியது
தீபிகாவின் அதிரடியில் ஜப்பானையும் வீழ்த்தியது
4-ஆவது டி20: மே.இ. தீவுகள் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாட்டின் சிறந்த காவல் நிலையம் 113 ஆண்டு ஒடிஸாவின் படாபூர் !
பொ்ஹாம்பூர், நவ. 17: ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள படாபூர் காவல் நிலையம், 2024-ஆம் ஆண்டில் நாட்டின் மூன்று சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 பேர் கைது
மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலி ஆவணங்களைக் கொடுத்து தனியார் பாதுகாவலர் பணியில் இணைந்த காஷ்மீரைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிகார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்ததா? - விசாரணைக்கு உத்தரவு
பாட்னா, நவ. 17: பிகார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலில் இடது கண் இல்லாதது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பால் தாக்கரே நினைவு தினம்: பிரதமர், தலைவர்கள் அஞ்சலி
மும்பை, நவ. 17: சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 12-ஆவது நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரிய பாஜக விரும்புகிறது
புது தில்லி, நவ. 17: மணிப்பூர் மாநிலம் வன்முறையால் தொடர்ந்து பற்றி எரிய வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக விரும்புவதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
ஜார்க்கண்ட் மதரஸாக்களில் வங்கதேசத்தவருக்கு அடைக்கலம்
ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு
ஹரியாணா பேரவைக்கு நிலம் ஒதுக்கவில்லை
பஞ்சாப் ஆளுநர் விளக்கம்
உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
லக்னௌ/ஜான்சி, நவ.17: உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சநாதன தர்மத்தை அவமதிப்பவர்களுக்கு தக்க பதிலடி
மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்
தில்லி அமைச்சர் ராஜிநாமா: ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்
புது தில்லி, நவ.17: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும்,தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவர் விலகினார்.
பருவநிலை மாநாடு: வளரும் நாடுகளுக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லை
இந்தியா கடும் அதிருப்தி
உலகெங்கிலும் தமிழர்களுக்காக பிரத்யேக பொருளாதார மையம்
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் தீர்மானம்
ஜம்மு-காஷ்மீர்: ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்களில் 40,000 இளைஞர்கள் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் தோடா மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு முகாம்களில் இதுவரை 40,000 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி; பால் உற்பத்தியாளர்களுக்கு அளிப்பு
பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு நிதியுதவி முறைகேட்டைத் தடுக்க புதிய திட்டம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமல்
எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு: நேபாளம் – இந்தியா ஒப்புதல்
காத்மாண்டு, நவ. 17: நேபாளம்- இந்தியா இடையேயான எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஒத்துழைக்க காத்மாண்டில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி
அபுஜா, நவ.17: பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகள் தரவரிசை வெளியீடு
சென்னை, நவ.17: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு சாரா மருத்துவர்களே அதிக இடங்களைப் பெற்றுள்ளனர்.
சீன உறவைப் பேண அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்: ஷி ஜின்பிங்
லிமா, நவ. 17: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், இரு நாடுகள் இடையே நிலையான உறவைப் பேண அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.