CATEGORIES
Categorías
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.75 கோடி நில மோசடி
பாஜக நிர்வாகி மனைவியுடன் கைது
கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்படும் கண்ணாடி கூண்டு பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜன.1-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
மெரீனா நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் நீர் மறுசுழற்சி ஆலை அமைக்க திட்டம்
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புதிய நீா் வடிகட்டுதல் மற்றும் நீா் மறுசுழற்சி ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
உலகைப் புரிந்துகொள்ள கல்வி தேவை - இயக்குநர் கே.பாக்யராஜ்
உலகைப் புரிந்து கொள்ள கல்வி கட்டாயம் தேவை என்று திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய 'மகள் இருந்த வீடு' கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை (நவ.21) நடைபெற்றது.
வேளச்சேரியில் 3.5 ஏக்கரில் புதிதாக இரு குளங்கள்
வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க சுமாா் 3.5 ஏக்கா் பரப்பளவில் புதிதாக இரு குளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை கடலோரக் காவல்படை அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர் ஆய்வு
சென்னை கடலோரக் காவல் படை அலுவலகத்தில் கடலோர கிழக்கு பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் ஜெனரல் டோனி மைக்கேல் ஆய்வு மேற்கொண்டார்.
திருமலை: பிப்ரவரி மாத ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
வரும் 2025 பிப்ரவரி மாதம் ஏழுமலையான் தரிசனத்துக்கான ஆர்ஜிதசேவை ஆன்லைன் டிக்கெட்டுகள் வியாழக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்டன.
வீராணம் ஏரி மதகில் உடைப்பு
கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.
வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்
குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவு
பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா
முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
நவ. 25. 26-இல் கனமழை வாய்ப்பு
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் நவ. 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஸ்தூரிக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
தமிழர் தொன்மை அறிய ஆழ்கடலுக்குள் ஆராய்ச்சி
தமிழா்களின் தொன்மை குறித்து மேலும் அறியும் வகையில் ஆழ்கடலிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.
எம் & எம் விற்பனை புதிய உச்சம்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.
தொய்விலிருந்து மீண்ட தொழிலக உற்பத்தி
முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்தியாவின் தொழிலக உற்பத்தி, செப்டம்பரில் 3.1 சதவீதம் நேர்மறை வளர்ச்சி கண்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீர்மானம்: அமெரிக்கா ரத்து
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றிய அம்சம் இல்லாததால், காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதிமொழி
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.
தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் உயிரிழந்தனர்; ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'
ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
விடைபெற்றார் வரலாற்று நாயகன்
டென்னிஸ் உலகில் எந்தக் காலத்திலும் கொண்டாடப்படும் வீரா்களில் ஒருவரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (38), ஓய்வுபெற்றாா்.
ஆசிய கோப்பையை தக்கவைத்தது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 1-0 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பை தக்கவைத்துக் கொண்டது.
வாகன சென்சார்களை உள்நாட்டில் தயாரிக்க முடியும்
இஸ்ரோ தலைவர் சோமநாத்
மும்பையில் வாக்களித்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்
நாட்டின் நிதித் தலைநகராக அறியப்படும் மும்பையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மகாராஷ்டிர தேர்தலில் பிட்காயின் முறைகேடு பணம்: சுப்ரியா சுலே மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி புகார்
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 'பிட்காயின்' முறைகேடு பணத்தை பயன்படுத்தியதாக, தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியின் தேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் உள்ளிட்டோர் மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டிரம்ப்பை எதிர்கொள்ள இந்தியாவுடன் சீனா இணக்கம்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான கொள்கை உள்ளவர் என்பதால், அவரை எதிர்கொள்ள இந்தியாவுடன் சீனா இணக்கமாகச் செயல்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தொழில், வர்த்தக அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்க இந்தியா - சீனா ஒப்புதல்
ஆசியான் பிளஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினர், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் டாங் ஜூன் தலைமையிலான குழுவை சந்தித்துப் பேசினர். அப்போது, பரஸ்பரம் நம்பிக்கையை மீட்டெடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராவோம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராவோம் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீடற்றோர். மூன்றாம் பாலினத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தல்
வீடற்றோர், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நிலத்தடி நீர் மேலாண்மைக்கு மத்திய அரசின் புதிய இணையதளம் அறிமுகம்
புது தில்லி, நவ. 20: நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கான அனுமதி விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்கு, மையப்படுத்தப்பட்ட ‘புஹு-நீர்’ (நிலத்தடி நீர்) இணையதளத்தை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.