CATEGORIES
Categorías
அறவழிக் குரலுக்கு அனுமதி மறுத்தால் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் நிலை ஏற்படும்! -
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? அறவழிக் குரலுக்கு அனுமதி மறுத்தால் - ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் நிலை ஏற்படும்!
இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டமாம்!
இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. இதுகுறித்து 'தி கார்டியன் நாளிதழில் கூறியிருப்பதாவது.
பள்ளிக்கல்வித் துறை (டி.பி.அய்,) வளாகத்துக்கு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் பெயர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டி.பி.அய்.வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்களின் உருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் \"பேராசிரியர் அன்பழகன் கல்விவளாகம்”என்றும் அழைக்கப்படும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை
சென்னை மெரினா கடற்கரை உலகின் 2-ஆவது பெரிய கடற்கரையாகும். மெரினாவில் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விரைவில் மெரினாவில் இலவச இணைய சேவை வழங்க சென்னை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று முன்தினம் (29.11.2022) ஆய்வு செய்தார்.
ரூ.30,000 கோடியில் புதிய குடிநீர் திட்டங்கள் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தமிழ்நாட்டில் 1 கோடி மக்கள் பயன் பெறும் வகையில், ரூ.30,000 கோடி செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் புதியதாக தந்தை பெரியார் - வீரமணியார் அறக்கட்டளை உருவாக்கம்
கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்த தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் - வீரமணியார் அறக்கட்டளை பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம்
\"சமூக நீதி - நேற்று, இன்று, நாளை\"-திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கவுரை
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சீனா
அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா வெளியிட்டது. பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ஆன்லைன் சூதாட்ட மோகம் உயர்நீதிமன்றம் கருத்து
ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், இதற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா - புத்தாக்கப்பயிற்சி
தேசிய மருந்தியல் வாரவிழாவினை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரி, தமிழ்நாடு மருந்தியல் கழகம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல சங்கம் இணைந்து 26.11.2022 அன்று பதிவுற்ற மருந்தாளுநர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியினை நடத்தியது. இப்பயிற்சிக்கான துவக்கவிழா காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
தேவை - உடற்பயிற்சி நிலையங்கள்
திருப்பூர் மாநகரில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள் குறைந்த விலையில் விற்பனை
அமைச்சர் முத்துசாமி
டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது
இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசு கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு முழுவதுமிருந்து பிற் படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கில் தமிழர் தலைவருக்கு 90ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து
கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் - டிசம்பர் 2ஆம் நாள் என கருத்தரங்கினை ஏற்பாடு செய்த வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் அறிவித்ததும் கருத்தரங்கமே மகிழ்ச்சிப் பெருவெள்ளம் கண்டது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயரா! சினம் கொண்டு மக்கள் அகற்றினர்
திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழை மறைத்து ஹிந்தியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் காசி தமிழ்சங்கமம் குறித்த ஹிந்தி பெயர்பலகையும் அகற்றப்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4 லட்சம் கை அறுவை சிகிச்சை சாதனை
சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4.09 லட்சம் கை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சல்!
எதிர்க்கட்சி பற்றி முதலமைச்சர்
திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட கழகம் சார்பில் சிந்தல்பாடியில் 25-11-2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
காசியில் கூடிய காவிகளின் கனவுக் கூட்டம்
'இந்து', 'தினமலர்' ஏடுகளில் விளம்பரம் 'காசியில் தமிழ் சங்கமம்' 2500 பேர் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். 'போக்குவரத்து தங்குமிடம் சுற்றுலா இலவசம்' என்ற விளம்பரம் - நாக்கில் தேனைத் தடவியது அவ்விளம்பரம் - அப்போதே பலருக்கும் தெரியவில்லை; இது ஒன்றிய அரசுப் பணத்தில்காவிகளின் பஜனைமடம், தமிழுக்கும் இதற்கும் வடமொழியில் சொல்வார்களே 'ஸ்நானப் பிராப்தி' என்று - எவ்விதத் தொடர்பும் இல்லை என்பார்களே, அது போன்றதே!
திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஓர் உயிர் பறிபோனது: வைகோ
நாளை (1.12.2022) திராவிடர் கழகத்தின் சார்பில் ஆளுநரைக்கண்டித்து நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பலம் என்னும் இரும்புக்கோட்டை தி.மு.க. அரசு தக்கைகளால் அதனைத் தகர்க்க முடியாது!
கொள்கையைக் கைவிட்டு, கட்சியையும் காப்பாற்ற முடியாத அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கிறது பி.ஜே.பி.!
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு
ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 61ஆவது தேசிய மருந்தியல் வார விழா
இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து 61ஆவது தேசிய மருந்தியல் வார விழாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
அதானி துறைமுக எதிர்ப்பு கேரளாவில் போராட்டம் வலுக்கிறது
கேரள மாநிலத்தில் அதானி குழுமம் ரூ.7,500 கோடியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மூத்த குடிமக்கள் சலுகை ரத்து எதிரொலி
ரயில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
மத்திய காவல்படையில் பெண்கள்
மத்திய ரிசர்வ் காவல்படையான சி.ஆர்.பி.எஃப்.,பில் முதல் முறையாக இரண்டு பெண்கள் அய்ஜிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுதியான நடவடிக்கைக்கு அதிகம் சிந்திக்கும் பெண்கள்
பிங்க் ரிக்ஷா