CATEGORIES
Categorías
தாய்லாந்தின் புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாள் விமான சேவை தொடக்கம்
எத்தியோப்பியா அடீஸ் அபாபா நகருக்கும் கூடுதல் விமானம்
பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் தமிழகத்தில் 150 தீ விபத்துகள் சென்னையில் 48 விபத்துகள்
தீபாவளி பண்டிகையான நேற்று பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் தமிழகத்தில் 150, சென்னையில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
வேளச்சேரியில் கார் கவிழ்ந்து விபத்து சின்னத்திரை நடிகரின் மகன் பலி
நண்பர்கள் படுகாயம்
சென்னை விமான நிலையத்தில் மத்திய உளவு பிரிவு எஸ்.ஐ.திடீரென மயங்கி விழுந்து மரணம்
சென்னை விமான நிலைய பணியில் இருந்த மத்திய உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திடீரென உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.2) நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில் லடாக்கில் மீண்டும் இந்திய ராணுவம் ரோந்து
சீன வீரர்களுக்கு தீபாவளி ‘ஸ்வீட்’
நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ₹4 லட்சம் கோடி
துணி, பட்டாசு, லக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம் | வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளாக, கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டு நடுத்தர மக்களாக உருவெடுத்தனர்.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரிப்பு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் அமல்
புதுடெல்லி: கடந்த இரு வாரங்களில் நாட்டின்பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் 510க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் விமான பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தாத ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு வரும் நவ. 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
போலி என்சிசி முகாம் நடத்திய 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் நிறுத்தம் அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு 11.9 கோடியில் சிமென்ட் கால்வாய்
மதுரை: மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் செல்லூர் கால்வாயில் இருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடியில் சிமென்ட் கால்வாய் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார்.
சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை முறையாக வழக்கை விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
நாகப்பட்டினம், அக்.31: சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வரும் 7ம்தேதி கடைசிநாள் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு இன்ஜினியர்கள் ஆர்வம்
சேலம்: சேலத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு பட்டதாரிகள், இன்ஜினியர்கள் அதிகளவு விண்ணப்பித்து வருகின்றனர்.
மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டம்: இலங்கை அதிபர் ஆலோசனை
ராமேஸ்வரம்: மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டத்தை நடத்த இலங்கை அதிபர் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
தேவருக்கு பெருமை சேர்க்கும் திமுக அரசு
ராமநாதபுரம்: தேவருக்கு பெருமை சேர்க்கும் அரசு திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து கழக பணியாளர்களின் போனஸ் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுகிறார்
சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாமக நிறுவன தலைவர் ராமதாசின் அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 அரசு போக்குவரத்து கழகங்களில் 2.877 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு போக்குவரத்து துறை தகவல்
அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை போக்குவரத்து துறை நிரப்பி வருகிறது.
60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை தீபாவளிக்கு நகை வாங்க காத்திருந்தோர் ஏமாற்றம்
தீபாவளி சமயத்தில் நகை வாங்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே வந்து கொண்டிருக்கிறது. நேற்றும் தங்கம் விலை சரவனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
சென்னை: அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு, கார வகைகள் 115 கோடிக்கு விற்பனை
கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிலையங்களில் ரூ.115 கோடி அளவிற்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞருக்கான வசதியை மேம்படுத்த குழுவை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை, அக். 31: சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார்வை கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞாயிறு அட்டவணைப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு
சென்னை, அக். 31: ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு முன்னேற்பாடு பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை, அக். 31: தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 மேலாண்மை அவசரகால மையத்தில் தீபாவளி சிறப்பு முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் உடனிருந்தோர், டன் அமைச்சர் மா.சுப் பிரமணியன், ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன், மருத்துவர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்
புதுடெல்லி: ‘முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும், தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் செய்வது குறைக்கப்பட வேண்டும், எத்தனை முறை நீட் தேர்வை எழுதலாம் என்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்’ என ஒன்றிய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
கடைசிநாளில் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் பட்டாசு, சுவீட் விற்பனை அமோகம் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு