நாடக ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்டவர் கிரேஸி மோகன். 1979-இல் கிரேஸி மோகனும், அவரது நண்பர்களும் இணைந்து தொடங்கிய 'கிரேஸி கிரியேஷன்ஸ்' எனும் நாடகக் குழுவினர் 'முழுக்க, முழுக்க நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை' என்ற லட்சியத்துடன் எழுதப்பட்ட 'அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்' எனத் தொடங்கி 'சாக்லேட் கிருஷ்ணா' வரை 18 நாடகங்களையும் உலகம் முழுவதும் 6500 முறை மேடைகளை ஏறி சாதனை புரிந்துள்ளனர்.
இந்த ஆண்டு டிசம்பர் சீசனில் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவின் மிகச் சிறந்த ஆறு நாடகங்கள் 'மார்கழி காமெடி கலாட்டா' என்ற பெயரில் நடக்கவுள்ளன.
இதுகுறித்து நாடகங்களின் கதாநாயகனும், கிரேஸி மோகனின் சகோதருமான மாது பாலாஜியிடம் பேசியபோது:
“சென்னை மந்தைவெளி சொக்கலிங்கம் தெருவில் வசித்த பன்னிரெண்டு இளைஞர்கள் பரம கிரிக்கெட் விசிறிகள். அவர்கள் உருவாக்கியதுதான் 'கிரேஸி கிரியேஷன்ஸ்'.
கிரேஸி மோகன் ஆரம்பத்தில் எஸ்.வி. சேகருக்கு 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாகம்', 'டெனன்ட் கமாண்ட்மென்ட்ஸ்', 'ஒன் மோர் எக்சார்சிஸ்ட்', காத்தாடி ராமமூர்த்திக்கு 'ஹனி மூன் கப்புள்', 'பதிபத்னி - அவுர் மா' ஆகிய நாடகங்களை எழுதி கொடுத்தார். அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
அந்த நேரத்தில் எஸ்.வி.சேகருக்கும், கிரேஸி மோகனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிய முடிவெடுத்தார்கள். அந்தச் சமயத்தில் முதலில் சொன்ன நண்பர்களுடன் திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அங்கே பேசிக்கொண்டிருந்த போதுதான், 'நாடகக் குழு துவக்கினால் என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.
விவேகானந்தா கல்லூரியில் நான் படித்தபோது, கிரேஸி மோகன் நாடகம் எழுதிக் கொடுத்து, போட்டிக்காக நான் கதாநாயகனாக நடித்த அனுபவம் உண்டு.
Esta historia es de la edición December 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சரித்திரம் பேசும் வெல்ஸ்!
பிரபல எழுத்தாளர்கள் லூசியன், ஸ்விப்ட், மேரி ஷெல்லி, புல்வர், லிட்டன் உள்ளிட்டோர் இதில் முன்னோடிகளாக விளங்கினாலும், 19– ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் 'சயின்ஸ் ஃபிக்ஷன்' முழு உருவைப் பெற்றது. இதில், 'ஜூலஸ் வெர்னாவின்' படைப்புகள் பிரபல மானவை. ஆனாலும், இத்துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர் 'ஹெச்.ஜி. வெல்ஸ்' என்னும் ஆங்கில எழுத்தாளர்தான்.
நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..!
கிரேஸி மோகன் தலைமையிலான 'கிரேஸி கிரியேஷன்ஸ்' நாடகக் குழு, 1979 ஆம் ஆண்டு முதல் 18 நாடகங்களை உலகம் முழுவதும் 6500 முறை மேடை ஏற்றி சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில், அக்குழுவின் சிறந்த ஆறு நாடகங்கள் 'மார்கழி காமெடி கலாட்டா' என்ற பெயரில் அரங்கேறவுள்ளன.
தந்துவிட்டேன் என்னை!
புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் என்றாலே, அவரது பத்து விரல்களின் நர்த்தனங்களும், ஒலி நயத்துடன் ஒத்திசைந்து அங்கும் இங்கும் ஆடும் அவரது நீண்ட தலைமுடியும் நினைவுக்கு வரும்.
நெகிழிப் பைகளில் சூடான உணவு விற்பனை: 11,025 கடைகளுக்கு ரூ.14.62 கோடி அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு, ரூ.14.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல்
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாகித்திய அகாதெமி விருதாளர் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி வலியுறுத்தினார்.
இறை இலக்கியத்தைத் தவிர்த்து தமிழ் இசை பற்றி பேச முடியாது
இறை இலக்கியத்தைத் தவிர்த்துவிட்டு தமிழ் இசை பற்றி பேசவோ எழுதவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விலை 11 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருள்கள் குறித்து காலாண்டு அறிக்கை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு
காலாவதியான மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் குறித்த முழு விவரங்களை தங்களது வலைதளத்தில் ஒவ்வொரு காலாண்டும் கட்டாயமாகப் பதிவிட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு துறை ஒழுங்காற்று அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,287 கோடி டாலராகச் சரிவு
கடந்த 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,286.9 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.