ஆரைக்கல் என்ற பெயருக்கு முன்பாக நாமகிரித்தாயாரின் திருநாமத்தை இணைத்து நாமகிரிஆரைக்கல் என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் நாமக்கல் என்று உருமாறியதாக கூறப்படுகிறது. இப்படி தெய்வாம்சம் நிறைந்த நாமக்கல்லில் 246 அடி உயரம் கொண்ட ஒரே கல், மலையாக காட்சியளிக்க அதன் உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு கோட்டை. கோட்டை யின் மேற்குத் திசையில் குடவரை சிற்பக் கலையின் உச்சம் தொடும் நரசிம்மர் கோயில். இவை இரண்டிற்கும் நடுநாயகமாக, 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருட்பாலிக்கி றார் தேசம் முழுவதும் கொண்டாடும் நாமக்கல் ஆஞ்சநேயர்.
வானமே கூரையாக திறந்தவெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க் கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக் கப்பட்டது என்பது தனிச்சிறப்பு. கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் அஷ்டபுஜநரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், உலகளந்த பெருமாள் சிற்பங்கள் கவனத்தை ஈர்க்கிறது.
"புராண காலத்தில் இரண்யவதத்திற்குப் பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண் டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலயக் குளத்தில் நின்று கணவரை நினைத்து தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலயக் குளத்தைக் கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார். தாகம் தீர்த்த அனுமனால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச்செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருட் பாலித்து வருகிறார். இப்படி நாமம் சூட்டிய நரசிம்மர் மலையாக அமர்ந்த இடமே "நாம கிரி" என்று போற்றப்பட்டது. அவருடன் அருட்பாலித்த லட்சுமி தேவியை நாமகிரித் தாயார் என்று தேவர்கள் வணங்கினர். நாமகிரி, அரங்கநாதர் ஆரைக்கல் என்று மருவிய பெயர், காலத்தின் சுழற்சியில் நாமக் கல் ஆனது. கல்லாய் மாறிய நரசிம்மர், குடவ ரைக் கோயிலில் அமர்ந்து அருட்பாலிக்க, கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் நின்று அவரைக் கைகூப்பி வணங்கினார் ஆஞ்சநேயர்.
கடமையை முடித்து திரும்பிய ஆஞ்சநேயர்
Esta historia es de la edición Dec 16-31, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición Dec 16-31, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.