பெருமை வாய்ந்த பாரத புண்ணிய பூமியில், இந்து தர்மத்தை வலுப்படுத்திய எத்தனையோ மகான்கள் இருந்தாலும், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று ஆச்சாரியர்களுக்கு இருக் கும் பெருமையும், கீர்த்தியும் மகத் தானது. நம் இந்து தர்மத்தை ஆறு வகையாக வகைப்படுத்தி, புறச்சமயங்களின் செல்வாக்கை ஓடஓட விரட்டி, புண்ணிய உயிர் கொடுத்து, உன்னதமான ஸ்தா னத்தை அடைந்தவர், ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர். அவர், பரம சிவனின் அவதாரம்! எல்லாத் தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து, நாராயணனின் அடியவர்களுக்கு அளப்பரிய பெருமைகள் சேர்ந்து, சரணாகதி தத்துவத்துக்குப் புத்துயிர்கொடுத்துக் கோயில் களுக்கெல்லாம் மறுவாழ்வு கொடுத்தவர், ஸ்ரீராமானுஜர். அவர், ஆதிசேஷனின் அவதாரம்!
இந்து தர்மத்தின் இலக்கியங்களுக்கெல் லாம் மனம் போனபடி வியாக்கியானம் செய்து, அதன் காரணமாகத் தெய்வ நம்பிக்கை குறைந்து, இறையம்சம் மறைந்து, வந்த நேரத்தில், 'ஹரியே சர்வோத்தமன்' (ஹரியே அனைத்துமானவன்) என்று நிலைநாட்டி, இந்து தர்மத்தின் விக்கிரக ஆராதனைக்கு மகிமை ஏற்படுத்தியவர், மத்வாச்சாரியார்! மகாவிஷ்ணுவின் அம்ச மான வாயுதேவன் ஆன முக்யபிராண னின் (அதாவது மூச்சுக் காற்று) அவதாரம் தான் மத்வாச்சாரியார். அனுமன், பீமன் ஆகியோர் மத்வரின் முப்பிறவிகள்" என துவைத சித்தாந்தம் கூறுகிறது.
மத்வரின் காலம் 1238-1317 என்று குறிப்பிட் டிருக்கிறார்கள். அவர் இவ்வுலகில் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடம் பகுதியில், உடுப்பி அருகே இருக்கும் பாஜகா க்ஷேத் திரத்தில் மத்வர் அவதரித்தார். மத்கேய பட்டர்-வேதவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு வாசுதேவன் என்று பெற்றோர் பெயர் இட்டனர். பிற்காலத்தில் அவருக்குப் "பூர்ணப் பிரக்ஞர்' என்றும், "ஆனந்த தீர்த்தர்" என்றும் சிறப்புப் பெயர் கள் வழங்கப்பட்டன. அனுமன், பீமன் வழி வந்த முக்கிய பிராணரின் அவதாரமான மத்வருக்கு அக்காலத்தில் வழங்கிய சித் தாத்தங்கள் திருப்தி தரவில்லை. அவரு டைய தேடல்களுக்குப் பதில் கிடைக்க வில்லை. பதினாறாவது வயதில், சந்நியாசம் மேற் கொண்டுவிட்டார். உடுப்பி அருகில் இருந்த ஒரு ஆசிரமத்தில் அச்சுதபிரேட்சர் எனும் குருவிடம் பயின்றார். ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்று என்பதையும், உலகம் மாயை என்பதையும் மத்வரால் ஏற்க முடியவில்லை.
Esta historia es de la edición October 01, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 01, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.