முதலாமவர் தெய்வப்புலவரத் திருவள்ளுவர். இரண்டாமவர் தெய்வச் சேக்கிழார். கற்போரை தெய்வநிலைக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கியத்தைத் தந்த காரணத் தால் இவர்கள் இருவருக்கும் 'தெய்வ' அடைமொழியை ஆன்றோர் உலகம் அளித்துள்ளது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
என்பது இலக்கணம் என்றால், இந்த இலக்கணத்தை விவரிக்கும் இலக்கியம் பெரியபுராணமாகும்.
இறைவனை வழிபடுகிறோம்; இறையடியார்களையும் வழிபடுகிறோம். வழிபடுவது மட்டுமே முக்கியமல்ல; மாறாக, இறைநிலையில் கலந்து அம்மயமாதல் மிகவும் அவசியமாகும்.
பக்தி என்பது படிநிலை; முக்தி என்பதுதான் முடிநிலை. அவ்வகையில், படிநிலையில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்து இறைநிலையை எய்தியவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் ஆவார்கள். அந்த அடியார்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள நூலே பெரியபுராணமாகும். இதை இயற்றிய தெய்வச்சேக்கிழார் இந்த நூலுக்குச் சூட்டிய பெயர் 'திருத்தொண்டர் புராணம்’ என்பதாகும். ஆனால், இதன் தன்மையால் 'பெரியபுராணம்' என்னும் பெயரை இது பெற்றது. இந்த நூலில் 63 நாயன்மார்கள் மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, இடம், மக்களின் வாழ்வியல், அரசாங்கம், சமயம், பண்பாடு என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Esta historia es de la edición May 16, 2023 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 16, 2023 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.