CATEGORIES
Categorías
இந்தியாவை சுற்றி வந்த சீமா பவானிகள்!
36 பெண்கள் இரண்டு இரண்டாக சாலையில் மோட்டார் பைக்கில் தங்களின் ஹெல்மெட் மற்றும் உடையில் இந்தியக் கொடியினை ஏந்தி வந்த அந்த கம்பீரமான நிகழ்வு கடந்த மாசம் நிகழ்ந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது இந்த ஊர்கோலம். இந்திய ராணுவப் படையின் ஒரு துணைப்படை தான் பி.எஸ்.எஃப் என்று அழைக்கப்படும் எல்லை காவல் படை.
தாய்ப்பால் என்னும் அமிர்தம்!
ஒரு பெண் ஆனவள் தன் தாய்ப்பாலைக் கொடுத்து தனது குழந்தையின் அளித்த அற்புத வரமாகும். செயற்கையான பவுடர் பால் (Formula milk) குடித்து வளரும் குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாளின் முதல் ஆண்டில் குறைவான தொற்று மற்றும் ஒவ்வாமையே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பச்சிளம் குழந்தைகளுக்காக தாயிடம் இயற்கையாக சுரக்கும் தாய்ப்பாலில் சரியான விதத்தில் ஊட்டச்சத்துக்களும் நோய்த் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கியமான புரதங்களும் உள்ளதால் இது அக்குழந்தைகள் பிற்காலத்தில் ஆரோக்கியமாக வளர பெரிதும் உதவுகிறது.
என் கனவு கிராண்ட்ஸ்லாம்...
நம் நாட்டில் எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் அடுத்த நிமிடமே மிகவும் பிரபலமாகிவிடும். ஆனால் அதுவே, மற்ற விளையாட்டுகளைப் பொறுத்த வரை மலை அளவு சாதனை செய்திருந்தாலும் அவர்களது பெயர் கூட வெளியே தெரிவதில்லை.
உலகமெங்கும் செல்லும் சிந்தாதிரிப்பேட்டை குடை!
காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை... ஓவியக் கலை. எல்லைகளை எல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை இந்த ஓவியக்கலைக்குண்டு. ஓவியம் பேசும் செய்திகள் பல. உணர்த்தும் கருத்துக்களோ மிகப்பல. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து அதன் மூலம் வெளிப்படுத்தினர். நூற்றாண்டுகள் ஆனாலும் பாறைகளில் தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்றும் அழியாமல் இருக்கிறது. இவை தொல்பொருள் ஆய்வுகளுக்கும், இலக்கியச் சான்றுகளுக்கும் மிகவும் முக்கிய ஆவணங்களாக இன்றும் திகழ்ந்து வருகிறது.
ஃபேஷன் A-Z
ஃபேஷன் என்றாலே பெண்களுக்கானது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. தொன்றுதொட்டு வரலாற்று காலத்தில் இருந்தே ஃபேஷன் பெண்களுக்கு மட்டும் என்றே பல உடைகள் மற்றும் டிசைன்களை அந்த துறை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளது.
முதல் பெண் துபாஷி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துபாஷி பொறுப்பிற்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மொழிபெயர்ப்பாளராக துபாஷிகள் நியமிக்கப்பட்டனர்.
தமிழிலும் ஆங்கிலம் கற்கலாம்!
வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது.
சரும பிரச்னையை போக்கும் உத்தவேதீஸ்வரர்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் நாகப்பட்டின மாவட்டம், குத்தா லத்தில் அமைந்துள்ள ஸ்ரீஉத்தவேதீஸ்வரர் ஆலயம் சரும நேய்களை தீர்க்கும் சித்தி பெற்ற ஆலயமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஈஸ்வர னுடன் இறைவி அரும்பன்ன வளமுலையாள் பக்தர்களுக்காக அருள்பாவித்து வருகிறாள்.
வாழ்க்கை+வங்கி = வளம்!
வங்கிகளில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் நமது உரையாடலுடன் கலந்து நம்மோடு உலவுவது மகிழ்ச்சிதான். ஆனாலும் சில சொற்களின் பொருளைத் தெரிந்து கொள்ளாமல் நகர்வது படகு மற்றும் துடுப்புடன் கற்பனைக் கடலில் பயணிப்பதாகும்.
ஹேர் கலர்
இன்றைய ஆண், பெண் இருவரின் முக்கியத் தேவைகளில் ஒன்று ஹேர் கலர். நான் மேக்கப் எல்லாம் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட தங்களின் தலைமுடி மட்டும் கருப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
வறண்ட சருமத்தை வெல்வோம்!
வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறிவிட்டால், சருமம் தொடர்பாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வறண்ட சருமத்தை பாதுகாத்து, அழகான தோற்றத்தை பெற முத்தான எளிய வழி முறைகள்.
சைக்கிள் ஓட்டுங்க ஜூஸ் குடிங்க!
“கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், அது நமக்கு பாடங்களையும் கற்றுத்தந்துள்ளது.
சரும பராமரிப்பு உணவுகள்!
ஊட்டச்சத்து ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஆரோக்கியமற்ற உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும், உடல் எடையை அதிகரிக்கும்.
என் பாதை சமூகத்திற்கானது! சமூக சேவகி ஷீஜா
ஒவ்வொரு முறை பள்ளிகள் திறக்கும் போது ஆசிரியை பொதுவாக மாணவ, மாணவிகளிடம் கேட்கும் ஒரே கேள்வி, “நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய்?' என்பது வாகத்தான் இருக்கும். அப்படி ஒரு ஆசிரியை கேள்வியினை கேட்க பல மாணவிகள் டாக்டர், இன்ஜினியர், பைலட் என்று பதிலளிக்க. ஒரு மாணவி மட்டும் தான் சமூக சேவகியாக போவதாக தெரிவித்துள்ளார். அன்னை தெரசாவைப் போல் இந்த சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று பள்ளிப்பருவத்தில் தன் கனவினைப் பற்றி கூறியவர் அதனை நிஜத்திலும் நிகழ்த்தியுள்ளார்.
அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி?
இத்தனை நாட்களாக ஐ.டி ஊழியர்களை வீட்டிலி இருந்தே வேலை செய்ய சொல்லிய அலுவலகங்கள், இப்போது தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் பெரும்பாலான நிறுவனங்களின் அலுவலகம் திறக்கப்பட்டு இனி மக்கள் ஆபீஸுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
ஃபேஷன் A-Z
பெண்களின் இடையினை உடுக்கைக்கு இணையாக கவிஞர்கள் வர்ணிப்பது வழக்கம்.
ஃப்ரீடம் ஃபைட்
தி க்ரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தாக்கமே இன்னும் குறையாமல் இருக்கும் போது, இயக்குனர் ஜியோ பேபி, மீண்டும் 'ஃப்ரீடம் ஃபைட்' எனும் ஆந்தாலஜி திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்துள்ளார்.
அன்றாட சேமிப்பிற்கு என்ன வழி?
விலைவாசி ஏற்றம் நாள் தோறும் ராக்கெட் போல வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை நாம் கண்கூடா பார்த்து வருகிறோம்.
என்னுடைய இலக்கு சிங்கார சென்னை 2.0 சென்னை மேயர் பிரியா ராஜன்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியது.
கர்ப்ப கால முதுகுவலி... அச்சம் வேண்டாம் அவர்ட்டாய் இருப்போம்!
'தாய்மை என்பது எத்தனைப் பெரிய வரம்' என்று எல்லா பெண்களும் எண்ணுவோம் தானே... அதே போன்று கருவுற்றிருக்கும் காலத்தில் வரக்கூடிய உடல் நலச்சுமைகளையும் குழந்தை பெற்றெடுத்தவர்கள் எளிதில் மறக்க முடியாத அனுபவம்தான்.
பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்?
நாம் அனைவருமே நாட்கள் ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.
பிஎம்எஸ் (Perimenopausal Syndrome-PMS) என்னும் மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகள்
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்ற அவ்வையாரின் வாக்கினில் அடுத்த வரியாக பெண்ணாய் பிறப்பது அரிது அதனினும் பெண்ணாய் பிறந்து பல உடல் மற்றும் மன ரீதியான சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடுவது ஒரு வகை வரப்பிரசாதமே என சேர்த்துக் கொள்ளலாம்.
மக்கள் விரும்பும் செய்தி வாசிப்பாளர்! சமீனா நட்சத்ரா
துல்லியமான தமிழ் உச்சரிப்பு, மிடுக்கான தோற்றம், வசீகரிக்கும் குரல், எந்த இடத்திலும் தடங்கல் இல்லாத வாசிப்பு, செய்திகளின் தன்மைக்கு ஏற்ப உணர்வுகளின் வழியாக சொற்களை வெளிப்படுத்தும் தனித்துவம் என சமீனா நட்சத்ராவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
முதுமையில் பென்ஷன்!
அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களின் குடும்பத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை பென்ஷனாக வழங்கப்படும்.
விருப்பம் போல் வாழ்க்கையை வாழுங்கள்! பிளஸ் சைஸ் மாடல் திவ்யா
குண்டாக இருக்கும் பெண்களை பெரும்பாலும் அவர்களின் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்வது வழக்கமாகி வருகிறது.
எம்மொழியில் தமிழ் மொழியை வாசிப்போம்
கொரோனா ஊரடங்கில் பல குழந்தைகள் தொழில் நுட்பத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர்.
கிச்சன் டிப்ஸ்
தினசரி உணவுக் குறிப்புகள்.
கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!
குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள்.
இயக்குநர் மிஷ்கின் எங்கக் கடையில் 50 நாட்கள் சாப்பிட்டார்!
ஒருவரின் மிகப்பெரிய பலமே சுவையான உணவு தான். அதற்காகத்தான் நாம் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம்.
தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்!
ஃபேஷன்... எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக் கூடிய விஷயம்.