CATEGORIES
Categorías
உணர்வுகள் முடிவதில்லை...!
பயணிகள் கூட்டத்தால் பிதுங்கி வழிந்த அந்த டவுன் பஸ்ஸை விட்டு இறங்கினாள் சுகந்தி. கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்தில் இருந்து விடுபட்டாள். பஸ்ஸூக்குள் கூட்டமா அது? கால் லைக்க இடமில்லை. ஒற்றக்காலில் நீன்று கொண்டு மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வந்து இறங்கியாயிற்று. கால்கள் இரண்டும் விண்விண்னென்று வலித்தன. தினசரிப் போராட்டம் இது! ஸ்கூட்டியில் வேலைக்குப் போகலாம் என்றால் வீட்டுக்கும் சுகந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கும் தூரம் அதிகம். தினசரி டூவீலரில் போய் வந்தால் அலுத்துப் போய்விடும். அதற்கு டவுன் பஸ்ஸில் போவது சிறந்தது. இவற்றை எல்லாம் பெரிதாக எடூத்துக் கொண்டால் வேலைக்குப் போகாமல் நின்று விட வேண்டியதுதான். உலகத்தின் சுழற்சி நிற்கலாம். ஆனால் சுகந்தியின் சுழற்சியை நிறுத்த முடியுமா?
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீர், காற்று மாசு!
பஞ்ச பூதங்களும் மாசுற்று வருகின்றன. இதனால் உயிர் வாழ தகுதியற்ற இடமாக பூமியை நாம் உருக்குலைத்து வருகிறோம். இதில் எனக்கு பங்கு இல்லை என்று யாரும் நழுவி விட முடியாது. சிலருக்கு பங்கு குறைவாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் யாரும் இதில் எனக்கு தொடர்பு கிடையாது என்று ஒதுங்கி விட முடியாது. மண்ணும், நீரும், காற்றும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றன.