வேதங்கள் ஆட,மிகு ஆகமமாட,கீதங்கள் ஆட, கிளர் அண்டம் ஏழாட, பூதங்கள் ஆட, புவனம் முழுதாட, நாதங் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே... என்று திருமூலர் வர்ணிக்கும் ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜப் பெருமானுக்கு உகந்த நாள் ஆதிரை நன்னாள் அதாவது, திருவாதிரை என்று போற்றப்படும் திருநாள்! சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை. அதனாலேயே அவருக்கு ஆதிரையான் என்ற திருநாமம் உண்டு.
திருவாதிரைத் திருவிழா ஆருத்ரா தரிசன விழாவாக எங்கும் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம் தான். அவர் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. நமது இயக்கத்தின் ஆதார சுருதியே அவரது இயக்கம்தான்! மார்கழி மாதம் தட்க்ஷிணாயத்தின் இறுதி மாதமாகும். இக்காலத்தில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் கூறுவதற்கேற்ப மார்கழி மாத பூஜை பெருமாள் கோவில்களிலும் சிவனார் மனம் குளிர சிவன் கோவில்களிலும் விடியற் காலையில் நடைபெறுவது வழக்கம். இவ்வதிகாலை வழிபாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமை ஸ்ரீ ஆண்டாள், மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய இருவரையும் சேரும். அவர்கள் இயற்றிய திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களில் அரியையும் அரனையும் போற்றித் துதித்து அந்த பக்தி மழையில் நம்மையும் நனையச் செய்கின்றனர்.
திருவெம்பாவையில் மாணிக்க வாசகர்,பெண்கள் வீடுவீடாகச் சென்று தோழிகளின் துயில் மயக்கத்தை தெளிவித்து, தேசன், சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய் என்று பாடி கருணைக் கடலான தில்லை நாதனை சரணடையச் செய்கிறார். திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் ஓங்கி உலகளந்த உத்தமன்பேர்பாடி பாவை நோன்பு பூண்டு,கோல விளக்கே!, கொடியே!, விதானமே! ஆலின் இலையாய்! அருளேலோரெம்பாவாய் என்று மனமுருகிப் பாடி, பரந்தாமனைக் கைப்பற்றுகிறாள். இரண்டு பாசுரங்களும் பக்தியுடன் மார்கழி நீராடி, இறைவனை அடையும் மேன்மையை எடுத்துரைக்கின்றன.
Esta historia es de la edición January 2023 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 2023 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.