Intentar ORO - Gratis
ரஜினி - கமல் வெற்றிப் படங்களின் கதாநாயகி ஸ்ரீபிரியா!
Penmani
|August 2024
உலகம் எனும் நாடக மேடையில் எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நடிகர்கள். திரைத்துறையில் ஜொலித்தவர்கள், மின்மினிப் பூச்சிகளாக மின்னியவர்கள் பலர்.
-
அதில் விடிவெள்ளி தாரகையாக திகழ்ந்தவர் தான் ஸ்ரீபிரியா.
1970-1980களில் முன்னணி நடிகையாகி பல்வேறு வேடங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியா. தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள படங்களில், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
இயக்குனர் பி. மாதவன் 1974ஆம் ஆண்டு ஸ்ரீபிரியாவை முருகன் காட்டிய வழி என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத் தினார். பின்னர் 1974- ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் நடித்தார்.அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து ஸ்ரீபிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத் தியிருந்தார். அப்போது கமல்ஹாசன் அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.
ஸ்ரீபிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர் களின் படங்களிலும் நடித்தார். மற்றும் ரஜினியுடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து ஸ்ரீபிரியா நடித்துள்ளார்.
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வதுஅவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். இப்படத்தின் சிறந்த நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார்.
ஸ்ரீபிரியா தேசிய விருதுகள் குழுவின் நடுவர் குழுவில் இருந்தார். மற்றும் மாநில விருதுகள் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
ரஜினிகாந்தின் பல படங்களில் அவர் கதாநாயகியாக 28 படங்களில் நடித்தார். 30 படங்களுக்கு மேல் கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவிக்கு அடுத்தபடியாக கமல்ஹாச னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படங்களின் பட்டியலில் இளமை ஊஞ்சலாடுகிறது.ஆடு புலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும், அவள் அப்படித்தான் மற்றும் நட்சத்திரம் ஆகியவை அடங்கும்.
ஸ்ரீபிரியா நடிகை லதாவின்தம்பிராஜ்குமார் சேதுபதி என்னும் நடிகரை மணந்தார்.Esta historia es de la edición August 2024 de Penmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Penmani
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size
