CATEGORIES
Categories
ஆக்டோபஸ் ஆசிரியை!
நாய், பூனை, குதிரை, யானை, டால்பின் மனிதர்களுக்கும் இடையேயான என்று எண்ணற்ற உயிரினங்களுக்கும் பிணைப்பை கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் சிங்கம், புலிகள் கூட அரிதாக மனிதர்களுடன் பழகும் காட்சிகள் உண்டு. ஆனால் கடலில் வாழும் ஆக்டோபஸ், அதனுடைய உலகத்திற்குள் மனிதன் ஒருவனை அனுமதித்து அவனுடன் தொட்டு விளையாடும் நிகழ்வுகள், இதுவரை கேள்விப்படாதவை.
மென்பொருள் அதிபரின் கதி!
கணினியில் புழங்கும் எல்லோருமே கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளான Mcafee பற்றிக்கேள்விப்பட்டிருப்போம். பயன்படுத்தி இருப்போம். இதை உருவாக்கியவர் பெயர் ஜான் மெக்காபி. அவர் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவர் சமீபத்தில் ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகர சிறையில் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இங்கிலாந்தில் பிறந்தவரான மெக்காபி, நாசா, ஜெராக்ஸ், போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்தவர்.
“கவனித்துத்தான் கற்றுக்கொண்டேன்!
"சினிமாவை நேசித்து, ரசித்துத்தான் இதற்குள் வந்திருக்கின்றேன். சினிமாவிற்குள் வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதம். அதனால், இதை ஒரு கடமையாகவோ, வேலையாகவோ பார்ப்பதில்லை. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துத்தான் எடுப்பேன்!'' என்கிற தேனி ஈஸ்வர், அவதானிப்புமனிதனை எந்தளவிற்கு உயர்த்தும் என்பதற்கு ஓர் அடையாளம். தேடலாலும், தீரா வாசிப்பாலும் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு ஒரு நிகழ்கால நம்பிக்கை.
வாய்ப் புண்ணுடன் வரவேற்ற நல்லபாம்பு!
பணிக்கு சேர்ந்த முதல்நாள் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு சக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு உள்ளே சுற்றி வந்தேன். ஊர்வன வகை விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைத் தாண்டுகையில், 'சார்,' என்று அழைத்தவாறு அங்கிருக்கும் பாம்புகளைப் பராமரிக்கும் பெண் உதவியாளர் வந்தார். அருகில் வந்த பிறகுதான் அவர் கையைப் பார்த்தேன் . நீளமான நாகப்பாம்பு . பார்த்த உடன் பகீர் என்றது
ரவநேரம்
அழைப்பு மணி அடிக்கிற சத்தம் ழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். ஏன் இவ்வளவு லேட்டு? என்று கேட்டாள்.
எப்படிச் சம்பாதிக்கலாம் பணத்தை?
படித்து, வேலைக்குப் போய்க் கூட மிகப் என்று செய்து காட்டிக்கொண்டிருப்பவர், 49 வயதாகும் நம் தமிழர், சுந்தர் பிச்சை.
புன்னகைக்கும் பணம்!
புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில் தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்? காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே. இந்த வரிகள், செல்வந்தர் பட்டினத்தாரை துறவியாக்கின.
கடன் அன்பை முறிக்குமா?
சில மாதங்களுக்கு முன் ஒரு மழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவில் நண்பருக்கு பேஸ்புக் மெசேஞ்சரில் ஒரு மெசேஜ் வருகிறது. அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட பேஸ்புக் நண்பரான முருகேசன் அனுப்பி இருக்கிறார். பேஸ்புக் மூலமாக மட்டுமே அறியப்பட்டவர் இந்த நண்பர்.
அதிரடி ஷெபாலி!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திர வீராங்கனையான ஷெபாலி வர்மா இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு அரை சதங்களை விளாசி ஆட்ட நாயகி ஆகியுள்ளார்.
பெறாத பிள்ளை!
எழுபது காலங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி வகுப்புகளில், பெண்கள் பயில்வதென்பதும், குறிஞ்சிப்பூ மலர்வதென்பதும் ஒன்றுதான். எங்களது வகுப்பறையும் அப்படித்தான். எங்கள் வகுப்பில் பயின்ற மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே பெண்கள்! நான் படித்த சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலேயே கால்நடை ஈனியல் துறையில் இப்போதுதான் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தது போலுள்ளது, ஆனால் கிட்டத்தட்ட முப்பத்து மூன்றாண்டுகள் கடந்தோடிவிட்டன.
வதந்தி எனும் அரசியல் ஆயுதம்!
காபி அருந்த எழும்பூர் அசோகா உணவகத்தில் அமர்ந்திருந்தோம். நம்முடன் இரு மூத்த பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஒருவர் அடித்துச் சொன்னார்.
ஒ... டயானா!
பிரிட்டன் முன்னாள் இளவரசி டயானாவைப் பற்றி அவர் இறந்து 23 ஆண்டுகள் ஆகியும் செய்திகளுக்குக் குறைவில்லை. தற்போதைய செய்தி அவர் 1995இல் பிபிசிக்கு கொடுத்த நேர்காணலின் பின்னணி பற்றியது.
பன்றிக்கு நன்றி சொல்லி!
"சா.... சாப்பிடுறீங்களா?" கேட்ட மங்கள் பிரசாத்துக்கு முப்பது வயது இருக்கலாம். வயது தெரியவில்லை. குளிருக்கு கிழிந்த அழுக்கான ஸ்வெட்டர் அணிந்திருந்தான். பேண்டில் பல இடங்களில் கிழிசல். ஊசி நூல் கொண்டு தைத்ததன் தடம் தெரிந்தது. காலில் நைந்து போயிருந்த செருப்பு.
கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்!
பலர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அவரைச் சொல்லுவார்கள். இன்னும் பேராசிரிய பெருமக்கள் சிலர் 'வட்டார வழக்கு படைப்பாளி' என்று சொல்லுவார்கள். அவரை ஒரு கட்டுக்குள், ஒரு சிமிழுக்குள் ஏன் அடைக்கவேண்டும்? நீண்ட காலமாக என் மனதுக்குள் இது பற்றிய எண்ணம் உண்டு.
கிசுகிசுவின் உளவியல்
மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே அவன் புரளி பேச ஆரம்பித்து இருப்பான். பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் வருடங்களாக மனிதன் செய்து கொண்டிருப்பதுதான். இதை எதற்காகச் செய்கிறான்? இதன் பின்னால் என்ன உளவியல் இருக்கிறது?
நான் கல்யாணம் செய்து கொண்டதே மொய்ப்பணத்தை வைத்து சங்கத்துக்கு உறுப்பினர் தொகை கட்டத்தான்!
கலை இயக்குநர் ராமலிங்கம்
நான்கு மலையாளப்படமும் ‘நச்'சென்ற நவம்பர் ஸ்டோரியும்
இந்த மாதம் தியேட்டர்கள் இல்லாததால் Act" சில மலையாளப் படங்கள் பார்த்தேன். அவற்றின் அப்டேட்ஸ் இங்கே.
இலக்கிய உலகில் ததும்பும் கதை!
உலகம் கதைகளால் ஆனது என்ற வரையறையைப் போலவே தீவிரமான சிறுபத்திரிகை உலகமும் கதைகளாலும் கிசுகிசுக்களாலும் புறணிகளாலும் நிரம்பியது தான்.
சரியும் சீட்டுக்கட்டுகளா சிறுகட்சிகள்?
உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழி நடத்தலும்தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது!
கொள்ளை நோயின் மறுபக்கம்!
தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜாக்கி ஆக்மார்ட் என்பவர், உலகமறிந்த சமூக செயற்பாட்டாளர். 1997 இல் அவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு மொழி ஒரு சவாலாக இருக்கவே இல்லை!
இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டு விழாவை தான் உயிரோடு இருக்கையிலேயே சந்திக்க இருந்தார். கி.ராஜநாராயணன். அதற்குள் இயற்கை அவரைக் கடத்திக் கொண்டது.
மக்களின் தீர்ப்பில் மலர்ந்த சூரியன்
தனது மாநிலத்திற்கு வெளியே படித்து, பிடித்தமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தார், அந்த இளைஞர். அரசியலுக்கும் அவருக்கு பெரிதாக சம்பந்தம் கிடையாது. அவரது அப்பா அரசியல்வாதி, முதல்வராக இருந்திருக்கிறார். இரண்டு முறை மத்திய அமைச்ச ராக இருந்திருக்கிறார்.
பெரியாரிய தொகுப்பாளர்!
தொண்ணூற்று ஆறு ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த ஆனைமுத்து தன் இயக்கத்தை சமீபத்தில் நிறுத்திக் கொண்டார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இயக்கப்பணிகளில் நெருங்கிப் பழகிய என்னைப் போன்றோருக்கு அது சொல்லொணா இழப்பு.
எகிறிக்குதித்த எருமை மாடு!
நான் பணிபுரிந்த கால்நடை மருத்துவமனை முன்பாக வண்டியை நிறுத்தினேன். அது காலை நேரம். உள்ளே போவதற்கு முன்பாக முகமெல்லாம் கவலையுடன் நின்றிருந்த அந்த பெரியமனிதரைப் பார்த்தேன். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான். பக்கத்துக் கிராமத்தில் பெரிய தலைக்கட்டு.
ஏன் பிகே..? ஏன்?
பெரும்பாலும் வெற்று சவடால் விடமாட்டார் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 'குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பாஜக இரட்டை இலக்கத்தை மேற்குவங்கத்தில் தாண்டாது' என ட்வீட் செய்தார்.
இப்படிப் பண்றீங்களேம்மா! ராமரின் கதை
"என்னுடைய தாத்தா பெரிய கரகாட்ட கலைஞர், என்னுடைய அம்மா மிமிக்ரி ஆர்டிஸ்ட். மாலை நேரம் ஆனாலே அம்மாவுடைய மிமிக்ரியை கேட்க ஊர் சனமே வீட்டுக்கு வந்திடுவாங்க...
ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியல் ரீதியான திட்டமே தேவை!
இதுவரைக்கும் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் நீர்வளம் பற்றி முக்கியத்துவம் அளித்து குறிப்பிட்டதில்லை. இந்த முறை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடும் அளவுக்கு தண்ணீர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விவசாயிக்கும் நுகர்வோருக்கும் லாபம்!
இரண்டு இலட்சம் கோடியளவிற்குப் பொதுமக்கள் பணம் புழங்கும் ஒரு துறை கூட்டுறவுத்துறை. இதற்கு இலஞ்சம் வாங்காத அமைச்சரும் செயலாளரும் பதிவாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பது மிகமுக்கியமாகச் செய்யவேண்டிய ஒன்று.
வலியில் பிறந்த கதை!
திரையிடப்பட்ட விழாக்களில் விருதுகள், பாசிட்டிவான விமர்சனங்கள் என பல பாராட்டுகளைப் பெற்றுவருகிறது தேன் திரைப்படம். இதன் இயக்குநர் கணேஷ் விநாயகத்துக்கு இது நான்காவது படம். ஆரம்பத்தில் எடுத்த வணிக ரீதியான திரைப்படங்களுக்குப் பின் தேன் போன்ற ஆழமான படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கும் இவரிடம் பேசினோம்.
மாபியா ராணி!
மும்பையின் காமாட்டிபுரா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் அமரவைக்கப்பட் டுள்ளார் மது என்ற பதினாறு வயது இளம்பெண்.