கன்டெய்னரில் குங்குமப்பூ விவசாயம்!
Kungumam|13-10-2023
உலகிலேயே விலைஉயர்ந்த நறுமணப்பொருள், குங்குமப்பூ. அமெரிக்காவில் ஒரு கிலோ குங்குமப்பூ ஐந்து லட்ச ரூபாய் வரை விலைபோகிறது.
த.சக்திவேல்
கன்டெய்னரில் குங்குமப்பூ விவசாயம்!

சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் குங்குமப்பூவின் பிறப்பிடம் ஈரான் என்று நம்பப்படுகிறது. இன்றும் உலகில் உற்பத்தியாகும் குங்குமப்பூவில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்வது ஈரான்தான். இந்தியாவில் காஷ்மீரில் அதிகமாக குங்குமப்பூ விளைகிறது. இமாச்சலப் பிரதேசத்திலும் குங்குமப்பூ விவசாயம் ஜோராக நடக்கிறது.

இந்நிலையில் புனேவிலும் குங்குமப்பூவை விளைவிக்க முடியும் என்று கெத்து காட்டுகிறார் சைலேஷ் மோடக். அதுவும் சரக்குகளை அனுப்ப பயன்படுத்தப்படும் கன்டெய்னரில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் குங்குமப்பூவை விளைவிக்கிறார் இந்த விவசாயி. 

பணம் அச்சடிக்கும் நகரமான நாசிக்கில் வசித்துவந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், சைலேஷ். ‘‘நல்லா படிச்சாதான் நிலையான வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிக்க முடியும்...’’ என்று பெற்றோர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்ந்த சைலேஷ், தான் 13 வருடங்களாக பார்த்து வந்த நல்ல வேலையை உதறிவிட்டு விவசாயியாக மாறியிருக்கிறார்.

புனே பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றவுடனே சைலேஷிற்கு ஈசிஎஸ் எனும் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை கிடைத்துவிட்டது. வேலை நிமித்தமாக கம்போடியா, மலேசியா, உகாண்டா உள்ளிட்ட நிறைய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். 

இருந்தாலும் வேலையின் மீது முழு ஈடுபாட்டுடன் அவரால் இயங்க முடியவில்லை. அடுத்த சில வருடங்களில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் ஐம்பது பேரை வழிநடத்தும் குழுத் தலைவர் வேலை கிடைத்தது. சைலேஷின் வேலைத் திறனைப் பார்த்து பதவி உயர்வுகளும் தேடிவந்தன. ஆனால், காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்று, 5 மணிக்கு வீடு திரும்பும் சுழற்சி அவருக்கு ஒருவித அலுப்பைக் கொடுத்தது.

பதிமூன்று வருடங்களாக பார்த்து வந்த வேலையை விடுவதாக முடிவு எடுத்தார் சைலேஷ். அவரது மனைவியைத் தவிர வீட்டிலிருந்த யாரும் சைலேஷின் முடிவுக்கு ஆதரவளிக்கவில்லை.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView all
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
Kungumam

சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்

‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.

time-read
2 mins  |
22-11-2024
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
Kungumam

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!

time-read
2 mins  |
22-11-2024
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
Kungumam

அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.

time-read
1 min  |
22-11-2024
கோலம்
Kungumam

கோலம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.

time-read
1 min  |
22-11-2024
தேவரா பாகம் ஒன்று
Kungumam

தேவரா பாகம் ஒன்று

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

time-read
1 min  |
22-11-2024
யோலோ
Kungumam

யோலோ

உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.

time-read
1 min  |
22-11-2024
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
Kungumam

திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்

‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும்  மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.

time-read
2 mins  |
22-11-2024
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
Kungumam

ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.

time-read
2 mins  |
22-11-2024
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
Kungumam

இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.

time-read
2 mins  |
22-11-2024
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
Kungumam

மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..

‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

time-read
2 mins  |
22-11-2024