இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வார்த்தைகள் இவை. ஏஜென்ட் டீனா, எலிசா தாஸ்... என சமீபத்திய பெண் ஆக்ஷன் அதிரடி கேரக்டர்கள் அதிகம் பேசப்படுவதும், டிரெண்டாவதும் அதிகரித்து வருகின்றன.
ஆனால், இந்த டிரெண்ட் இங்கே துவங்கியதல்ல. விஜயசாந்தி, ஜோதிகா... என இந்த கலக்கல் கதாநாயகி ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இணையம் இல்லாத காலத்திலேயே பிரபலம்.
அப்படி நாயகிகள், நடிகைகளின் ஆக்ஷன் காட்சிகள் தமிழ் சினிமாவில் எங்கு துவங்கி, எப்படி உருமாறின? ஒரு விளக்கமான அலசலைப் பார்ப்போமா?
இதற்கு முதல் விதை போட்டவர்கள் சி.ஐ.டி. சகுந்தலா மற்றும் விஜயலலிதா இருவர்தான். இவர்கள் இருவருமே வில்லன் கூட்டத்தில் ஒரு கிளாமர் மங்கை. அவர்கள் கேட்கும்போது நடனம் ஆடும் பாணியில்தான் பல படங்களில் பயணித்தார்கள்.
ஆனால், இவர்களை வேறு ஒரு கோணத்தில் தைரியமான பெண்களாகவும், ஆக்ஷன் அதிரடி கெட்டப்பிலும் பார்த்தவர் ஜெய்சங்கர்.
அவரின் ‘சிஐடி சங்கர்’ (1970) படத்தின் மூலம் சகுந்தலா ஸ்பை கதாநாயகியாக ஜெய்சங்கருக்கு உதவுவதுடன் சண்டையிலும் மாஸ் காட்டியிருப்பார். இதனால்தான் இவரின் சகுந்தலா பெயருக்கு முன்னால் சிஐடி சேர்ந்துகொண்டது.
அதேபோல் ‘தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஜெய் சங்கருடன் விஜயலலிதா அதிகம் நடித்தது மட்டுமின்றி பழிவாங்கும் வில்லி, வில்லனுடன் இணைந்து பயங்கரமான திட்டங்கள் தீட்டுவது... என தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்தார். இதனால் ரசிகர்கள் விஜயலலிதாவை ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ எனச் செல்லமாக அழைத்தனர்.
‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ (1968), ‘நூற்றுக்கு நூறு’ (1971), ‘வல்லவன் ஒருவன்’ (1966) என இவரின் ஆக்ஷன் லிஸ்ட் படங்கள் ஏராளம். இவர்கள் மட்டுமின்றி வாள் சண்டையிட்ட ஜெயலலிதா,
சாவித்திரி உள்ளிட்டோரும் இதில் அடக்கம்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.