CATEGORIES
Categories
தலவாக்கலை மாணவர்கள் நால்வரும் காலியில் மீட்பு
தலவாக்கலை கிரேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இருந்து ஜூலை 14 ஆம் திகதி முதல் காணாமல் போன பாடசாலை மாணவிகள் மூவரும் மாணவனும் 22 நாட்களுக்கு பின்னர், காலி பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி அமைப்பாளர் துரை மதியுகராஜா
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளர் துரை மதியுகராஜா,ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மரமமான முறையில் யாழில் சிசு மரணம்
அடம்பிடித்ததால் திருகியதாக அம்மா தெரிவிப்பு
“இறந்தகாலத்திடம் இருள்: வளமான விடியல் வரும்”
இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
"மொட்டை பிளக்கவில்லை”
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்
அம்பாறை துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி
அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வயநாட்டுக்கு பெரும் தொகையை நிதியாக வழங்கிய சூர்யா குடும்பம்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 270க்கும் மேற்பட்ட மக்கள் பலியான நிலையில், அங்கு நிவாரண பணிகளை AU LAU மேற்கொள்ள சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் உதவி உள்ளனர்.
இராதா எம்.பியின் பிறந்த நாள் பரிசு
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது 72 வது பிறந்த நாளை புதன்கிழமை (01) தனது இல்லத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடினார்.
மஹ்மூத் மாணவிகள் கௌரவிப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஜூலை (27 (28) (29) நடைபெற்றது.
இலங்கை எதிர் இந்தியா: இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் தொடர்
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் சர்ச்சை பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க உள்ள கமலா ஹாரிஸ் இந்தியரா,கறுப்பரா என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹனியே படுகொலைக்கு பழி தீர்க்கப் போகும் ஈரான்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிக்கு பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரானும் லொக்கு பட்டியும் கைது
'கிளப் வசந்த' என்று அழைக்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா கொலைக்கு மூளையாக செயற்பட்டனர் என கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான், பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“இனவாதத்தை எதிர்க்கும் வேட்பாளருக்கே வாக்கு”
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் நபரே ஜனாதிபதியாக வர வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்தார் குகதாசன் எம்.பி
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, புதன்கிழமை (31) சந்தித்து கலந்துரையாடினார்.
“எஞ்சிய மொட்டுக்கள் ரணிலிடம் வரும்”
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் எஞ்சியிருக்கும் சிலரில் இருந்து நாட்டை நேசிக்கும் மற்றொரு குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, அடுத்த சில நாட்களில் ஆதரவை தெரிவிப்பார்கள் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை தாக்குதலில் விசைப்படகு மூழ்கி மீனவர் உயிரிழப்பு
ராமேசுவரத்தில் உறவினர்கள் மறியல்
வாள்வெட்டில் துண்டான கையை விட்டுவிட்டு ஓட்டம்
மாரவில, பஹல வலஹாபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.
பணவீக்கம் உயர்ந்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
"தான் குற்றமற்றவர்”
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை வேட்பாளர்களிடையே "50% கஷ்டம்”
போரின் காரணமாக தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இவை எல்லாம் மக்களுக்கு தெரியும் ரணிலுக்கு 92 பேர் ஆதரவு என்றால் மற்றையவர்கள் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என நம்புகின்றேன்
விருந்து கொடுத்ததால் இளம்பெண் வன்புணர்வு
ஹைதராபாத்தில், 24 வயதான பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்ததற்காக தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்த போது அவரின் பால்ய நண்பனாலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை 14 ஆவது மாடியிலிருந்து குதிக்க வைத்த இணைய விளையாட்டு
இணையவழி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் அந்த விளையாட்டின் டாஸ்கை செய்து முடிப்பதற்காக தனது வீட்டின் 14ஆம் தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலை
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
இந்தியாவுக்கெதிரான தொடரில் இலங்கைக் குழாமில் |நிஷான் மதுஷ்க
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டுள்ள 24 வயதான மதுஷ்க, ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
பரிஸ் 2024: ஐ. அமெரிக்காவுக்கு : தங்கம் வென்று கொடுத்த பைல்ஸ்
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் உளப் பிரச்சினைகள் காரணமாக 2020டோக்கியோ ஒலிம்பிக்கில் விலகியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோனே பைல்ஸ், தனது அபார திறமை மூலம் பரிஸ் 2024ஆம் ஆண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க அணிக்கு முதலாவது தங்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
இலங்கையை வெள்ளையடித்த இந்தியர்
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை இந்தியா வெள்ளையடித்தது.
“இணையத்தளம் ஊடாக வியாபார பதிவு”
இணையத்தள மூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களில் : 30 பேர் விடுதலை
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 23 பேர், செவ்வாய்க்கிழமை(30) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
"சாதகமான எதிர்காலத்துக்கு சக்திகளை ஒன்று திரட்டினோம்”
சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.