CATEGORIES
Categories
பெய்ரூட்டில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அறுவர் மரணம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய வட்டாரத்தில் வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேல் குண்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தியது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அரசாங்கத்தை ஊழலற்றதாய் வைத்திருப்பது அவசியம்: ஈஸ்வரன் குறித்து பிரதமர் வோங்
சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பும் அரசியலும் எப்போதும் ஊழல் ரற்றதாக இருக்க வேண்டும்.
ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 3), 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மா அன்பழகனுக்கு இளங்கோவடிகள் விருது
தினராக் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நடத்தும் காப்பிய விழா ஒன்பதாம் ஆண்டாக செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி காலை நடைபெற்றது.
லடாக்கில் முழு அடைப்புப் போராட்டம் ம
லடாக்கின் நாடாளு மன்ற உறுப்பினர் முகம்மது ஹனிஃபா டெல்லி காவல்துறை யினரால் அக்டோபர் 1ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
'கொள்ளைக் கும்பலை பிடித்தது காவல்துறைக்குப் பெருமை'
வங்கி ஏடிஎம் கொள்ளைக் கும்பலைப் பிடித்த இச்சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு பெருமைமிக்கதாக அமைந்துள்ளது என்றார் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால்.
'தமிழ் வேண்டாம், இந்தியில் பேசுங்கள்': கடுப்பான மீனா
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.
எனது நெடுநாள் கனவு நிறைவேறியது: அபிராமி
ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேட்டையன்' படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
21 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
சிங்கப்பூர்ப் நாணய மாற்று வர்த்தகச் சங்கம் தனது 21ஆம் ஆண்டு நிறைவை, இரவு உணவு விருந்துடன் கொண்டாடியது.
பேருந்து ஓட்டுநர் கைது
தாய்லாந்து பள்ளிப் பேருந்தில் தீப்பிடித்து 23 பேர் மரணம்
காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளன்று (அக்டோபர் 2 புதன்கிழமை) இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.
காவலர்கள் அதிரடிச் சோதனை; கோவை ஈஷா மையம் விளக்கம்
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 150க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை அன்று சோதனை நடத்தினர்.
மெர்ச்சன்ட் ரோட்டில் நடைபாதை வசதி
ஃபோர்ட் கேனிங் பார்க், பெர்ல்ஸ் ஹில் சிட்டி பார்க் ஆகியவற்றுக்கிடையே தொடர்ச்சியான நடைபாதையை உருவாக்க, ரிவர்சைடு பாயின்ட், மேகசின் ரோட்டுக்கு அருகில் உள்ள மெர்ச்சன்ட் ரோட்டின் ஒரு பகுதி விரைவில் நடையர்களின் பயன்பாட்டிற்காக மாற்றப்படும்.
மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நன்கொடை அமைப்புகளுக்கு உதவி
கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற செயல்களுக்காக நன்கொடை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க உதவ புதிய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
'மோதலைக் கைவிடுக’: உலக நாடுகள் வலியுறுத்து
இஸ்ரேல் மீது ஈரான் தாக்கத் தொடங்கியதும், மோதலைக் கைவிட வேண்டும் என அந்த இரு நாடுகளையும் உலகத் தலைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; இருநாடுகளும் மாறி மாறி மிரட்டல்
இஸ்ரேலை நோக்கி ஈரான் 180க்கும் மேற்பட்ட ‘பேலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு-மேற்கு ரயில் தடத்தில் இரவுதோறும் சோதனை
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே மாற்றப்பட்டுள்ள தண்டவாளப் பகுதிகளைச் சோதிக்கும் பணி ஒவ்வோர் இரவும் இடம்பெறுவதாக எஸ்எம்ஆர்டி மூத்த பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவினம்: சிங்கப்பூரர்களுக்கு உதவி
தற்போதைய வாழ்க்கைச் செலவினம் பெருங்கவலையாக உள்ளது என்றும் இதன் தொடர்பில் சிங்கப்பூரர்களுக்கு உதவ அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
‘வலுவான பெண்ணாக வலம்வர விரும்புகிறேன்’
முன்பெல்லாம், திரையுலகில் நாயகியாக அறிமுகமாக விரும்புவோர், அதற்கு முன்பு தங்களுடைய முகம் ஊடகங்களில் வெளியே செல்லக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
மூத்தோர் தின சிறப்புப் புகைப்படக் கண்காட்சி
அனைத்துலக மூத்தோர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஊக்குவிக்கும் மூத்தோரை சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளது.
ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா பொறுப்பேற்றார்; அமைச்சரவை அறிவிப்பு
ஜப்பான் நாட்டின் பிரதமராக 67 வயது ஷிகெரு இஷிபா (படம்) செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) பொறுப்பேற்றார்.
மேகக் கணினிக் கொள்கையை அறிமுகம் செய்யும் மலேசியா
மலேசியா கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவு நன்னெறிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, தேசிய மேகக் கணினிக் கொள்கையை உருவாக்கவும் ஒழுங்கு முறைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
'காங்கிரஸ் வென்றால் ஏழைகள் பாதுகாக்கப்படுவர்'
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான காப்பீடு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
மீண்டும் மருத்துவர்கள் போராட்டம்
பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) காலை முதல் மீண்டும் 'முழு பணிப் புறக்கணிப்பு' போராட்டத்தை தொடர்ந்தனர்.
மருத்துவமனையில் ரஜினி: காரணம் தெரியாமல் ரசிகர்கள் கவலை
நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் இடையே கவலை நிலவிவருவதால் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையவழி மிரட்டல் மூலம் ரூ.1,100 கோடி மோசடி
இணையவழி மிரட்டல் மூலம் தமிழகத்தில் ரூ.1,100 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆர்ச்சர்ட் ரோடு சண்டையில் கடைசி குற்றவாளிக்குச் சிறை, அபராதம்
ஆர்ச்சர்ட் ரோட்டில் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த கைகலப்பில் ஆகக் கடைசிக் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2.5 விழுக்காடு ஏற்றம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2.5 விழுக்காடு ஏற்றம் கண்டது.
லீ சியன் யாங் $600,000 இழப்பீடு
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பற்றி சமூக ஊடகம் வாயிலாக அவதூறு பரப்பியதற்காக திரு லீ சியன் யாங் இழப்பீட்டாக $600,000க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.
சீரான நிலையில் போக்குவரத்து
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதித் திட்டம் (விஇபி) அக்டோபர் 1ஆம் தேதியன்று தொடங்கியது.